Published:Updated:

அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?

அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அறிவு,மனம்,ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
ந.வினோத்குமார்
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?

ரு நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் 'சேல்ஸ் ரெப்' வேலைக்கு இன்டர்வியூ நடந்தினார்கள். இறுதியில் இரண்டு பேர் மட்டும் மிஞ்சினார்கள். அதில் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும்.

சேல்ஸ் மேனேஜர் தன் கையில் இருந்த பேனாவை முதல் நபரிடம் கொடுத்து, "இதை என்னிடம் விற்றுக் காண்பியுங்கள்" என்றார். அவர், "இந்த பேனா மிகவும் அழகாக எழுதும். இதன் டிரான்ஸ்பரன்ட் டிசைன் மூலம் எப்போது 'இங்க்' தீரும் என்பதை அறிந்துகொள்ள முடியும். விலையும் குறைவு" என்று பட்டியலிட்டு மேனேஜரிடம் பேனாவை நீட்டினார். அந்த நபரின் மார்க்கெட்டிங் திறமையில் அசந்துவிட்டார் சேல்ஸ் மேனேஜர்.

மீண்டும் அதே பேனாவை அடுத்த நபரிடம் விற்றுக்காட்டச் சொன்னார் சேல்ஸ் மேனேஜர். அவர் பேனாவை வாங்கி, கீழே போட்டு உடைத்துவிட்டு, "இப்போது உங்களுக்கு புதியதாக பேனா வேண்டும். என்னிடம் ஒரு பேனா இருக்கிறது. வாங்கிக்கொள்கிறீர்களா?" என்றார்.

அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?

யாருக்கு அந்த வேலை கிடைத்திருக்கும்? நிச்சயமாக இரண்டாவது நபருக்குத்தான். முதல் நபர் தெரிந்த விஷயங்களை, அதிக நேரம் பேசி விற்பனை செய்தார். இரண்டாவது நபர் வாங்குவதற்கான தேவையை ஏற்படுத்தினார். சுருக்கமாகப் பேசினார். தேவையை ஏற்படுத்துவதும், நேரத்தைச் சேமிப்பதும்தான் பிசினஸில் முதல் இரண்டு தேவைகள்.

பிசினஸ் மேனேஜ்மென்ட்டில் சொல்லப்படுகிற இந்தக் கதை, சமயோசிதம், மற்றவர்களை நம் ஆளுகைக்குள் கொண்டுவருவது, நிதானம் ஆகியவற்றைக் கற்றுக் கொடுக்கிறது. இந்த மூன்று விஷயங்களைத்தான் Intelligent Quotient(IQ), Emotional Quotient(EQ), Spiritual Quotient(SQ) ஆகிய மூன்று 'Q' என்கிறார்கள். தமிழில் அறிவு வளம், மன வளம் மற்றும் ஆன்ம வளம் என்று கூறலாம். நம் எல்லோருக்குமே குறிப்பிட்ட சில சதவிகிதங்களில் இவை இயற்கையாகவே அமைந்திருக்கும். இவற்றை மேம்படுத்திக்கொள்வதில்தான் இருக்கிறது வெற்றி. எப்படி மேம்படுத்துவது?

ஐன்ஸ்டீன் போல் யோசி!

"புத்திசாலித்தனம் என்பது தீர்வுகளைக் கண்டடைவதில் இல்லை. எவ்வளவு தூரம் நீங்கள் அந்தப் பிரச்னையைச் சமாளிக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது!" என்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

ஒரு பிரச்னையைப் பெரும்பாலும் ஒரே கோணத்தில் பார்ப்பார்கள். அதை வேறு ஒரு பரிமாணத்தில், வேறு ஒரு கோணத்தில் நீங்கள் அணுகும்போது அதற்கான தீர்வு எளிமையாகக் கிடைத்துவிடும். அல்லது அந்தத் தீர்வுக்கான வழியாவது கிடைத்துவிடும்.

முதலில் பிரச்னையின் காரணம், அதன் பின்னணிபற்றிப் புரிந்துகொள்ள வேண்டும். பிரச்னையின் விளைவுகள் எப்படி இருக்கும்? நல்லது என்றால், அதை எப்படிச் சாத்தியப்படுத்துவது? கெட்டது என்றால், அதை எப்படிச் சமாளிப்பது? இதை யோசித்தாலே பாதிப் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும். நினைவில் இருக்கட்டும். எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு.

அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?

ஐ.க்யூ. என்பது அரித்மெட்டிக் அறிவு என்பது மட்டுமல்ல; பொது அறிவு, தற்கால நிகழ்வுகள், நினைவுத் திறன், மாத்தி யோசிப்பது போன்றவையும் அடங்கும். படித்தவர்களுக்கு மட்டுமே அதிக ஐ.க்யூ. இருக்கும் என்று சொல்வது தவறு. காடுகள், மலைகளில் வாழும் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஐ.க்யூ. அதிகமாக இருக்கிறது. அனுபவ அறிவை வைத்து அவர்கள் பிரச்னையைச் சுலபமாகச் சமாளித்துவிடுவார்கள்.

அறிவைப் பெறுவது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பெற்ற அறிவைப் பயன்படுத்துவது!" என்கிறார் இந்தியக் கணிதத் துறை ஆசிரியர்கள் கூட்டமைப்பின் செயலர் மகாதேவன். 100 சதவிகிதம் உண்மை!

