16 ப்ளஸ் - எனர்ஜி பக்கங்கள்

பார்ட் டைம் ஜாப் பலன் அளிக்குமா?

அ.ஐஸ்வர்யா, ந.வினோத்குமார், இர.ப்ரீத்தி,
படங்கள் : ஜாக்சன், மாரியப்பன், தான்யராஹூ

கல்லூரி... அதைவிட்டால் சினிமா, ஷாப்பிங், ஜாலி ரவுண்ட்ஸ், ஐ-பாட், டூயல் சிம் கார்டு மொபைல் - இவைதான் இன்றைய இளைஞர்களின் அடையாளம் என்று நினைத்தால், ஸாரி பாஸ்!

பியூட்டி பார்லர்களில் ஹேர் கலரிங் செய்யும் இளம்பெண், காபி ஷாப்பில் கப்புசினோ பரிமாறும் இளைஞன், ஷாப்பிங் மால்களில் உங்களை சிம்கார்டு வாங்கச் சொல்லிச் சிரிக்கும் யுவதி, சூப்பர் மார்க்கெட்டில் பில் போட்டு 'ஹேவ் எ நைஸ் டே மேம்!' என்று சிரிக்கும் இளைஞன், ஏ.டி.எம். வாசலில் புத்தகம் விற்கப் போராடும் பெண்... இவர்களில் பலர் உங்கள் நகரத்தின் 'மோஸ்ட் வான்டட் கல்லூரி'யின் மாணவர்கள்!

'பார்ட் டைம் ஜாப்' (பகுதி நேர வேலை) என்ற குதிரையில் இவர்கள் இருப்பது, பாக்கெட் மணிக்காக மட்டும் அல்ல. தங்கள் கல்விச் செலவுகளில் குடும்பத்தின் சுமையையும் குறைக்கவே!

கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கிடைக்கவிருக்கும் 'வொயிட் காலர்' அல்லது 'டாலர்' வேலைகளுக்கு இந்தப் பகுதி நேர வேலைகள் ஒரு ரிசர்வேஷன் டோக்கன். செலவுக்குப் பணம், நிஜ வாழ்க்கை அனுபவம், எதிர்காலத் தொடர்புகள் என்ற ப்ளஸ்கள் ஒரு பக்கம். போதிய கவனம் செலுத்த முடியாமல் படிப்பு பாதிக்கப்படுவது, பணியிட நிகழ்வுகள் உண்டாக்கும் மன உளைச்சல், திடீர் பொருளாதாரச் சுதந்திரம் ஏற்படுத்தும் பழக்கங்கள் போன்ற காரணங்கள் பகுதி நேர வேலைகளின் மறுபக்க விளைவுகள். இந்த ப்ளஸ், மைனஸ் குறித்து 'மாணவப் பணியாளர்'களிடம் கேட்டோம்...

முத்துக்குமார், மதுரையில் ஒரு கல்லூரியில் பி.இ., படிக்கிறார். ''நான் டிப்ளமோ முடிச்சுட்டே பெங்களூரு சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்துட்டேன். பிடிச்ச வேலைதான். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் டிகிரி இருந்தால்தான் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்குன்னு புரிஞ்சது. உடனே வேலையை விட்டுட்டு, பி.இ., சேர்ந்துட்டேன். வேலை பார்த்துப் பழகிட்டு, சும்மா ஸ்டூடன்ட்டா மட்டும் இருக்க முடியலை. அதனால், இங்கேயே பகுதி நேரமா சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறேன். மாசம் 15 ஆயிரம் சம்பளம். தவிர, கல்லூரி மாணவர்களுக்கும் புராஜெக்ட்ஸ் முடிச்சுத் தர்றேன். எனக்கு என் திறமை, உழைப்பின் மீது இப்போ அபார நம்பிக்கை. சீக்கிரமே மதுரையில் நிறைய ஐ.டி. கம்பெனிகள் வரும்னு சொல்றாங்க. அப்படி வந்தா என் அனுபவங்கள் அவங்களோட அத்தனை தகுதித் தேவைகளையும் பூர்த்திசெய்யும். ஆனா, இத்தனை பண்ணாலும் என் இன்ஜினீயரிங் படிப்பு துளியும் பாதிக்கலை!'' என்கிறார் உற்சாகமாக!

சென்னையைச் சேர்ந்த நித்யாவின் 'பார்ட் டைம் ஜாப்' ரொம்பவே ரசனையானது. ''நான் இப்போ சோஷியல் வொர்க் மாஸ்டர்ஸ் டிகிரி படிச்சுட்டு இருக்கேன். அதிக பாடச் சுமைகள் இல்லாத படிப்பு, சமூகத்தோட நல்ல பிணைப்பு வேணும்... இந்த இரண்டு காரணங்கள்தான் பகுதி நேர வேலைகள்பத்தி என்னை யோசிக்கவெச்சது. எனக்கு கர்நாடக சங்கீதம், ஹிந்தி இரண்டும் நல்லாத் தெரியும். பெரம் பூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுக்கு கர்னாடக இசையும், ஹிந்தியும் கத்துக் கொடுக்கும் வாய்ப்பு வந்தது. சாயங்காலம் அஞ்சு மணியில் இருந்து எட்டரை மணி வரைதான் கிளாஸ். அது ஒரு வேலை மாதிரியே தெரியலை. ஆறு பேரோடு ஆரம்பிச்ச வகுப்பில் இப்போ 28 குட்டிப் பசங்க கிட்டத்தட்ட மாசம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். என் படிப்புச் செலவுகளை நானே பார்த்துக்கிறேன்!'' ''நான் படிக்கிறது தேர்ட் இயர் இன்ஜினீயரிங். குடும்பக் கஷ்டம் தாங்காமத்தான் நான் எதாவது வேலைக்குப் போகலாம்னு யோசிச்சேன். வேற எந்த சிறப்புத் தகுதிகளும் இல்லாம எந்த வேலைக்குப் போறதுன்னு குழப்பமா இருந்த சமயம்தான் தனியார் சேனல் வீடியோ ஜாக்கி வாய்ப்பு கிடைச்சது. பயந்துகிட்டேதான் இன்டர்வியூ போனேன். 'அந்தப் பயம் மட்டும் இல்லாம பேசுங்க. ஆல் த பெஸ்ட்'னு வேலை கொடுத்துட்டாங்க. சாயங்காலங்களில்மட்டும் தான் ஸ்லாட் இருக்கும். அதனால படிப்புக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ஆறாயிரம் ரூபாய் சம்பளம். அதைவிட முக்கியம், மத்தவங்களோட பேசிப் பழகுறதுல இருந்த கூச்சம், பயம், தயக்கம்லாம் இப்போ என்கிட்ட இல்லை. இனி, இன்ஜினீயரிங் காலேஜ் கேம்பஸ் இன்டர்வியூ, குழு விவாதம்னு எந்தச் சவாலையும் சந்திக்கும் தன்னம்பிக்கையை இந்த வேலை எனக்குக் கொடுத்திருக்கு!'' என்று தம்ஸ்-அப் சொல்கிறார் மோகனப்பிரியா.

