Published:Updated:

எரிபொருள் ஏற்று!

எரிபொருள் ஏற்று!


16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்
எரிபொருள் ஏற்று!
எரிபொருள் ஏற்று!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எரிபொருள் ஏற்று!
கி.கார்த்திகேயன்
எரிபொருள் ஏற்று!
எரிபொருள் ஏற்று!
எரிபொருள் ஏற்று!

ங்கேனும் தாமதமாகச் செல்லும்போது, 'இந்த டிராஃபிக் இல்லைன்னா, அப்பவே வந்திருப்பேன்!' என்கிறீர்களா?

தோல்வியை ஏற்றுக்கொண்டு, 'இந்தக் காலத்தில் நல்லவங்களுக்குக் காலமே இல்லை!' என்று எந்தச் சந்தர்ப்பத்திலாவது சொல்லி இருக்கிறீர்களா?

புதிய நபர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக, 'அலுவலகத்தில் வேலை ஜாஸ்தி!' என்று சாக்குப்போக்குசொல்லிக் கொண்டே இருக்கிறீர்களா?

சிகரெட், ஆல்கஹால், அளவுக்கு அதிகமாக உண்பதுபோன்ற பழக்கங் களை விட முடியாமல் தவிக்கிறீர்களா?

 

'நம்பர் சேவ் பண்ண மறந்துட் டேனே!' என்று காரணம் சொல்லி, சிலருக்கு போன் செய்ய மறக்கிறீர் களா?

நேரம் இன்மையைக் காரணம் காட்டி ஏதேனும் ஒரு திட்டத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறீர்களா?

மேற்கண்ட கேள்விகளில் சிலவற்றுக்கேனும் 'ஆம்' என நேர்மையாக நீங்கள் பதில் அளித்து இருந்தால்... வாழ்த்துக்கள்!

உங்களை நீங்களே திருத்திக்கொள்ளும் மனப் பக்குவம் உங்களிடம் இருக்கிறது. கொஞ்சம் முயன்றால், உண்மையிலேயே முனைந்தால்... நீங்கள் தற்போது இருக்கும் உயரத்தைக் காட்டிலும் அதிக உயரத்தை எட்டலாம் என்று தன்னம்பிக்கை அளிக்கிறார் ஜே ரிஃபன்பேரி.

எரிபொருள் ஏற்று!

தயக்கம், பயம், மிரட்சி, அலட்சியம், அறியாமை எனப் பல்வேறு மூகமுடிகள் இட்டு நாம் தள்ளிப் போடும் சங்கதிகளை 'இன்றே, இப்போதே, இந்த நொடியே' செய்து முடிக்கும் ரகசியம் சொல்கிறது 'No Excuse. I'm Doing it' புத்தகம். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். தினமும் சிறிதும் பெரிதுமாக நாம் எத்தனை காரியங்களைத் தள்ளிப்போடுகிறோம் அல்லது ரொம்பவும் வசதியாக மறந்தேபோகிறோம். அந்த மனப்போக்கை சில டிகிரிகளுக்கேனும் சரி செய்யும் உத்தரவாதம் தருகிறது இந்தப் புத்தகம்!

ஒவ்வொரு நாளுக்கும் எரிபொருள் ஏற்றுங்கள்!

1969-ல் முதன்முதலில் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அப்பல்லோ விண்கல வீரர்கள் அதன் பிறகான சில மாதங்களுக்குக் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். 'நிலவிலேயே கால் பதித்துவிட்டோம். இனி, பூமியில் சாதிக்க என்ன இருக்கிறது!' என்ற எண்ணம் அவர்களை எந்தச் செயலிலும் கவனம் செலுத்தவிடாமல் மனச் சிதைவுக்கு ஆளாக்கி இருக்கிறது. எதை இலக்காக நிர்ணயித்துக் கொள்வது என்பதில் ஏற்பட்ட குழப்பமே அது. தங்களது முந்தைய சாதனைப் பெருமிதத்தை மனதில் இருந்து நீக்கிக்கொள்ளாமல், அதிலேயே திளைத்துக் கிடப்பதன் விளைவு என்றும் சொல்லலாம். 'நீங்களும் சராசரியானவர்தான். பல நூற்றுக்கணக்கான திறமைசாலிகள் இல்லாவிட்டால் உங்களால் நிலவில் கால்வைத்திருக்க முடியாது. பல்லாண்டு கால இடைவிடாத முயற்சிகளை உங்கள் மூலமாக உலகம் தெரிந்துகொள்ள முடிந்தது!' என்றெல்லாம் அவர்களுக்குப் பலவிதமாக கவுன்சிலிங் கொடுத்து இயல்பு நிலைக்குத் திருப்பினார்கள்.

