ஸ்பெஷல் -1
Published:Updated:

இதுதான் இப்படித்தான்! - பான் கார்டு பெறுவது எப்படி?

இதுதான் இப்படித்தான்! - பான் கார்டு பெறுவது எப்படி?

##~##
இதுதான் இப்படித்தான்!  - பான் கார்டு பெறுவது எப்படி?

பான் கார்டு என்றால் என்ன?

 நிரந்தரக் கணக்கு எண் என்ற 10 இலக்க எண்தான் PAN - (Permanent Account Number). இந்திய வருமான வரிச் சட்டம் பிரிவு 139  A-ன் படி, வருமான வரி செலுத்தும் ஒவ்வோர் இந்தியரும் இந்த எண்ணைப் பெற்றிருப்பது அவசியம். வங்கிக் கணக்கு துவங்க, போன் இணைப்பு பெற, வங்கிக் கணக்கில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் போடவோ, எடுக் கவோ, பான் எண் வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட், பங்குச் சந்தை முதலீடுகளுக்கும் பான் எண் அவசியம்!  

பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

தரகர்கள் மூலம் பான் கார்டு பெற

இதுதான் இப்படித்தான்!  - பான் கார்டு பெறுவது எப்படி?

  200-300 செலவு ஆகும். நாடு முழுக்க உள்ள ஐ.டி. பான் சேவை மையங்களில் ஏதாவது ஒன்றில் நீங்களே விண்ணப்பித்தால், கட்டணம்

இதுதான் இப்படித்தான்!  - பான் கார்டு பெறுவது எப்படி?

94-தான். http://www.utiisl.co.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக் கலாம்!

இதுதான் இப்படித்தான்!  - பான் கார்டு பெறுவது எப்படி?

தேவையான ஆவணங்கள்!

1. உங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் ஒன்றின் நகல். ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்று!

2.முகவரிக்கான ஆதாரம். மின் கட்டண ரசீது, குடும்ப அட்டை உள்ளிட்ட 15 ஆவணங்களில் ஏதாவது ஒன்று!

3.பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்!  

சில விளக்கங்கள்!

விண்ணப்பப் படிவத்தில் ஃபர்ஸ்ட் நேம், மிடில் நேம், சர் நேம் என்கிற பகுதி இருக்கும். இதில் ஃபர்ஸ்ட் நேம் என்கிற இடத்தில் உங்கள் பெயரையும், சர் நேம் என்கிற இடத்தில் உங்கள் தந்தையின் பெயரையும் எழுதவும். பொதுவாக தமிழர்கள் 'மிடில் நேம்’ வைத்துக் கொள்ளும் பழக்கம் இல்லாததால், அந்தக் கட்டத்தைக் காலியாக விட்டுவிடலாம். திரு மணமான பெண்களும் விண்ணப்பத்தில் தந்தை பெயரைத்தான் குறிப்பிட வேண்டும். தப்பித் தவறியும் கணவர் பெயரைக் குறிப் பிடாதீர்கள். ஏற்கெனவே பான் கார்டு வாங் கிய பெண்கள் திருமணத்துக்குப் பிறகு முக வரியை மாற்றிக்கொள்வது அவசியம். இந்தியா வைப் பொறுத்தவரையில் பெற்றோரைக் காப்பாளராகக் காட்டி, பிறந்த குழந்தைக்கு கூட பான் கார்டு வாங்க முடியும். விண்ணப்பித்த 15 நாட்களில் பதிவுத் தபாலில் பான் கார்டு வீடு தேடி வந்துவிடும்!