சாப்ளின் போல் மனம்கொள்!

'மழையில் நடந்து செல்வதையே நான் விரும்புகிறேன். அப்போதுதான் என் கண்ணீரை யாரும் பார்க்க முடியாது' என்பார் சார்லி சாப்ளின். புன்னகையின் மூலம் வலிகள் கடந்து செல்வதுதான் அவரது மாய வித்தை. துன்பங்களைக் கணக்கில்வைக்காமல், சிரிப்பைக் கண்களில்வைத்தவர் சாப்ளின். அதுதான் சாப்ளினின் வெற்றி ரகசியம்.

உங்களுக்குள் பிரச்னைகள் இருக்கலாம். உங்களுக்கும், உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் சச்சரவுகள் இருக்கலாம். பிரச்னைகளைத் தீவிரம் ஆக்காமல் தீர்க்க முயலுங்கள். உங்களை முழுவதுமாக விட்டுக்கொடுக்காமல், கொஞ்சம் அனுசரித்துச் செல்லுங்கள். எதிரிகளைக்கூட உங்கள் நண்பராக்கிக் கொள்வதுதான் 'ஆர்ட் ஆஃப் இன்ஃப்ளூயன்ஸ்!' 'எமோஷனல் கோஷன்ட் (மன வளம்) என்பது உங்களின் ஐ.க்யூ-வைக் காட்டிலும் முக்கியமானது. மூளை இல்லாமல் இருப்பதுகூடப் பிரச்னை இல்லை. இதயமே இல்லாமல் இருப்பது பெரும் குற்றம்.

உங்களின் உணர்வுகளையும், பிறரின் உணர்வுகளையும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தால், சூழ்நிலையை உங்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ள முடியும்.

சுய விழிப்பு உணர்வு, சுயக் கட்டுப்பாடு, சமூக விழிப்பு உணர்வு, சமூக உறவு ஆகிய இந்த நான்கும் இ.க்யூ-வில் தவிர்க்க முடியாதது. ஒரு இக்கட்டான சூழலில் முடிவெடுக்கும்போது, அறிவுப்பூர்வமாகவும் சமயத்தில் உணர்வுப்பூர்வமாகவும் செயலாற்ற வேண்டும். காரணம், லாபங்களை எதிர்பார்க்கும் அதே சமயம், நாம் மனிதர்களை இழந்துவிடக் கூடாது" என்கிறார் மனோதத்துவ நிபுணர் சி.ஆர்.எஸ்.

உங்களுக்கென்று நண்பர்கள் பலர் இருக்கலாம். அவர்களில் உண்மையான நபர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, நட்பை இன்னும் பலப்படுத்துங்கள். நல்ல நண்பர்கள்தான் நல்ல சூழலை, நல்ல விஷயங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவார்கள்!

புத்தன்போல் சலனமற்றுக் கிட!

சில இயந்திரங்களுக்கும், சில விலங்குகளுக்கும் இ.க்யூ உண்டு. அவற்றிடம் இருந்து உங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுவது எஸ்.க்யூ. எனப்படும் 'ஸ்பிரிச்சுவல் கோஷன்ட்' மட்டும்தான். அதாவது, ஆன்ம வளம்.

"மதம் என்பது வேறு. ஆன்மிகம் என்பது வேறு. 'நான் யார்?' 'என் வாழ்வுக்கு என்ன அர்த்தம்?' என்கிற கேள்விக்கு விடை தேடுவதுதான் ஆன்ம பலம். ஆசிரமங்களுக்குச் செல்வதன் மூலமும் கண்களை மூடி அமர்வதாலும் மட்டுமே ஆன்ம வளம் வளர்ந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு. அனுபவங்கள்தான் ஒருவருக்கு ஆன்ம வளத்தை அதிகரிக்கும்.

உங்கள் மனதில் லாப நோக்கம் இருக்கும்போது, உண்மையான தேடல் இருக்காது. 'நாம் சமூகத்துக்கு எவ்வாறு பயன்பட முடியும்?' என்று ஒருவர் நினைத்தாலே, அவரின் ஆன்ம வளம் வளர ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.

ஆன்ம வளத்தை அதிகரித்துக்கொள்ள வெளியில் இருந்து எதுவும் தேவைப்படாது. உங்களுக்குள் உள்நோக்கிப் பயணப்படுவதுதான் சிறந்த வழி. தியானம், யோகா போன்றவை ஆன்ம வளத்தை வளர்க்க உதவி செய்யும்" என்கிறார் சுகி சிவம்.

'வாழும் இந்த நொடியில் முழு உயிர்ப்புடன் வாழ். நமது கடமை நல்லதை மட்டுமே செய்வதுதான்' என்றார் புத்தர். சலனமற்று வாழத் தெரிந்தால், சோதனைகள் சீண்டாது.

அறிவு, மனம், ஆன்மா ஆகியவற்றை நல்ல முறையில் வளர்த்து வெற்றிக்கு உழைக்கத் தயாராகுங்கள்... இப்போதே!

அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?
அறிவு, மனம், ஆன்மா உங்களிடம் 3Q இருக்கிறதா?