பிரீமியம் ஸ்டோரி
16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
 
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!

1) ஆங்கில எழுத்துக்களில் இரண்டு எழுத் துக்கள் எப்போதும் ஒன்றாகவே வரும். அவை எவை?

2) ஆங்கில வசனத்தில் I am, I was என்று ஆரம்பிக்கப் பார்த்திருக்கிறோம். ஆனால், மி வீs என்று ஆரம்பிக்குமா?

- பி.கிருஷ்ணசாமி, சேலம்.

3) பின்வரும் எண்களுக்கிடையே ஓர் ஒற்றுமை உண்டு... 12, 1.05, 2.10, 3.15, 4.20, 5.25, 6.30, 7.35, 8.40, 9.45, 10.50, 11.55. அது என்ன?

- பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

4) அது ஒரு பொருள். அதை உருவாக்கு பவருக்கு அது தேவை இல்லை. அந்தப் பொருளை வாங்கிச் செல்பவர் அதைப் பயன் படுத்தப்போவது இல்லை. அதைப் பயன் படுத்திக்கொள்ளப்போகிறவர் அந்தப் பொருளைக் கண்ணால்கூடப் பார்க்க முடியாது. அப்படி என்ன பொருள் அது? யோசிங்க பாஸ்!

5) மன நோயாளிகளை மருத்துவமனையில் எப்படி சேர்த்துக்கொள்கிறார்கள் என்பதைப்பற்றித் தெரிந்துகொள்ள ஒருவர் மனநல மருத்துவமனைக்குச் சென்றார். அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டதும் அவர் சொன்னார். ''முதலில் பாத்டப்பில் நீரை நிரப்புவோம். பின்பு ஒரு கரண்டி, ஒரு டீ கப், ஒரு பக்கெட் மூன்றையும் நோயாளிகளிடம் கொடுத்து பாத்டப்பில் இருக்கும் நீரைக் காலியாக்கச் சொல்வோம். மூன்று பொருட்களில் ஏதேனும் ஒன்றைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.''

''இதென்ன பிரமாதம். நான் பக்கெட்டைத்தான் தேர்வு செய்வேன். நான் மட்டுமல்ல, மன ஆரோக்கியம் உள்ள அனைவரும் இதைத்தான் செய்வார்கள்'' என்று சிரித்த கேள்வியாளரைப் பார்த்து அந்த மருத்துவர் விழுந்து விழுந்து சிரித்தார். காரணம், மருத்துவர் வேறு பதிலைச் சொன்னார். அந்த பதில் என்னவாக இருக்கும்?

- ந.வினோத்குமார்

மிஸ்டர் ஐ.க்யூ!

6) வினிதா ஞாயிற்றுக்கிழமை ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை வாங்கினாள். அதில் மூன்றில் ஒரு பங்கு பழங்களை அன்றே சாப்பிட் டாள். திங்கட்கிழமை ஒன்றும், செவ்வாய்க்கிழமை ஒன்றும் சாப்பிட்டாள். மீதம் இருந்தவற்றுள்பாதியை புதன்கிழமை சாப்பிட்டாள். வியாழக்கிழமை கூடைக்குள் பார்த்தபோது ஒரே ஒரு ஆப்பிள் மட்டும் மிச்சம் இருந்தது. வினிதா மொத்தம் எத்தனை ஆப்பிள்கள் வாங்கினாள்?

- திவ்யா, மதுரை.

புதிர் விடைகள்

மிஸ்டர் ஐ.க்யூ!

1) QU

2) ஆரம்பிக்கும். I is the ninth letter in English alphabet.

3) கடிகாரத்தில் அந்த நேரங்களில் பெரிய முள்ளும் சிறிய முள்ளும் ஒன்றாக இணைந்திருக்கும்.

4) சவப்பெட்டி.

5) 'மன ஆரோக்கியம் உள்ளவர்கள் பாத்டப்பில் உள்ள ப்ளக்கை மட்டும் உருவிவிட்டால் போதும். தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடுமே!'

6) 12 ஆப்பிள்கள்.

 
மிஸ்டர் ஐ.க்யூ!
மிஸ்டர் ஐ.க்யூ!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு