ஸ்பெஷல் -1
Published:Updated:

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

##~##
எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

வீட்டில்...

 ''அப்பா... நான் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கப் போறேன். எனக்கு அது ரொம்பப் பிடிச்சிருக்கு!''

''அதெல்லாம் வேண்டாம். மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படி. வேலை கிடைக்கும். விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சு சினிமா, டிராமான்னு சுத்திட்டு இருக்கப் போறியா?''

''அப்பா, அது படிச்சா படம்தான் எடுக்க ணும்னு யார் சொன்னா. அதுலயே பல க்ரியேட்டிவ் வேலைகள் இருக்குப்பா!''

''என்ன காரணம் சொன்னாலும் வேண்டாம். நான் சொல்றதைப் படிச்சா படி. இல்லைன்னா, மாடு மேய்க்கப் போ!''

அலுவலகத்தில்...

''மிஸ்டர் குமார்... நம்ம கம்பெனி விளம் பர கான்ட்ராக்டை 'குப்தா அண்ட் குப்தா’வுக்கே கொடுத்துடலாம்ல. 25 வருஷமா அவங்கதான் பார்த்துட்டு இருக்காங்க. எந்தப் பிரச்னையும் இருக்காது. என்ன சொல்றீங்க?''

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

''ஆனா சார்... அவங்க 25 வருஷமா பண் றதையே இப்பவும் பண்ணிட்டு இருக்காங்க. புதுசா வந்திருக்கிற பல மீடியங்களைப்பத்தி அவங்களுக்குத் தெரியவே இல்லை. இப்ப 'ரெட் ரோஸ்’னு ஒரு புது கம்பெனி நல்லா பண்ணிட்டு இருக்காங்க. நிறைய புதுப் புது ஐடியாக்களோட நம்ம பிராண்ட் இமேஜையே பெரிசா பூஸ்ட்-அப் பண்ணுவாங்க!''

''அதெல்லாம் வேணாம் குமார். நேத்து வந்த பசங்க சின்னப்புள்ளத்தனமா ஏதாவது பண்ணிட்டா சிக்கலாயிடும். குப்தா குரூப்பையே வெச்சுக்கலாம். அவங்களையே ஓ.கே. பண்ணி டுங்க!''

- இவை போன்ற எத்தனை எத்தனையோ விவாதங்களைக் குடும்பத்தில், கல்லூரிகளில், அலுவலகங்களில், சமூகத்தில், நட்பில், காதலில் என வாழ்வின் அனைத்து நிலைகளிலும் கடந்து வந்திருப்போம்... கடந்துகொண்டும் இருப்போம். விவாதங்கள் விடை இல்லாமல் நீண்டுகொண்டே சென்றால், அது இரு தரப் புக்கும் இடையிலான இடைவெளியை அதிகம் ஆக்கும். விரிசல்களால் அந்த உறவு உடைந்த கண்ணாடியாகும். ஒவ்வொரு தனி மனிதரிடமும் இருக்கும் பிரத்யேக 'பெர்சனல் ஸ்பேஸை’ நிர்வகிப்பது எப்படி? வழிகாட்டுகிறார்கள் இவர்கள்...

'''நான் எந்த அளவு உங்களுக்குத் தேவைப்படுவேன்?’ என்பதைப் பொறுத்துதான் நமக்குள்ளே நிகழும் இடைவெளி வரையறுக்கப்படுகிறது!'' என்ற சிந்தனையுடன் துவக்குகிறார் சென்னை கிரேட் லேக்ஸ் மேலாண்மைக் கல்லூரிப் பேராசிரியர், முனைவர் வீரவல்லி.

''எனக்கு என்று ஒரு தனித்த அடையாளம் வேண்டும் என்று ஒருவர் நினைத்தால், அங்கு 'பெர்சனல் ஸ்பேஸ்’ எனப்படும் தனி மனித இடைவெளி முக்கியமாகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத் தேவை நிறைவேறும் வரை இடைவெளியைச் சரியாக நிர்வகிக்க வேண்டும். அது நிர்வகிக்கப்படாமல் போனால், இரு சாராருக்கும் இழப்புதான்.

