Published:Updated:

மிஸ்டர் ஐ.க்யூ!

மிஸ்டர் ஐ.க்யூ!

மிஸ்டர் ஐ.க்யூ!

மிஸ்டர் ஐ.க்யூ!

Published:Updated:

16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் ஐ.க்யூ!
கி.கார்த்திகேயன்
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!

மீபத்தில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் 'ஜெனரல் ஸ்டடீஸ்' தேர்வுகளில் கேட்கப்பட்ட பொது அறிவுக் கேள்விகளில் இருந்து கொஞ்சம் இங்கே. ஐ.ஏ.எஸ்; ஐ.பி.எஸ்., என நாட்டின் மதிப்பான பதவிகளுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி மிக அடிப்படையான பொது அறிவுத் தகவல்கள்தான். முயற்சித்துப்பாருங்களேன்!

1. மைக்ரோவேவ் ஓவனுக்குள் ஓர் உருளைக் கிழங்கினைச் சுத்தமான வெள்ளைத் தாளில் வைத்துச் சூடாக்குகிறார்கள். ஓர் எழுத்துகூட அச்சிடப்படாத சுத்தமான வெள்ளைத் தாள் அது. சிறிது நேரம் கழித்து அந்த உருளைக்கிழங்கு சூடாகும். ஆனால், அந்தத் தாள் சூடாகவோ, எரியவோ செய்யாது. இது ஏன்?

அ. உருளைக்கிழங்கின் மூலப் பொருள் பெரும்பாலும் ஸ்டார்ச். ஆனால்,

வெள்ளைத் தாள் செல்லுலோஸ் என்ற பொருளால் ஆனது.
ஆ. உருளைக்கிழங்கு மைக்ரோவேவ் அலைகளைத் தனக்குள் கடத்தும். வெள்ளைத் தாள் அதனைப் பிரதிபலிக்கும்.
இ. உருளைக்கிழங்கில் நீர்ச் சத்து இருக்கும். தாளில் அது இருக்காது.
ஈ. உருளைக்கிழங்கில் உயிர்ச் சத்துக்கள் நிரம்பியிருக்கும். வெள்ளைத் தாள் என்பது இறந்த சக்கைகளால் ஆனது.

2. ஒரு க்யூப்பின் ஆறு பக்கங்களிலும் வெவ்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு இருக்கின்றன. சிவப்பு நிறத்துக்கு எதிர்ப் பக்கம்தான் கறுப்பு. நீல வண்ணத்துக்கு அருகில் வெள்ளை. பிரவுன் நிறத்துக்கு அடுத்ததாக நீல வண்ணம். சிவப்பு நிறப் பக்கம் தரையில் பதிந்திருக்கிறது. இப்போது பிரவுன் நிறத்துக்கு எதிர்ப் பக்கமாக என்ன நிறம் இருக்கும்?

அ. சிவப்பு
ஆ. கறுப்பு
இ. வெள்ளை
ஈ. நீலம்

3. அந்தப் போட்டித் தொடரில் 14 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்றில் அனைத்து அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து ஒரே ஒரு முறை மட்டும் மோத வேண்டும். அப்படியானால் லீக் சுற்றில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடக்கும்?

அ. 105
ஆ. 91
இ. 85
ஈ. 78

4. காபி, டீ இரண்டும் மலைச் சரிவுகளில்தான் பயிரிடப்படுகின்றன. ஆனாலும், அவற்றின் சாகுபடி முறையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. இதன் அடிப்படையில் பின் வரும் செய்திகளைப் படியுங்கள்...

1) டிராபிக்கல் பகுதிகளில் மட்டும் கொஞ்சம் வெப்பம் கலந்த பருவம் காபி பயிரிட அவசியம். ஆனால், டிராபிக்கல் மற்றும் சப்-டிராபிக்கல் ஆகிய இரண்டு பகுதிகளிலும் டீ பயிரிடலாம்.
2) விதைகளின் வளர்ச்சிதான் காபி பயிர். அதே செடியின் தண்டுப் பகுதிதான் டீ பயிரின் வளர்ச்சி.
மேற்கண்ட எந்த செய்தி/கள் சரி?

அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
ஈ) 1 மற்றும் 2 ஆகிய இரண்டும் இல்லை

5. இரண்டு ரயில்கள் புது டெல்லியில் இருந்து ஒரே நேரத்தில் கிளம்புகின்றன. ஒரு ரயில் வடக்கு நோக்கி மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. மற்றொரு ரயில் தெற்கு நோக்கி மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. எத்தனை மணி நேரங்களுக்குப் பிறகு இரண்டு ரயில்களும் 150 கி.மீ தொலைவுகளுக்கு அப்பால் இருக்கும்?

