ஸ்பெஷல் -1
Published:Updated:

உங்கள் குதிரையை சிரிக்க வைக்கலாமா?

உங்கள் குதிரையை சிரிக்க வைக்கலாமா?

 ##~##
உங்கள் குதிரையை சிரிக்க வைக்கலாமா?

ன்று உலகை இயக்குவது யார் என்று நினைக்கிறீர்கள்? ஒபாமாவா... ஒசாமாவா? இருவரும் இல்லை!

'இன்று உலகை ஆள்வது, உங்களையும் ஒருவராக உள்ளடக்கிய வாடிக்கையாளர்கள்!’ ஆம், வாடிக்கையாளர்களின் தேவைகளும் அவர்களுக்கான சேவைகளும்தான் இன்று பூமிப் பந்தை உருளவைக்கிறது!

உங்கள் குதிரையை சிரிக்க வைக்கலாமா?

இன்ஷூரன்ஸ், வங்கி, மருத்துவம், போக்குவரத்து, சில்லறை வர்த்தகம், தகவல் தொடர்பு என்று எந்தத் துறையில் நீங்கள் பணிபுரிந்தாலும், நித்தமும் நீங்கள் வாடிக் கையாளர்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அப்போது உங்கள் முதல் புன்னகை யில் தொடங்கி, விடைபெறும் கைகுலுக்கல் வரையிலான நடவடிக்கைகள்தான் உங்களின், உங்கள் நிறுவனத்தின் முன் சுழற்சியைத் தீர்மானிப்பதாக இருக்கும்.

'வெற்றிக் குதிரையில் பயணித்து, எல்லைக் கோட்டைத் தாண்டினேன்!’ என்று சொல்வோமே... வாடிக்கையாளர்கள் என்பவர்கள்தான் நாம் பயணிக்கும் அந்தக் குதிரைகள். நீங்கள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் வளைந்து கொடுத்து, மின்னல் வேகத்தில் இலக்கு சேர்க்க நீங்கள் அந்தக் குதிரையை இலகுவாகப் பழக்க வேண்டும். அதற்கு ஏற்ப உங்கள் 'குதிரை’யைப் பழக்கக் கற்றுத் தருகிறது 'Why My Horse Doesn’t Smile’ புத்தகம்!

• ஒரு மலருக்கு மணம் எவ்வளவு முக்கி யமோ, மனிதனுக்குத் தோற்றம் அவ்வளவு முக்கியம்! முதல் பார்வையிலேயே மற்றவர் கண்களுக்கு கண்ணியமாக, அழகாக, கௌர வமாகத் தோற்றம் அளிப்பது கிட்டத்தட்ட உங்கள் நோக்கத்தின் 80 சதவிகிதத்தை நிறைவு செய்துவிடும். அதன் பிறகான உரையாடல்கள் மீதம் உள்ள 20 சதவிகிதத்தைப் பார்த்துக் கொள்ளும். ஆக, பெரும்பான்மையான அந்த 80 சதவிகித பெர்ஃபார்மன்ஸுக்கு நீங்கள் எவ் வளவோ மெனக்கெட வேண்டும். இந்த விஷயத்தில் நாம் பொதுவாக அசட்டையாக இருக்கும் சில விஷயங்களைக் குறித்துக் கொள்ளுங்கள்...

'நாளை தலைப்புச் செய்தியில் நான் இடம் பெற வேண்டும் என்று நினைத்தால், இன்று எனது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்வேன்!’ என்று ஒருமுறை சொன்னார் ஹிலாரி கிளின்ட் டன். உண்மைதான்! நீங்கள் அலுவலகத்தில் அசகாய டார்கெட் பிடித்து சாதித்து இருப்பீர்கள், திருமண விடுப்பு முடிந்து அப்போதுதான் மீண்டும் அலுவலகம் வந்திருப்பீர்கள், உங்க ளுக்குப் பதவி உயர்வு கிடைத்திருக்கும். அந்தச் சமயங்களில் எல்லாம்கூட உங்களிடம் விசாரிக்காத சக ஊழியர்கள், உங்கள் ஹேர் ஸ்டைலைத் தலைகீழாக நீங்கள் மாற்றிக்கொண்டு சென்றால் 'என்ன ஆச்சு..?’ 'எங்கே முடி வெட்டுனீங்க?’, 'என்ன கண்றாவி இது?’ என்று ஆளாளுக்கு விசாரிப்பார்கள். தலைமுடி, சமயங்களில் உங்கள் தலையெழுத்தையே திசை திருப்பிவிடும். அதீதக் கவனம் அவசியம்!

உங்கள் குதிரையை சிரிக்க வைக்கலாமா?

தாத்தா, பாட்டிகள் நமக்கு பேய்க் கதை சொல்லி இருப்பார்களே... ஞாபகம் இருக் கிறதா? 'அந்தப் பேய்க்கு கை, காலில் எல்லாம் நீள நீளமான நகங்கள். அந்த நகத்தைவெச்சே இளவரசியை வளைச்சுப் பிடிச்சிருச்சாம்!’ - விரிந்த கண்களுடன் திகில் குறையாமல் நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பீர்கள். ஆக, பேய்களுக்கும் அரக்கர்களுக்கும்தான் நீள நீளமான நகங்கள் இருக்கும் என்பது மிக இளம் வயதிலேயே நம் மனதில் பதியம் போடப்பட்டுவிட்டது. எதிரில் இருக்கும் வாடிக்கையாளர் மனதிலும் அந்த நினைவுகள் இருக்கலாம். அவர் முன் தர்மசங்கடமாக உங்கள் விரல்களை மறைப்பதற்குப் பதில், அவற்றை எப்போதுமே சுத்தமாக, அளவாக வைத்திருங்கள்!

அகத்தின் அழகு, உள்ளத்தில் அல்ல; உள்ளங்காலில் தெரியும் காலம் இது! ஒருவரின் ஆளுமை, நடத்தை, மேன்மை குறித்தெல்லாம் அறிந்துகொள்ள, அவரது காலணிகளைக் கவனியுங்கள் என்கிறார்கள். உடல் பாகங்களிலேயே மிகக் கீழே தாழ்ந்திருப்பது கால்கள் தான். காயம், விபத்து, சுளுக்கு போன்ற சமயங்கள் தவிர, மற்ற நேரங்களில் கவனம் ஈர்க்காத பாகம் அது. கால்களுக்கே அந்த நிலை என்றால், காலணிகளுக்கு? முகத்துக்கு பவுடர், கேசத்துக்கு வாசனை எண்ணெய், அழகான ஆடை என்று பார்த்துப் பார்த்து அலங்கரிப் பவர்கள்கூட கிழிந்த, அடிப்புறம் சிதைந்து தரை தேய்க்கும் காலணிகளை அணிந்திருப்பார்கள். ஆனால், நீங்கள் நடக்கும்போது முந்திக்கொண்டு பார்வைக்குக் கிடைப்பவை காலணிகள்தான். ­'செருப்புதானே!’ என்று வெறுப்பு காட்டாமல், பட்டுச் சேலை, சட்டை முக்கியத் துவத்தை அவற்றுக்கு அளியுங்கள். அனைவரும் உங்களை விரும்பக்கூடும்!