Published:Updated:

நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!

நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!
நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நலல தண்ணீரில் நீந்துங்கள்!
கி.கார்த்திகேயன்
நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!
நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!

கப்பட்ட வேலைகள் என் முன் கொட்டிக்கிடக்கின்றன. இருக்கிற கொஞ்ச நேரத்தில் இத்தனையையும் முடிப்பது சாத்தியம் இல்லை. பள்ளிக்குச் செல்ல வேண்டும், ஹோம் வொர்க் முடிக்க வேண்டும், கோச்சிங் கிளாஸ் வேறு காத்திருக்கிறது, ஃப்ரெண்ட்ஸ், பெற்றோர், பொழுதுபோக்குகள்... இவை எவற்றுக்கும் என்னால் முழுமையாக நேரம் ஒதுக்க முடிவது இல்லை!'

'நான் சரி இல்லை. அசிங்கமாக இருக்கிறேன். நான் எங்கு சென்றாலும் அங்கு என்னைக் காட்டிலும் திறமையாக, அழகாக, ஸ்மார்ட்டாக, வசதியாக யாரோ ஒருவர் இருக்கிறார்... எனக்கே என் மேல் வெறுப்பாக இருக்கிறது!'

'என் அப்பா-அம்மாதான் என் முன்னேற்றத்தைத் தடுக்கி றார்கள்... அவர்களின் இடையூறு இல்லாவிட்டால், நான் இந்நேரம் எங்கே, எப்படி இருக்க வேண்டியவன் தெரியுமா?"

ஆணோ, பெண்ணோ பதின்பருவத்தில் இந்த மனநிலைகளைக் கடந்து வரத்தான் வேண்டியிருக்கும். டீன் ஏஜ்... அலையடிக்கும் திறமையும், அலைக்கழிக்கும்

நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!

மடமையும் கைகோக்கும் பருவம். இந்தப் பருவத்தில் நிகழும் சின்னத் திசை மாற்றம்கூட துறைமுகத்தைவிட்டுக் கப்பல் கிளம்பும் முன்னரே தரைதட்ட வைத்துவிடும். ஆனால், மேற்சொன்ன அத்தனைப் பிரச்னைகளும் சூழல்களும் உண்மை. அந்த நிதர்சனத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த நிலையில் டீன் ஏஜ் நண்பர்கள் என்ன செய்ய வேண்டும்?

"சாதனை படைத்தவர்கள் தத்தமது பதின்பருவத்தில் என்ன செய்தார்களோ, அதனைச் செய்ய வேண்டும்!" என்கிறார் சீன் கொவே. 'The 7 habits of highly effective teens' என்ற புத்தகம் முழுக்கவே ஒரு டீன் கிறுக்கிய டைரிபோலத்தான் இருக்கிறது. சின்னச் சின்ன கார்ட்டூன்கள், ஆங்காங்கே தடித்த எழுத்துக்களில் சிம்பிளான வாழ்க்கைத் தத்துவங்கள், குட்டிக் குட்டி ஜோக்குகள் என எந்த வயது வாசகரையும் பதின்பருவத்தில் திளைக்கச் செய்யும் புத்தகம்!

அந்த 7 கட்டளைகள்!

1. எந்நேரமும் துடிப்புடன் இருங்கள்: உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு என்பதை உணருங்கள்.

2. முடிவை நிர்ணயித்து எந்தச் செயலிலும் இறங்குங்கள்: உங்கள் இலக்கு, லட்சியம் ஆகியவற்றில் தெளிவாக இருங்கள்.

3. முதலில் வந்ததற்கு முதலிடம்: வேலைகளை வரிசைப்படுத்துங்கள். மிக முக்கியக் கவனம் தேவைப்படுபவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

4. ஜெயம் நிச்சயம்: எப்போதும் எங்கேயும் ஜெயம் நிச்சயம்தான்.

5. புரிந்துகொள், புரிய வை: மற்றவர்களுக்குக் காது கொடுங்கள். பிறர் கவனத்தைக் கவருங்கள்.

6. இணைந்து இயங்குங்கள்: அணியாகச் செயல்பட்டு அங்கீகாரம் பெறுங்கள்.

7. கூர் தீட்டிக்கொண்டே இருங்கள்: உங்களைப் புதுப்பித்துக்கொண்டே இருங்கள்.

இவற்றில் ஒன்று முதல் மூன்று வரையிலான பழக் கங்களைக் கைக்கொள்வது உங்களது தனிப்பட்ட வெற்றியாகும். நான்கு முதல் ஆறு வரையிலான பழக்கங்களைச் சாத்தியப்படுத்துவது பொது நலன் சார்ந்த வெற்றி. இறுதியான ஏழாவது பழக்கம் இந்த இரண்டு வெற்றிகளையும் தக்கவைத்துக்கொள்ளத் தேவைப்படும் ஆயுதம்!

அந்த இரு நதிகள்!

நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!