உதாரணத்துக்கு, ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை செய்கிறீர்கள். நீங்கள் செய்யும் அந்த வேலைக்கு நிர் வாகம் உங்களுக்குப் பணம் தருகிறது. அவர்களுக்கு வேலை முடிய வேண்டும். உங்களுக்குப் பணம் வேண்டும். இது ஒரு வகையான தேவை. அப்படி இல்லாமல், வேலையும் சம்பளமும் தந்தது மட்டுமல்லாமல்; உங்களுடன் டீ சாப்பிடுவது, டென்னிஸ் ஆடுவது, குடும்ப நிகழ்வுகளுக்கு பரிசுகள் அளிப்பது போன்றவற் றிலும் கவனம் செலுத்தினால், அது இன்னொரு வகை யான உறவு. இதில் தேவை என்பது சமூக அந்தஸ்து, சக ஊழியர்களிடம் உங்களைப்பற்றிய மதிப்பு உயர்வது போன்றவை அடங்கும்.

மனிதர்கள் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை வரைந்துகொள்கிறார்கள். அந்த வட்டத்துக்குள் அவ்வளவு எளிதாக யாரையும் அண்டவிட மாட்டார்கள். ஒரே வகையான எண்ணம், ரசனை உடையவர்களைச் சந்தித்தால், அவர்களுக்கு அந்த வளையத்துக்குள் நுழைய அனுமதிப்பார்கள். நாம் நம் வாழ்க்கையின் 80 சதவிகிதத்தைப் பணி இடங்களில்தான் செலவழிக்கிறோம். வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும்போது அலுவல்பற்றிச் சிந்தித்தால், அந்த நேரம் நாம் அலு வலகத்தில் இருப்பதாகத்தான் அர்த்தம். பணி இடங் களில் உள்ள இடைவெளியைச் சரியாக நிர்வகிக்க ஒரே வழிதான் உண்டு. அது 'எம்பதி’ எனப்படும் உங்களைப் போலவே அடுத்தவரையும் எண்ணுதல். மற்றவர் பார் வையில் இருந்தும் பிரச்னையை அணுகுவது அவரின் சிரமத்தையும் புரிந்துகொள்ள உதவி செய்யும்!'' என்கிறார் வீரவல்லி.

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

''நாம் யாரிடம் பணி புரிகிறோமோ அவர் முன் நம் சொந்த விருப்பு, வெறுப்புகளைப் பெருமளவில் வெளிப்படுத்திக்கொள்ளக் கூடாது!'' என்று எச்சரிக்கிறார் லியோ ஆனந்த். திருச்சியைச் சேர்ந்த பிரபல மனித வள மேம்பாட்டு பயிற்சி மையமான 'ஈக்குவாட்ரிகா ஃபினிஷிங் ஸ்கூல்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இவர். '' 'அடிமைபோல நடத்தப்படுகிறோம்’ என்று பணியாளர்கள் எதிர்த்துப் போராடிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது எந்த நிறு வனமும் தங்களது பணியாளர்களை அடிமை மனோபாவத்தில் நடத்துவது இல்லை. இன்றைய உலகில் பணியாளர்கள் 'எதற்காக இந்தப் பணியைச் செய்கிறோம்’, 'இந்த வேலையைச் சரியாகச் செய்தால் தனக்கு எவ்வித நன்மைகள் கிடைக்கும்’ என்பதை எல்லாம் உணர்ந்தே செயல்படுவது பணியாளருக்கு மட்டுமல்ல;  அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். இதைப் புரியவைக்கும் பணி, நிறுவனத்துக்கும் பணியாளருக்கும் இடையே உள்ள மேலாளர்களின் பொறுப்பு. எனவேதான், மேலாளருக்கும் பணியாளருக்கும் இடையே 'பாஸ்’ எனப்படும் பணியிடத் தொடர்பையும் தாண்டி கொஞ்சம் நட்பும் தேவைப்படுகிறது.

குழுவாக இணைந்து செயலாற்றும் பணிகளில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது என்பது தவிர்க்க இயலாதது. அந்தப் பணிகளில் மேலாளரும் பணியாளரும் பணியின் சூழலுக்கு வெளியே எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் பணியின்போது குறிப்பிட்ட இடை வெளியைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மேலாளர் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் இரு வகையான குறிக்கோள்கள் இருக்கும். ஒன்று, தனிப்பட்ட குறிக்கோள்கள் மற்றது பணி இடக் குறிக்கோள்கள். இவை இரண்டும் பார்ப்பதற்கு வெவ்வேறாகத் தெரிந்தாலும் இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவைதான்!

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

மேலாளரின் திறன் என்பது ஒரே நேரத்தில் நிறுவனத்தின் எதிர்பார்ப்பு, பணியாளரின் எதிர்பார்ப்பு இரண்டுக்கும் சம அளவில் முக்கியத்துவம் கொடுப்பதில் அமைந்துள்ளது. இந்தக் காரணத்தி னால்தான், பணியாளரிடம் தனக்கு உள்ள இடைவெளியைக் குறைத்து, நெருக்கம் காட்டி, பிறகு நிறுவனத்தின் எதிர்பார்ப்பைப் புரியவைத்து, அதன் மூலம் பணியாளரின் எதிர்பார்ப்பு எப்படி நிறைவேறும் என்பதை விளக்க வேண்டியது அவசியமாகிறது! இதைச் சரிவரச் செய்யும் மேலாளர்களே பணியாளர்களிடம் சிறந்த முறையில் வேலை வாங்க முடியும். மேலாளர் மனம்விட்டுப் பேசினாலே போதும். பணியாளரின் பணிச்சுமை பாதி குறைந்துவிடும். 'Employer - employee’ என்னும் உறவு முறையைவிட 'co-ordinator - sub-ordinator’ எனும் உறவு முறையில் சிறந்த முடிவுகளைப் பெறலாம்.

ஒரு நிறுவனமோ அதன் மேலாளரோ அவர்களின் அனைத்து விருப்பு, வெறுப்புகளையும் பணியாளர்கள் மீது திணிக்கும்போது, பணியாளர்களுக்குப் பணியின் மீதான ஆர் வம் குறையுமே தவிர, அதிகரிக்காது. குறிப்பிட்ட விஷயங்களில் சுதந்திரம் அளித்து ஊக்குவித்து வேலை வாங்கினால் மட்டுமே இன்றைக்குப் பணியாளர்களின் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொணர்ந்து அவற்றை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். எனவேதான் வளர்ந்த நிறுவனங்கள், நிறுவனத்துக்கும் பணியாளர்களுக்கும் இடையே இடைவெளி யைக் குறைப்பதற்காகத் தங்கள் செலவில் விருந்துகள், சுற்றுலாக்கள், மனித வள மேம் பாட்டுப் பயிற்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்து, அவற்றின் மூலம் வெற்றியும் பெறுகின்றன!'' என்கிறார் லியோ.

''உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், இயந்திரமயமாக்கல், கணினிமயமாக்கல் போன்றவை இந்தக் கால கட்டத்தில் எந்த அளவு இணைகிறதோ அந்த அளவுக்கு இடைவெளிகளும் பெருகுகின்றன!'' என்ற கருத்துடன் தொடங்குகிறார் எல் அண்ட் டி (வால்வ்ஸ்) நிறுவனத்தின் மனித வளத் துறை மேலாளர் கணேசன். ''30 அல்லது 40 வருடங்களுக்கு முன்பு, சிறிய, பெரிய நிறுவனங்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியான parental approach அணுகுமுறையைக் கடைப்பிடித்தன. அதில் ஒரு நெருக்கம் இருந்தாலும், நேரம் தவறாமை, உற்பத்தி கட்டாயம், உற்பத்தியை வைத்துச் சம்பளம், தனி மனித ஒழுக்கத்தில் கண்டிப்பு, அளவான உரையாடல், இப்படி மனிதவளத்தின் குணநலன்கள் பின்னப்பட்டு இருந்தன. தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிவது, சொன்னதற்கு எல்லாம் தலை ஆட்டுவது - இவையே பணி யாளர் விசுவாசம் எனக் கருதப்பட்டது. இப் போது இவை மாறி வருவதால், 'ஈடுபாட்டுடன் கூடிய உறவு’ என்பது மறைந்து வருகிறதோ என்ற எண்ணம், தலைமுறை இடைவெளி என்பதைவிடத் தனி மனித இடைவெளியை அதிகப்படுத்துகிறது.

எப்படி இருக்க வேண்டும் பெர்சனல் ஸ்பேஸ்? ஆலோசனைகள்... அறிவுரைகள்...

இந்த இடைவெளியைத் தவிர்க்க, எல்லா நிறுவனங்களிலும், மனித வள மேம்பாட்டுத் துறையின் பங்களிப்பு நிறைய இருக்கிறது, இருக்க வேண்டும்! ஆனால், நடைமுறையில் பெரும்பாலான மனித வளத் துறை அதிகாரிகள், இவற்றைப்பற்றிப் பேசுவதோடு நின்றுவிடுகிறார்களே தவிர, நடைமுறையில் உணர்வுகள் மதிக்கப்படுவது இல்லை. அவை மதிக்கப்படும் இடங்களில் இடைவெளிபற்றி கவலைப்பட வேண்டியது இல்லை!'' என்கிறார் கணேசன்.

சரி, இந்த இடைவெளிபற்றி உளவியல் என்ன சொல்கிறது? சொல்கிறார் உளவியலாளர் ரெங்கராஜன். ''பொதுவாக, இடைவெளி என்பதை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தலைமுறை இடைவெளி. அதாவது, அப்பா பேச்சை மகன் கேட்பதில்லை வகை. இன்னொன்று, சமூக இடைவெளி. அதாவது, 'அவள்/அவன் என்னைப்பற்றி என்ன நினைக்கிறான். அவரைப்பற்றி நீங்கள் என்னவிதமான கருத்தாக்கங்களைக்கொண்டு இருக்கிறீர்கள் என்பது. இந்த இடைவெளி, ஏறக்குறைய எல்லா சமூகத்திலும் இருக்கிறது. உதாரணத்துக்கு, வட நாட்டில் நீண்ட நாள் கழித்து ஒருவரைப் பார்க்கும்போது, அவர்களைக் கட்டித் தழுவிப் பாசத்தைப் பரிமாறுவார்கள். ஆனால், இங்கு தொட்டுப் பேசுவது என்பது தவறான செய்கை. இந்த வகையான சின்னச் சின்ன வழக்கங்கள்கூடப் பெரிய இடைவெளிகளை ஏற்படுத்துகின்றன. மேற்கத்திய நாடுகளில், எந்த அளவு நாம் நெருங்கிப் பழகுகிறோமோ அந்த அளவு இருவருக்கும் நன்மையை உருவாக்கிவிடுகிறார்கள். அதே விதி இங்கும் எடுபடும் என்று நினைப்பது தவறு. மற்றபடி, இடைவெளியை எப்படி நிர்வகிப்பது என்பதைக் காட்டிலும், நம் இருவருக்குமான இடைவெளி எதுவரை என்பதை வரையறுத்துக்கொண்டாலே பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்'' என்கிறார் ரெங்கராஜன்.

'உங்கள் இருவருக்கும் இடையில் இடைவெளி இருக்கட்டும். அதோ... கோயில் தூண்கள் இடைவெளிவிட்டே நிற் கின்றன. வீணையின் தந்திகளும் இடை வெளிவிட்டே இருக்கின்றன!’-கலீல் ஜிப்ரா னின் இந்த வரிகள் என்ன உணர்த்துகின்றன?  தூண்கள் ஒட்டிக்கொண்டு இருந்தால், கடவுளை எப்படித் தரிசிக்க? வீணையின் தந்திகள் தூர தூரமாக விலகி இருந்தால், அபஸ்வரம்தானே எழும்? தேவையான இடைவெளிதான் அவசியமான நெருக்கத்தை உண்டாக்கும்!

பெற்றோர்- பிள்ளைகள்
உறவுச் சிக்கல்!

வீடு, கல்லூரி, சமூகம் என ஒவ்வொன்றிலும் இருக்கும் இடைவெளிகளை அணுகும் முறைபற்றிச் சொல்கிறார் மதுரை சமூக அறிவி யல் கல்லூரியின் முதல்வர் நாராயண ராஜா!

பெற்றோர் - பிள்ளை

இடைவெளியை நிர்வகிக்க...

பெற்றோர்களுக்கு...

உங்கள் பிள்ளைகளைக் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகப் பெயரளவில் மட்டுமல்லாமல்; முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசிப்பது அவர்களுக்குள் நம்பிக்கையை வளர்க்கும்!

 தயவுசெய்து உங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள்!

பிள்ளைகளின் ஆர்வத்துக்கு மதிப்பு அளியுங்கள்!

       பிள்ளைகளுக்கு...

 

பெற்றோர்கள் சொல்வது சரிதானா என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை மனதில் ஓட்டி, அது சரிதான் என்றால் அதன்படி செயல்படுங்கள். 'இவுங்களுக்கு ஒண்ணுமே புரியாது. எல்லாம் ஜெனரேஷன் கேப்’ என்று தப்பித்துக்கொள்ளப் பார்க்காதீர்கள்!

பெற்றோரிடம் ஆலோசித்துவிட்டுச் செய் கிறேன் என, உங்களால் தீர்க்க முடிகிற சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எல்லாம் அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்!

குடும்ப உறவுகள், பொருளாதாரச் சிக்கல் போன்றவற்றில் உங்களின் பங்கு என்ன என் பதை உணர்ந்துவிட்டால், பெற்றோர்களுக்கு உங்களைப்பற்றிய கவலை பாதி குறையும்!

 

நீங்கள் எப்படி?

 

யாரோடும் சேராமல் தனித்துச் செல்பவரா? நான்கு பேர் சிரித்துப் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தைத் தவிர்ப்பவரா நீங்கள்? எதிர்மறை எண்ணங்களி னால் அடிக்கடி அப்செட் ஆகும் நபரா? 'என்னை யாரும் மதிக்கவில்லை. என் கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை!’ என்றெல்லாம் அலுத்துக்கொள்பவரா?

ஆம் எனில், நீங்கள் 'இடைவெளி விட்டுப் பழகுகிறேன்’ என்ற போர்வை யில், சுய கழிவிரக்கத்தை வளர்த்து வரு கிறீர்கள். அதை உடனடியாகத் தவிருங் கள்!

 யார் உங்கள் திறமையைக் குறை கூறினாலும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல் உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்!

 ஒருவேளை உங்கள் திறமை நிரா கரிக்கப்பட்டால், உடனே கோபத்தில் வெம்பாமல், அடுத்தவர் மன நிலையில் இருந்து 'என்னப் பிரச்னை’ என்பதை ஆராய முயற்சியுங்கள்!

 

அவ்வப்போது*உங்கள் திறன் பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்!

 அனைவருடனும் கலகலவெனக் கலந்து பழகுங்கள். அது உறுதியான முடிவுகள் எடுக்கவும், அடுத்தவர்களின் மன நிலையைப் புரிந்து செயல்படவும் வசதியாக இருக்கும்!

 

ஆசிரியர் - மாணவர் கூட்டணி தத்துவம்!

    ஆசிரியர்களுக்கு...

 

மாணவர்களிடையே உங்களை நல்ல ஆசிரியராக வெளிப்படுத்திக்கொள்ள அவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு. அது உங்கள் இருவரையுமே பாதிக்கும்!

 மாணவர்களிடம் தோழமையாகப் பழகுகிறேன் என்று அதிகம் நெருங்கினால், ஒரு நல்ல விஷயத்தை நீங்கள் சொன்னால்கூட, அதைக் கேட்க யாரும் தயாராக இருக்க மாட்டார்கள். ஆகவே கொஞ்சம் 'டஃப்னஸ்’ இருப்பது நல்லது!

 தொடுதல், தோள் தட்டுதல், முதுகு தட்டுதல் போன்ற எந்த ஓர் உடல்ரீதியான செயல்களையும் கூடிய மட்டும் தவிர்ப்பது நலம். குறிப்பாக, எதிர்பாலினரிடத்தில்!

     மாணவர்களுக்கு...

 

எந்த ஓர் ஆசிரியரிடத்தில் நீங்கள் நெருங்கிப் பழகினாலும் அது இன்னோர் ஆசிரியருக்கு எரிச்சலையும் ஈகோவையும் ஏற்படுத்தும். இடம், பொருள், காலம் அறிந்து செயல்படுக!

 'நம்ம சார்தானே...’ என்று அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றிய எந்த ஒரு விசாரணையிலும் இறங்காதீர்கள்.

கூடிய மட்டும் 'இன்டலெக்சுவல் ரிலேஷன்ஷிப்’பை உருவாக்க முயலுங்கள்!

ந.வினோத்குமார், க.ராஜீவ் காந்தி, ச.ஸ்ரீராம், பூ.ஜெயராமன், படங்கள்:வெ.பாலாஜி