சென்னையைச் சேர்ந்த கிருத்திகாவின் கருத்து இன்னொரு கோணத்தில் விரிகிறது. ''நான் மனிதவள படிப்பான பி.ஜி.பி.எம். கோர்ஸ் படிச்சுட்டு இருக்கேன். கூடவே, ஒரு கட்டுமான நிறுவனத்தில் 'இன்டெர்ன்ஷிப்' விண்ணப்பிச்சேன். அந்த நிறுவனத்தின் மனிதவளத் துறையில்தான் காலியிடம் இருக்குன்னு சொல்லி வேலை கொடுத்தாங்க. அந்த நிறுவனம் 'வேலைக்கு ஆட்கள் தேவை'ன்னு கொடுக்குற விளம்பரங்களுக்கு வந்து குவியும் விண்ணப்பங்களை வகை பிரிச்சு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி, தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைச்சுன்னு... குறிப்பிட்ட விண்ணப்பதாரர் வேலைக்குத் தேர்வாகும் வரை அவங்களைத் தொடர்ந்துட்டே இருக்குறதுதான் என் வேலை. ஒரே மாசத்துல பத்து வெவ்வேற பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு பண்ணாங்க. ஒரு கார்பரேட் நிறுவனம் தனக்கு ஊழியர்களாகச் சேர விரும்புபவர்களிடம் என்னஎல்லாம் தகுதிகள் எதிர்பார்க்குதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். அதுவும் டாப் லெவல் மேனேஜ்மென்ட் ஆட்கள் இக்கட்டான சூழ்நிலைகளில் எப்படி யோசிக்கிறாங்கன்னு ரொம்பப் பக்கத்துல இருந்தே கவனிச்சேன். நானே கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் அந்த அனுபவங்கள் எனக்குக் கிடைச்சிருக்காது.எதிர் காலத்தில் எந்த நிறுவனத்திலும் வேலைக்குச் சேரும் தகுதியையும் தன்னம்பிக்கையையும் அந்த சில மாத அனுபவங்கள் எனக்குக் கொடுத்திருக்கு. அந்த பகுதி நேர வேலைதான் என் முழு நேர வேலையையும் தீர்மானிக்கப் போகுது!'' என்று உற்சாகம் பகிர்கிறார் கிருத்திகா.

மதுரை ராஜ ராஜேஸ்வரி படிப்பதோ பி.எஸ்ஸி., ஆனால், தன் படிப்புக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாமல் பகுதி நேரமாக மற்றவர்களுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். ''ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதுனால நிறைய நேரம் சும்மாவே இருப்பேன். அப்போ கலாகேந்த்ராவில் பரத நாட்டியம் கத்துக்கிட்டேன். என் குருதான், 'நீ நல்லா ஆடுற. சின்னப் பிள்ளைகளுக்குப் பகுதி நேரமா பரதம் கத்துக் கொடு'ன்னு சொன்னார். உடனே களம்இறங் கிட்டேன். குறைந்தபட்சம் இரண் டாயிரம் சம்பளம். மேடை நிகழ்ச்சிகள் நிறைய பண்ணா இன்னும் நிறைய சம்பா திக்கலாம். டான்ஸ் ஆடும்போது உடம்பும், மனசும் அவ்வளவு லேசாகிடும். ஆனா, என் அப்பா-அம்மாவுக்கு நான் இப்படி வேலை பார்க்கிறது சுத்தமா பிடிக்கலை. ஒரு ஹேர்பின் வாங்கினாலும் என் காசுல வாங்கும் போது, அது கொடுக்கிற திருப்தி ரொம்பப் பெரிசாச்சே!'' என்று நெகிழ்கிறார் இவர்.

சி.ஏ., படித்துக்கொண்டு ஆடிட்டர் அலுவலகத்தில் அக்கவுன்ட் அசிஸ்டென்ட் ஆக வேலை பார்த்து வரும் பாலாஜி, ''ஏதோ ஒரு பார்ட் டைம் வேலை என்பதில் எனக்கு இஷ்டமில்லை. நம் படிப்பு சார்ந்த வேலையில் பகுதி நேரமாக ஈடுபடும்போது அனுபவத்துக்கு அனுபவமும் ஆச்சு. படிப்புக்குப் படிப்பும் ஆச்சு. பணம் முக்கிய விஷயம் இல்லை!'' என்கிறார். வக்கீல் ஒருவரிடம் ஜூனியராகப் பயிற்சி எடுத்துக்கொண்டே நான்காம் ஆண்டு சட்டம் பயின்று வரும் திவ்யாவின் கருத்தும் இதுதான்.

கெம்பா மேனேஜ்மென்ட் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான கார்த்திகேயன், இருபது வருடங்கள் மனித வள மேம்பாட்டுத் துறையில் அனுபவம் பெற்றவர். பகுதி நேர வேலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்கினார். ''பகுதி நேர வேலைகளைப் பொறுத்தவரை, சம்பளத்தை முதன்மையான விஷயமாக நீங்கள் கருதினால், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இருக்காது. அந்த வேலையின் மூலம் கிடைக்கும் அனுபவங்களைத்தான் நீங்கள் வெகுமதியாகக் கருத வேண்டும். பொதுவாக, நிறுவனங்கள் பகுதி நேர வேலைக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று காரணங்கள்.