அ. 3/2
ஆ. 4/3
இ. 3/4
ஈ. 15/2

6. ஆறு புத்தகங்கள் A,B,C,D,E மற்றும் F அருகருகில் வைக்கப்பட்டு இருக்கின்றன. B,C மற்றும் E புத்தகங்கள் நீல வண்ண அட்டைகொண்டவை. மற்றவற்றுக்கு சிவப்பு அட்டை. D மற்றும் F மட்டுமே புதிய புத்தகங்கள். மற்ற அனைத்தும் பழையவை. A,C மற்றும் D ஆகியவை சட்டப் புத்தகங்கள். ஏனைய அனைத்தும் கெசட் அறிக்கைகள். இந்த ஆறு புத்தகங்களில் எந்தப் புத்தகம் சிவப்பு அட்டைகொண்ட புதிய சட்டப் புத்தகம்?

அ. A
ஆ. B
இ. C
ஈ. D

7. மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அந்த ரயில், ஒன்றரை கிலோ மீட்டர் நீள குகைப் பாதையை இரண்டு நிமிடங்களில் கடக்கிறது. அந்த ரயிலின் நீளம் என்ன?

அ. 250 மீட்டர்
ஆ. 500 மீட்டர்
இ. 1,000 மீட்டர்
ஈ. 1,500 மீட்டர்

8. ஒருவன் 50 கிலோ மீட்டர் தூரத்தை எட்டு மணி நேரங்களில் கடக்கிறான். அவன் அந்தத் தூரத்தில் சில கிலோ மீட்டர்களை மணிக்கு நாலு கிலோ மீட்டர் வேகத்தில் நடந்தும், மீதி தூரத்தை மணிக்குப் பத்து கிலோ மீட்டர் வேகத்தில் சைக்கிளில் பயணித்தும் கடக்கிறான். அவன் எவ்வளவு தூரத்தைக் நடந்து கடந்திருப்பான்?

அ. 10 கி.மீ
ஆ. 20 கி.மீ
இ. 30 கி.மீ
ஈ. 40 கி.மீ

9. பின் வரும் செய்திகளைப் படியுங்கள்.

1) பூமி எனும் கிரகத்தில், மக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கும் நல்ல தண்ணீர், கிரகம் முழுக்கவுள்ள நல்ல தண்ணீரில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானதே!
2) பூமி முழுக்கக் கிடைக்கும் நல்ல தண்ணீரில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் துருவப் பகுதிகளில் உள்ள பனிச் சிகரங்களில் உறைந்திருக்கிறது! மேற்கண்ட செய்திகளில் எவையெவை உண்மை?

அ. 1 மட்டும்
ஆ. 2 மட்டும்
இ.1 மற்றும் 2 ஆகிய
இரண்டும்
ஈ. 1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
இல்லை

10. பாம்புகளில் ராஜநாகம் (கிங் கோப்ரா) மட்டுமே தனக்கெனச் சொந்தமாகக் கூடு கட்டிக்கொள்ளும். ஏன் அது அவ்வாறு செய்கிறது?

அ. அந்தக் கூடு பிற பாம்புகளை ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டு வரும் பாம்புகளை ராஜநாகம் தின்றுவிடும்.
ஆ. தனது குட்டிகளைப் பராமரித்து வளர்க்க அந்தக் கூட்டினைப் பயன்படுத்தும்.
இ. தான் இடும் முட்டைகளை அடைகாக்கவும், அவை பொறியும் வரை பாதுகாக்கவும் அந்தக் கூட்டினைப் பயன்படுத்தும்.
ஈ. ராஜநாகம் மிகப் பெரிய குளிர் ரத்தப் பிராணி. அதனால் குளிர் காலங்களில் நீண்ட நாட்கள் தூங்க, அந்தக் கூட்டினைப் பயன்படுத்தும்.

11. இமயமலைத் தொடர்கள் இல்லாவிட்டால், புவியியல்ரீதியாக இந்தியாவில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்?

1) சைபீரியாவின் மிகக் குளிர்ந்த காற்று வட இந்தியப் பகுதிகளைத் தாக்கும்.
2) கங்கைப் படுகை முழுக்க நல்ல வளம் நிறைந்த மண் இருந்திருக்காது.
3) நாடு முழுமைக்குமான மழைப் பொழிவு தற்போதைய வடிவத்தில் இருக்காது.

மேற்கண்ட தகவல்களில் எவையெவை உண்மை?
அ. 1 மட்டும்
ஆ. 1 மற்றும் 3 மட்டும்
இ. 2 மற்றும் 3 மட்டும்
ஈ. 1, 2 மற்றும் 3

விடைக்கு இங்கே க்ளிக் செய்யவும்.....

மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism