Published:Updated:

மிஸ்டர் ஐ.க்யூ

மிஸ்டர் ஐ.க்யூ

மிஸ்டர் ஐ.க்யூ

மிஸ்டர் ஐ.க்யூ

Published:Updated:

. மிஸ்டர் ஐ.க்யூ.
மிஸ்டர் ஐ.க்யூ
எனர்ஜி பக்கங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் ஐ.க்யூ

நண்பர்களே! உங்களிடமும் உண்டா...

இது போன்ற மூளையை உலுக்கிக் கலைக்கும் உற்சாகப் புதிர்கள்? சிரிப்பூட்டும், வியக்கவைக்கும், கவனம் கலைக்கும், ஆச்சர்யப்படுத்தும் அட்டகாசப் புதிர்கள், லாஜிக் கேள்வி-பதில்கள், மைண்ட் டீஸர்களை அனுப்புங்கள் எங்களுக்கு. பரிசுகள் உங்களுக்கு!

மிஸ்டர் ஐ.க்யூ


(வினா-விடை உள்பட அதிகபட்சம் 15 வரிகளுக்கு மிகாத புதிர்களை மட்டும்)

அனுப்ப வேண்டிய முகவரி...
மிஸ்டர் ஐ.க்யூ,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை-2.

1) ஒரு குளக்கரையில் ஐந்து தவளைகள் இருக்கின்றன. அவற்றில் மூன்று குளத்தில் குதிக்க நினைக்கின்றன. ஐந்து நிமிடங்கள் கழித்து கரை யில் எத்தனை தவளைகள் இருக்கும்?

- எஸ்.பிரபாகரன்

2) ஓர் இருட்டு அறையில் நான்கு பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர், 'நான் ரஜினிகாந்த்' என்கிறார். இன்னொருவர், 'நான் மன்மோகன் சிங்' என்கிறார். மற்றொருவர், 'நான் ஹிட்லர்' என்கிறார். கடைசியாக ஒருவர், 'நான் சச்சின் டெண்டுல்கர்' என்கிறார். இவர்களில் யார் நிச்சயமாகப் பொய் சொல்கிறார்?

- கா.தாமு

3) பாலைத் தயிராக மிக சீக்கிரமே உறைய வைக்கும் புதுவிதமான பாக்டீரியா ஒன்றை விஞ் ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள். ஒரு நிமிடத்தில் இரண்டாகப் பெருகும் தன்மையுடையது அந்த பாக்டீரியா. மதியம் 12 மணிக்கு ஒரே ஒரு பாக்டீரியாவைப் பாலில் விடுகிறார்கள். சரியாக 12.43 மணிக்கு (அதாவது 43 நிமிடங்கள் கழித்து) பாலில் பாதி அளவு தயிராக உறைந்திருந்தது. அப்படி என்றால் பால் முழுவதும் எத்தனை மணிக் குத் தயிராகும்?

- எஸ்.தேன்மொழி

4) செவ்வக வடிவத்தில் ஒரு வீடு கட்டப்பட்டு இருக் கிறது. அந்த வீட்டின் எல்லாப் பக்கங்களும் தெற்கு நோக்கியே அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கமாக ஒரு கரடி சென்றுகொண்டு இருக்கிறது. அந்தக் கரடியின் நிறம் என்ன?

-அ.ஐஸ்வர்யா

5) ஒரு டன் தங்கம், ஒரு டன் பஞ்சு. இரண்டில் எது அதிக கனமானது?

- எஸ்.கே.சுகன்

6) ஒருவரை நான் 1983-ம் ஆண்டு ஏதோ ஒரு மாதத்தில், ஒரு தேதியில், மதிய வேளையில் சந்தித்தேன். அப்போது தனது வயது 22 என்றார். அதே நபரை எனது நண்பர் ஒருவர் 1987-ம்ஆண்டு மாசி மாதம் பத்தாம் நாள் நடுநிசியில் சந்தித்த போது தனது வயதை 18 என்று கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் பொய் சொல்லவில்லை. அது எப்படி?

- பா.வள்ளி

7) பதினொன்றோடு இரண்டைச் சேர்த்தால் ஒன்றாகும். எப்படி?

-எல்.ஆவுடைநாயகம்

8) ஒரு சட்டபூர்வமான கேள்வி: ஒருவர் தனது விதவை மனைவியின் தங்கையை மணப்பதற்குச் சட்டத்தில் இடம் உண்டா?


-கு.சதீஷ்குமார்

விடைகள்

1) ஐந்து தவளைகள்தான். அந்த மூன்று தவளைகள் குளத்தில் குதிக்க நினைக்கத்தானே செய்தன. குதிக்கவில்லையே!

2) 'நான் ஹிட்லர்!' என்பவர்தான் பொய் சொல்கிறார். காரணம், மற்ற அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள்தானே!

3) 12.44க்கு. 12.43க்குப் பாலில் பாதி தயிராகியிருந்தது. அதிலிருந்த ஒவ்வொரு பாக்டீரியாவும் இரண்டாகப் பெருகியதில், அடுத்த ஒரு நிமிடத்திலேயே பால் முழுவதும் தயிராகிவிடும்!

4) வெள்ளை. ஏனென்றால், எல்லாப் பக்கங்களுமே தெற்கு நோக்கி அமைந்திருக்கும் வீட்டை வட துருவத்தில்தான் கட்ட முடியும். அந்த வெள்ளை நிறக் கரடி, ஒரு துருவக் கரடி!

5) இரண்டும் ஒரே அளவு கனமானவையே. ஒரு டன்!

6) அது கி.முவில் நடந்த சந்திப்பு!

7) பதினோரு மணியோடு இரண்டு மணி நேரத்தைக் கூட்டினால் ஒரு மணிதானே வரும்!

8) விதவை மனைவி என்றாலே, அந்தக் கணவன் இறந்தவனாகிறான். ஆகவே நோ சான்ஸ்!

 
மிஸ்டர் ஐ.க்யூ
மிஸ்டர் ஐ.க்யூ
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism