Published:Updated:

கேரியர் கைடன்ஸ்

கேரியர் கைடன்ஸ்

கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சட்டம் என் கையில்!

 

கேரியர் கைடன்ஸ்

வம்பு தும்பு, வழக்கு வாய்தா என்று நித்தம் யுத்தமாகி வரும் இந்த யுகத்தில், வழக்கறிஞர்களுக்கான தேவைகள் ஆயிரம். சட்டத்தைத் துணையாகக்கொண்டு உங்கள் எதிர்காலத்தை ஒளிமயமாக்க நாட்டின் சிறந்த பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் அவசியம். Common Law Admission test (CLAT) நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களின் சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வாகும். பெங்களூரு நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிட்டி சட்டப் படிப்பில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம். அதற்கு இணையான தரத்துடன் நால்சார் சட்டப் பல்கலைக்கழகம் (ஹைதராபாத்), நேஷனல் லா இன்ஸ்டிட்யூட் யுனிவர்சிட்டி (போபால்), வெஸ்ட் பெங்கால் நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் ஜுடிசியல் சயின்சஸ்

(கொல்கத்தா), நேஷனல் லா யுனிவர்சிட்டி (ஜோத்பூர்), இதயதுல்லா நேஷனல் லா யுனிவர்சிட்டி (ராய்ப்பூர்), குஜராத் நேஷனல் லா யுனிவர்சிட்டி (காந்திநகர்), டாக்டர் ராம் மனோகர் லோகியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (லக்னோ), ராஜீவ் காந்தி நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் லா (பஞ்சாப்), சாணக்கியா நேஷனல் லா யுனிவர்சிட்டி (பாட்னா), நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் அட்வான்ஸ்டு லீகல் ஸ்டடீஸ் (கொச்சி) ஆகிய 11 சட்டக் கல்வி நிறுவனங்களுக்கு CLAT பொதுவான நுழைவுத் தேர்வு.

இத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 11ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன. பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 2ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத் தேர்வு மே 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விவரங்களுக்கு: new.clat.ac.in

பத்தாம் வகுப்பு... பாலீஷ் படிப்பு!

சென்னை கிண்டியில் உள்ள சென்ட்ரல் ஃபுட்வேர் டிரெயினிங் இன்ஸ்டிட்யூட்டில் ஃபுட்வேர் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு சேர விரும்பும் மாணவர்கள், ஜனவரி 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சிதான் இந்த ஓராண்டு பாலீஷ் படிப்புக்கான தகுதி. விவரங்களுக்கு: 04422301529.

இந்தியாவின் முதுகெலும்பாக..!

நாட்டில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு ஏப்ரல் 17ம் தேதி நடைபெறும். இதற்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 16ம் தேதிக்குள் கிடைக்கும்படி சேர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு: new.icar.org.in

ஊலல'லா' @ ஐ.ஐ.டி!

கான்பூர் ஐ.ஐ.டி. அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தில் எல்.எல்.பி. ஆனர்ஸ் மூன்றாண்டு படிப்பைத் தொடங்க உள்ளது. இப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஜனவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு மார்ச் 21ம் தேதி நடைபெறும்.விவரங்களுக்கு: 03222282237, 282222

அலகாபாத் வங்கியில் கிளார்க் ஆக ஆசையா?

அலகாபாத் வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜனவரி 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டித் தேர்வுகள் மார்ச் 14-ம் தேதி நடைபெறும்.விவரங்களுக்கு: new.allababadbank.in

 
கேரியர் கைடன்ஸ்
கேரியர் கைடன்ஸ்