திறமையான மாணவர்களை அடையாளம் கண்டுகொள்வது, பகுதி நேர வேலையிலேயே மாணவர்கள் பணித் தேவைகளையும் நிறுவனத்தின் நடைமுறைகளையும் கற்றுக் கொள்வதால், பின்னாட்களில் அவர்களைப் பணியமர்த்தும்போது அவர்களுக்குத் தனிப் பயிற்சி தேவைப்படாதது, குறைந்த சம்பளத்தில் திறமையான நபர்கள் வேலைக்குக் கிடைப்பது ஆகியவைதான் அந்தக் காரணங்கள். அவர்கள் திறமையானவர்களாக இல்லாத பட்சத்தில், அவர்களை வேலையில் இருந்து நீக்கப் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை என்பதும் ஒரு காரணம்.

நல்ல நிறுவனங்களில் மிகக் குறைந்த சம்பளத்துக்குப் பகுதி நேர வேலை கிடைத் தால்கூட யோசிக்காமல் அதற்குச் செல் லுங்கள். உங்கள் வேலைத் திறனை அந்த நிறுவனத்தில் நிரூபித்தால், எதிர்காலப் பலன் உங்களுக்குத்தான் அதிகம். குறிப்பாக, டெக்னிக்கல் அல்லாத துறையைச் சேர்ந்த வர்களுக்கும், அத்தனை பிரபலம் இல்லாத கல்லூரியில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ள துறைகளைத் தேர்ந்தெடுத்துப் படிப் பவர்களுக்கும் இந்தப் பகுதி நேர வேலை ஒரு வரப்பிரசாதம்தான்.

சி.ஐ.ஏ.(C.I.A) தென்னிந்தியாவில்

நடத்திய சர்வேயில், எம்.பி.ஏ., பட்டதாரி களில் 80 சதவிகிதம் பேர், வேலைவாய்ப்பு களுக்குத் தகுதியானவர்களாக இல்லை என்கிறது. இதற்குக் காரணம், தங்களை வளர்த்துக்கொள்ள, மாணவர்களுக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காததே! அந்தத் தகுதிக் குறைவுகளை இந்தப் பகுதி நேர வேலைகள் நிச்சயம் பெருமளவில் ஈடு செய்யும். அதே சமயம், அந்த வேலைகளை தொலைநோக்குப் பார்வையோடு அணுக வேண்டியதும் அவசியம். நீங்கள் படிக்கும் படிப்புக்குச் சம்பந்தப்பட்ட பகுதி நேர வேலை என்றால், படிப்பு முடிந்த பிறகு நிச்சயம் அந்த வேலையால் உங்களுக்குப் பயன் கிடைக்கும். தற்போது இந்தத் துறையில் அதிகளவு தேவை இருப்பதால், விருப்பமுள்ள மாணவர்கள் எங்களை அணு கினால் உதவத் தயாராக இருக்கிறோம்!'' என்கிறார் கார்த்திகேயன்.

பகுதி நேர வேலைகளைத் தேர்ந்தெடுக்க சில டிப்ஸ்கள்...

எந்த மாதிரியான வேலை, எந்த நிறுவனம் என்பதில் தெளிவு இருக்க வேண்டும்.

உங்கள் பிற பணிகளைத் தொந்தரவு செய்யாதவாறு காலையா, மாலையா... எது உங்கள் சாய்ஸ் என்பதை அட்டவணையிட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்!

சம்பளம் அதிகமோ, குறைவோ எந்த ஒரு வேலையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆர்வம் இருக்க வேண்டும்.

இரண்டு, மூன்று பார்ட் டைம் வேலைகள் பார்க்கிறபோது உடலளவிலும், மனதளவிலும் சமநிலை தவறிவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்!

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு, 'நீங்கள் திட்டமிடத் தோற்றால், தோற்றுப் போவதற்குத் திட்டமிடுகிறீர்கள் என்று அர்த்தம்!' இது பகுதி நேர வேலைக்கும் பொருந்தும்.

எந்த ஒரு வேலையையும் சரியாகத் திட்ட மிட்டுச் செய்தால் வெற்றி நிச்சயமே!