அந்த நாட்டில் இரண்டு கடல்கள் இருக்கின்றன. வடக்கில் அமைந்திருக்கும் கடலில் ஜோர்டான் நதி கலக்கிறது. கடலாக இருந்தாலும் நல்ல தண்ணீரால் நிரம்பியிருக்கிறது அந்தக் கடல். தெளிந்த தண்ணீருக்குள் விளையாடிக்கொண்டு இருக்கும் மீன்கள், கடலைச் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் பசுமை, சுற்றிலும் மான், முயல்போன்ற மிருகங்களோடு, மனிதர்களும் சின்னச் சின்ன குடில்கள் அமைத்து அங்கு தங்கி இருக்கிறார்கள். சூரியன்கூட அங்கு சுள்ளெனச் சுட்டெரிக்காமல் மென்மையாக மிளிர்கிறது. அந்தக் கடலில் கலக்கும் அதே ஜோர்டான் நதி இன்னொரு கிளை பிரிந்து தென்பகுதியில் இன்னொரு கடலில் கலக்கிறது.

இந்தக் கடலில் மீன்கள் இல்லை. முகர்ந்து பார்த்தாலே தண்ணீர் காந்துகிறது. ஒரு துளி பசுமை இல்லை. மிருகங்கள் இல்லை. ஒரு செல் உயிரிகூட அங்கு ஜீவிப்பதற்கான சூழல் இல்லை. மயானச் சூழல். முந்தையக் கடலில் கலக்கும் அதே நல்ல தண்ணீரைத்தான் இந்தக் கடலிலும் கலக்கிறது ஜோர்டான் நதி. ஆனாலும், ஏன் இந்த வித்தியாசம்?

காரணம், முதல் கடல் தனக்குள் வந்து விழும் ஒவ்வொரு துளி நீருக்கு இணையாக மறு திசையில் நீரை வெளியேற்றிக்கொண்டே இருக்கிறது. உள்ளே விழுவதற்கு நிகராக நீர் வெளியேற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறது. அந்தக் கடலின் பெயர் கலீலி. அதே அந்த இரண்டாவது கடல் தனக்குள் விழும் நீரை அப்படியே சேகரித்து வைத்துக்கொள்கிறது. ஒரு துளிகூடத் தப்பித்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால் மயான மிதவையாகக் காட்சி அளிக்கும் அந்தக் கடலின் பெயர் டெட் ஸீ... சாக்கடல்!

பாலஸ்தீனத்தில் இருக்கும் அந்த இரு வகைக் கடல் போல மனிதர்களிலும் இரண்டு வகையினர் இருக்கிறார்கள். நீங்கள் அதில் எந்த வகை என்பதை உங்கள் டீன் ஏஜிலேயே முடிவு செய்துகொள்ளுங்கள்!

அந்த ஒரு மன்னிப்பு!

நாளை அதிகாலை முதலே நாம் கச்சிதமான, 100 சதவிகித ஜென்டில்மேனாக எழுந்து நடமாடிவிட முடியாது. மெதுமெதுவாக அந்த வடிவம் நோக்கிய பயணத்தில் நாம் பல பிழைகளைச் செய்யலாம். தப்புத் தப்பாகச் சில முடிவுகளை எடுத்துச் சொதப்பலாம். ஆனால், அந்தச் சமயத்தில் எல்லாம் உங்களை நீங்களே மன்னிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். பல வருடங்களாகக் கடலில் மிதக்கும் கப்பலின் அடிப்பாகம் முழுக்க கடற்பாசிகள், நீர்த் தாவரங்கள் ஒட்டி சேகரமாகிக்கொண்டே இருக்கும். ஒரு கட்டத்தில் கப்பலைச் சில அடி அதிக மாகவே கடலில் மூழ்கவைக்கும் அளவுக்கு டன் கணக் கில் அவற்றின் எடை அதிகரித்துவிடும். அது போன்ற சமயங்களில் துறைமுகத்துக்கு வரும் கப்பலைச் சில மணி நேரங்கள் நல்ல தண்ணீரில் மிதக்கவைப்பார்கள். அத்தனை வருடங்கள் இழுத்துப் பிடித்து இருந்த உப்பு நீரின் பிடிமானம் இல்லாததால், பாசிகளும் அழுக்குகளும் நழுவி அகன்றுவிடும்.

உங்கள் பிழைகள், குற்றங்கள், தவறுகள் ஆகியவற்றை உங்களை வருந்தவைத்துக்கொண்டே இருந்தால்,அவை யும் அந்தப் பாசிகள் போலத்தான் அடர்த்தி அதிகரித்து அயர்ச்சியூட்டும். அவ்வவ்போது நல்ல தண்ணீரில் நீந் துங்கள். உங்களை நீங்களே காதலிக்கப் பழகுவதுதான், இந்த உலகத்திலேயே சிறந்த காதல்!

நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!
நல்ல தண்ணீரில் நீந்துங்கள்!