Published:Updated:

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

Published:Updated:

16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கேரியர் கைடன்ஸ்!
ம.கா.செந்தில்குமார்
கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!


எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் எல்லைப் பாதுகாப்புப் படையில் ஸ்டாஃப் நர்ஸ், உதவி ஆய்வாளர், துணை உதவி ஆய்வாளர் (ஃபார்மசிஸ்ட்) உட்பட பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 12-ம் வகுப்பில் தேர்ச்சிபெற்று, பிறகு மூன்று ஆண்டுகள் நர்ஸிங் பாடத்தில் டிப்ளமோ முடித்து, தேசிய (அ) மாநில நர்ஸ் கவுன்சிலில் பதிவுசெய்து இருப்பவர்கள் நர்ஸிங் பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஃபார்மஸி பாடத்தில் டிப்ளமோ முடித்து இருப்பவர்கள் துணை உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக் கலாம். 21.6.10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு new.bsf.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

சிக்ரியில் ஆராய்ச்சியாளர் பணி

காரைக்குடியில் இயங்கி வரும் மத்திய எலெக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் பி.இ., (அ) பி.டெக்., முடித்து 28 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வேதியியல் (அ)மெட்டீ ரியல் சயின்ஸ் பாடத்தில் முதல் வகுப்பில் எம்.எஸ்ஸி., முடித்து 25 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள், ஆராய்ச்சி உதவி யாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இம்மாதம் 22.6.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு new.cecri.res.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்திய அணுசக்தித் துறையில் செக்யூரிட்டி

இந்திய அணு சக்தித் துறையின் ஒரு பகுதியான கன்ஸ்ட்ரக்ஷன், சர்வீசஸ் மற்றும் எஸ்டேட் மேனேஜ்மென்ட் பிரிவில் காலியாக உள்ள செக்யூரிட்டி பணிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம். 10-ம் வகுப்பு (அ) அதற்குச் சமமான கல்வித் தகுதியைப் பெற்ற 18 முதல் 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி யானவர்கள். விண்ணப்பங்களை 1.7.10-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு new.dcsem.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

ஓ.என்.ஜி.சி-யில் இன்ஜினீயர் வேலை

பொதுத் துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான சுத்தி கரிப்பு ஆலை ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ளது. இங்கு புரொடக்ஷன், பவர் மற்றும் யூட்டிலைட்ஸ், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் மெயின்டனன்ஸ் ஆகிய பிரிவுகளில் ஜூனியர் இன்ஜி னீயர் அசிஸ்டென்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. அறிவியல் பாடம் ஒன்றில் இள நிலைப் பட்டம் பெற்றவர்களோ (அ) எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ முடித்தவர்களோ, இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்பக் கடைசித் தேதி 14.6.10. விரிவான விவரங் களுக்கு new.iocl.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

இந்தியக் கடற்படையில் பயிற்சியுடன் பணி

இந்தியக் கடற்படையில், ப்ளஸ் டூ முடித்தவர்களுக்கு பி.டெக்., பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருமணம் ஆகாத இந்திய ஆண்கள் இந்தப் பயிற்சி ப்ளஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 75 சதவிகித மதிப்பெண்களுடன் இயற்பியல், வேதி யியல், கணிதம் பாடங்களில் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 10 (அ) 12-ம் வகுப்பில் ஆங்கிலத்திலும் கணிதத்திலும் 50 சதவிகித மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு கேரள மாநிலம் எழிமலாவில் உள்ள இந்தியக் கடற்படை மையத்தில் பி.டெக்., பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடிப்பவர்கள் எக்ஸி கியூட்டிவ் அல்லது டெக்னிக்கல் பிரிவில் பணி அமர்த்தப்படுவர். 29.6.2010-க்குள் விண்ணப் பிக்கவும். விவரங்களுக்கு new.bharti.nic.in என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

எஃப்.சி.ஐ. பணிகள்

உதவியாளர், அக்கவுன்ட்ஸ், மூவ்மென்ட், டெக்னிக்கல் பிரிவுகளில் நிர்வாகப் பயிற்சியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது, பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய உணவுக் கழகம். ஏதேனும் ஓர் அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்றிருப்பவர்கள் உதவியாளர் பணிக்கும், விவசாயப் பட்டம், சி.ஏ., எம்.பி.ஏ. உள்ளிட்ட பட்டம் பெற்றிருப்பவர்கள் நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட விவரங்களுக்கு new.fciwz.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களை 21.6.2010-க்குள் அனுப்ப வேண்டும்.

அண்ணா பல்கலைக்கழக எம்.பி.ஏ., எம்.சி.ஏ.,!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தொலைநிலைக் கல்வியில் எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., பட்டப்படிப்புக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொது, தொழில்நுட்பம், நிதி, ஹெல்த், மனிதவளம் ஆகிய பிரிவுகளில் நிர்வாகப் பாடத்தில் எம்.பி.ஏ., இரண்டு ஆண்டுகள் படிக்க ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்று வருட எம்.சி.ஏ., படிக்க, கணிதம், கம்ப்யூட்டர், புள்ளியியலில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஜூலை 25-ம் தேதி நடத்தப்படும் தொலைநிலைக் கல்வி நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இப்படிப்புகளில் சேரத் தேர்வு செய்யப் படுவார்கள். விண்ணப்பங்களை ஜூலை 2-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களுக்கு new.annauniv.edu/cde என்ற பல்கலைக்கழகத்தின் இணையத்தைப் பார்க்கவும்.

மெட்ராஸ் ஃபெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்டில் பணி!

சென்னை மணலியில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான மெட்ராஸ் ஃபெர்ட்டிலைசர்ஸ் லிமிடெட்டில் உதவித்தொகையுடன் கூடிய இரண்டு வருட தொழில்நுட்ப உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

கெமிக்கல், பெட்ரோகெமிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட் ரிக்கல் எலெக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரு மென்டேஷன் உட்பட பல்வேறு பாடங்களில் டிப்ளமோ பெற்ற 25 வயதுக்கு மிகாதவர்கள் இப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு.

முதல் ஆண்டில் மாதம் 5,000 ரூபாயும், இரண்டாம் ஆண்டு 6,000 ரூபாயும் உதவித்தொகையாக வழங்கப்படும். வெற்றிகர மாகப் பயிற்சியை முடிப்பவர்கள், அங்கேயே பணியமர்த்தப்பட உள்ளனர். 19.6.2010-க்குள்

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு new.madrasfert.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

கேரியர் கைடன்ஸ்!
கேரியர் கைடன்ஸ்!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism