பிரீமியம் ஸ்டோரி
16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
ரீ.சிவக்குமார்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்

துணை உதவி ஆய்வாளர்கள் தேவை!

மத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் காலி இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பதவியின் பெயர்: துணை உதவி ஆய்வாளர். காலி இடங்கள்: 141, பதவியின் பெயர்: தலைமைக் காவலர். காலி இடங்கள்: 504. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் டூ முடித்திருக்க வேண்டும். வயது: 18-25. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 26.04.2010. விவரங்களுக்கு: new.bsf.nic.in

அணு மையத்தில் பணி!

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் இந்திய அணுசக்தித் துறையின் கீழ் உள்ள பல்திறனுடைய அணுப் பிளவு மையத்தில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவித்தொகை உண்டு. வயது: அதிகபட்சம் 24. இந்தப் பயிற்சி மொத்தம் நான்கு ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் உதவி அறிவியல் ஆராய்ச்சியாளராகவும் டெக்னீஷியனாகவும் பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 30.04.2010. கல்வித் தகுதி மற்றும் விவரங்களுக்கு: new.vecc.gov.in

BHELல் வேலை!

பொதுத் துறை நிறுவனமான பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் (BHEL) நிறுவனத்தில் மேலாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர், துணைப் பொது மேலாளர் போன்ற பதவிகளுக்கான காலி இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில்/மெக்கானிக்கல்/எலெக்ட்ரிக்கல்/ எலெக்ட்ரானிக்ஸ் /இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.இ., அல்லது பி.டெக்., முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 22.04.2010. விவரங்களுக்கு: new.careers.bhel.in

எஸ்.ஏ.எஸ். அப்ரண்டிஸ்!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் அப்ரண்டிஸாகப் பணிபுரியத் தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி யின் பெயர்: எஸ்.ஏ.எஸ். அப்ரண்டிஸ். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஹானர்ஸ் பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 18-27. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 27.04.2010. விவரங்களுக்கு: new.ssc.nic.in

கப்பற்படை அப்சர்வர்!

இந்தியக் கப்பற் படையில் அப்சர்வர் ஆபீஸர் பணியில் சேரத் திருமணம் ஆகாத ஆண் - பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி:பிளஸ் டூவில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசித் தேதி: 07.05.2010. விவரங்களுக்கு: new.navsena-bharathi.nic.in


ரயில் படிப்பு!

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் அங்கீ காரம் பெற்ற இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரயில்வே டிரான்ஸ்போர்ட் கல்வி மையத்தில் ரயில் போக்குவரத்துபற்றிய ஒரு வருட டிப்ளமோ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறு கிறது. விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.05.2010. விவரங்களுக்கு: http://new.irt-india.com/

உதவித்தொகையுடன் நாடகப் பயிற்சி!

இந்தியப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தேசிய நாடகப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 3,000 உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். விவரங்களுக்கு: new.nsd.gov.in

 
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு