Published:Updated:

மிஸ்டர் ஐ.க்யூ!

மிஸ்டர் ஐ.க்யூ!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
.
மிஸ்டர் ஐ.க்யூ!

1. எட்டு மீன்களில் நான்கு மீன்கள் கடலில் மூழ்கிவிட்டன. அப்படியெனில் எத்தனை மீன்கள் மீதம் இருக்கும்?

2. நீங்கள் நேர்க்கோட்டில் வடக்கு நோக்கி இரண்டு கிலோ மீட்டர் நடக்கிறீர்கள். திடீர் என்று உங்கள் கையில் இருக்கும் மேப்பை நீங்கள் பார்க்கும்போது உண்மையில் நீங்கள் ஒரு கிலோ மீட்டர் வடக்கிலும், ஒரு கிலோ மீட்டர் தெற்கிலும் நடந்திருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்?

3. நண்பகலிலும் நள்ளிரவிலும் மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன. இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் எத்தனை முறை மணி முள்ளும் நிமிட முள்ளும் ஒரேபுள்ளி யில் சந்திக்கும்?

4. மே 6, 1978 மற்றும் 10 ஆகஸ்ட் 2001. இந்த இரண்டுக்கும் உள்ள முக்கியத்துவம் என்ன தெரியுமா?

ந.வினோத்குமார்

5. ஒருவனுடைய சம்பளத்தில் மார்ச் மாதம் 10 சதவிகிதம் கூடுகிறது. அவன் செய்த தவறால் அடுத்த மாதம் 10 சதவிகிதம் குறைக்கப்படுகிறது. இப்போது அவன் சம்பளம்

அ. பழைய நிலையிலேயே அப்படியே இருக்கும்.

ஆ. பழைய சம்பளத்தைவிடக் குறைவாக இருக்கும்.

இ. பழைய சம்பளத்தைவிடக் கூடும்.

- சி.பி.சிவா, புளியரை.

6. ஒரு காகிதத்தின் மேல் ஐந்து ரூபாய் நாணயம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காகிதம் ஒரு டம்ளரின் மேல் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காகிதத்தையோ நாணயத்தையோ தொடாமல் அந்த நாணயத்தை டம்ளருக்குள் விழ வைக்க வேண்டும். எப்படி இதைச் செய்வீர்கள்?

- அ.தயான் ஷரீஃப், கும்பகோணம்.

7. என் அண்ணன் எனது அக்கா வைவிட இரண்டு வயது பெரியவன். எனக்கும் என் நண்பனுக்கும் ஒரே வயது. என் தம்பியைவிட அக்கா ஐந்து வயது பெரியவள். தம்பிக்கும் தங்கைக்கும் இரண்டு வருடங்கள் இடைவெளி. எனக்கும் என் தம்பிக்கும் மூன்று வயது வித்தியாசம். என் அண்ணனின் வயது 20. இப்போது சொல்லுங்கள்... என் நண்பனின் வயது என்ன?

- பி.எஸ்.ராணி, மதுரை-14.

விடைக்கு இங்கே க்ளிக் செய்யவ்யும்....

மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!