திருமணம் விகடன்
விகடன் பொக்கிஷம்
Published:Updated:

கேரியர் கைடன்ஸ்

கேரியர் கைடன்ஸ்

16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
ரீ.சிவக்குமார்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்

சயின்ஸ் கம்யூனிகேட்டர்!

அறிவியல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அறிவியல் தொடர்பாளராகவும் (Science Communicator), ஊடகங்களில் செய்தியாளராகவும் சேர்ந்து, அறிவியல் தகவலையும், சுற்றுச்சுழல் சார்ந்த விஷயங்களையும் மக்களுக்குத் தெரிவிக்க ஆர்வம் உள்ளவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அறிவியல் - தொழில்நுட்பத் தொடர்பியல் படிப்பு (M.Sc. Science & Technology Communication) சேர்க்கை விண்ணப்பங்களை new.annauniv.edu/msc 2010 என்ற முகவரியில் டவுன்லோடு செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 10.05.2010.

கேரியர் கைடன்ஸ்


ராணுவ தலைமைக் காவலர்!

இந்திய அரசின் துணை ராணுவப் படையான சாஸ்திரி சீமாபாலில் தலைமைக் காவலருக்கான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலி இடங்கள்: 218. ஆங்கிலம் அல்லது இந்தியில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும். வயது: 18 - 25க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ப்ளஸ் டூ அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 07.05.2010. மேலும் விவரங்களுக்கு: http://ssb.nic.in/


அரசு மேலாளர் ஆக...

இந்திய அரசின் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள மேலாளர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்களில் தகுதி வாய்ந்தவர்கள் 'டெபுடேஷன்' அடிப்படையில் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். காலி இடங்கள்: 100. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் இன்ஜினீயரிங்கில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்ய: new.nhai.org


சிண்டிகேட் வங்கிப் பணி!

சிண்டிகேட் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: புரொஃபஷனரி கிளார்க். காலி இடங்கள்: 1000. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ப்ளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 18 - 28 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 12.05.2010. மேலும், விவரங்களுக்கு: new.syndicatebank.in


ஓ.என்.ஜி.சி இன்ஜினீயர்

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இளம் பொறியாளர்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. 15 வெவ்வேறு பதவிகளுக்கான 419 காலி இடங்கள் உள்ளன. வயது: அதிகபட்சம் 30. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 20, 2010. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 21.05.2010. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுக்கு: new.ongcindia.com


சி.பி.எஸ்.இ-யில் வேலை
கேரியர் கைடன்ஸ்

சி.பி.எஸ்.இ. என்று அழைக்கப்படும் சென்ட்ரல் போர்டு ஆஃப் செகண்டரி எஜுகேஷன் நிறுவனம் பல்வேறு பதவிகளுக்கான காலி இடங்களை அறிவித்துள்ளது. கல்வி அதிகாரி, தனி உதவியாளர் (சட்டம்) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 15.05.2010. வெவ்வேறு பதவிகளுக்கான கல்வித் தகுதிகள் குறித்த விவரங்களை அறிய: new.cbse.nic.in


ஸ்டீல் பிளான்ட்டில் வேலை

இந்திய அரசுக்குச் சொந்தமான விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட்டில் காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பதவியின் பெயர்: நிர்வாகத் தொழில்நுட்பப் பயிற்சியாளர். காலி இடங்கள்: 195. மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி: மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் போன்ற பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இன்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும். பொறியியல் படிப்பில் 60 சதவிகிதத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 10.05.2010. மேலும் விவரங்களுக்கு: new.vizagsteel.com/

 
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்