அவர்கள்போலத்தான் நாமும்... பள்ளியில் முதல் ரேங்க், ப்ளஸ் டூ-வில் மாநில அளவி லான மதிப்பெண்கள், நல்ல கல்லூரியில் அனுமதி, கல்லூரி முதல் வருட கல்ச்சுரல்ஸில் பரிசு என நமது முந்தைய சாதனைகளிலேயே மனம் நிலைகொண்டு அந்தத் தருணங் களிலேயே உறைந்துவிடுகிறோம். அதனா லேயே மேற்கொண்டு நாம் கவனம் செலுத்த வேண்டிய செயல்கள்பற்றிய தெளிவு இல்லாமல் தேங்கிவிடுகிறோம். முந்தைய நாள் கடந்த தூரத்தைக் காட்டிலும் இன்னும் சில மில்லி மீட்டர்களேனும் அதிகம் பயணிக்க வேண்டும் என்பதை மனதில் இருத்துங்கள். அதைச் சாத்தியப்படுத்தும் செயல்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள் என்பதற்கும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற் குமான வித்தியாசத்தை உங்கள் செயல் கள்தான் தீர்மானிக்கும். தினமும் உங்களுக்கு நீங்களே எரிபொருள் நிரப்ப மறக்கா தீர்கள்!

விளிம்பு நிலை மனிதர்களாக இருங்கள்!

எந்த விஷயத்தில் ஆழ்ந்தாலும் அமிழ்ந்தாலும், அதன் அடி ஆழம் வரை துழாவிச் செல்லுங்கள். அமெரிக்க விமானப் படையில் பயிற்சி விமானிகளிடம் ஜெட் விமானங்களை ஒப்படைப்பார்கள். அதீத வேகம் காரணமாக விமானம் வெடித்துச் சிதறும் நிலைக்கு முந்தைய அபாய எச்சரிக்கை வரை அதை விரட்டுவார்கள். தலைகீழாக, மேலும் கீழுமாக, முன் பின்னான அந்த விமானங்களை வைத்து என்னவெல்லாம் வித்தை செய்ய முடியுமோ அத்தனையும் செய்வார்கள் பயிற்சி விமானிகள். உடைக்காமல், மோதிச் சிதறடிக்காமல் அந்த விமானத்தை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்த னையும் செய்வார்கள். காரணம்? 'இந்தப் பழக்கத்தை push the outside of the envelope என்பார்கள். அதாவது, எந்தச் செயலையும் அதன் முற்று முதல் வரை ஆராய்ந்து துழாவிப் பார்ப்பது. பயிற்சியில் ஒரு விமானத்தின் முழுத் திறனையும் பரிசோதித்து அறிந்துகொண்டால்தான், யுத்தச் சமயங்களில் அதன் முழு ஆற்றலையும் பயன்படுத்த முடியும்!'

எரிபொருள் ஏற்று!

இது பயிற்சி விமானிகளுக்கு மட்டுமல்ல; நம் அனைவருக்கும் பொருந்தும். பள்ளி விட்டு வந்ததும் பாடப் புத்தகங்களை மறக்கிறோம், கல்லூரிக் காலம் முடிந்ததும் அதிகாலை எழுவதைத் தவிர்க்கிறோம், முட்டி மோதி வேலையில் சேர்ந்த பிறகு நமது தகுதிகளை வளர்த்துக்கொள்ள மறக்கிறோம்... இன்னும் இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். எந்த ஒரு விஷயத்தையும் அதன் இறுதிப் புள்ளிவரை உள்ளும் புறமும் அறிந்துகொள்ளுங்கள். எந்த மலை ஏறினாலும், அதன் உச்ச விளிம்பு தொடு பவன்தான் சாதனையாளன்!

சமீபத்திய சர்வே அறிவித்த அதிர்ச்சி இது. வளரும் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையும் 14 தடவைக்கு ஒரு முறைதான் தட்டிக் கொடுத்து ஆதரவளிக்கும் வாசகத்தைக் கேட்கிறார்களாம். மற்ற அனைத்துச் சந்தர்ப்பங் களிலும் 'அங்கே நிற்காதே', 'அதைத் தூக்காதே', 'நீ எதற்கும் லாயக்கில்லை', 'உன்னால் அது முடியாது' என்றெல்லாம் அர்ச்சனை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால், பளிச் எனப் பதியும் பசுமரத்து ஆணியாக அவர்கள் உள்ளங்கள் இருக்கும் சமயம் பல எதிர்மறைக் கருத்துகள் அவர்களிடையே பொதிந்துவிடுகிறது. இதுதான் பிற்காலத்தில் அவர்களைக் கூச்ச சுபாவம் உள்ள, தயக்கம் நிறைந்த, தாழ்வு மனப்பான்மை நிரம்பியவர்களாக வடிவமைக்கிறது. ஆதலால், உங்களைச் சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கு, நீங்கள் சாக்லேட், பிஸ்கட், பொம்மைகள் வாங்கிக் கொடுக்க வேண்டாம். சின்னச் சின்னப் பாராட்டுகளால் அவர்களைக் குளிப்பாட்டுங்கள்.

நாளை அதை உலகமே வழிமொழியலாம்!

எரிபொருள் ஏற்று!
எரிபொருள் ஏற்று!