Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200

அனுபவங்கள் பேசுகின்றன!

நல்ல மனம் வாழ்க!

ஒரு கடையில் ஐம்பது ரூபாய் கொடுத்து, செல்போன் ரீ-சார்ஜ் செய்தேன். ஆனால், பத்து... பதினைந்து நிமிடங்களுக்கு மேலாகியும்... ரீ-சார்ஜ் ஆகவில்லை. கடைக்காரரிடம் போன் செய்து கேட்டபோதுதான் தெரிந்தது... என்னுடைய செல்போன் எண்களில் கடைசி எண்ணை அவர் தவறாக அழுத்தியிருக்கிறார் என்று! அதனால் இது வேறு ஒரு எண்ணுக்கு ரீ-சார்ஜ் ஆகிவிட்டது. ''என்னால் ஒன்றும் செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தில்தான் கேட்க வேண்டும்'' என்று கைவிரித்துவிட்டார் கடைக்காரர். கொஞ்சம் யோசனைக்கு பிறகு, எனக்குப் பதிலாக ரீ-சார்ஜ் ஆன நம்பருக்கே போன் செய்து விவரத்தைச் சொன்னேன் ''கவலைப்படாதீர்கள். இது சகஜம்தான். எனக்கு இந்தக் கஷ்டம் எப்படி இருக்கும் என்று தெரியும். நான் உங்களுக்கு ரீ-சார்ஜ் செய்கிறேன்'' என்று சொல்லி, அப்படியே செய்தார். பல மைல் தூரங்கள் தாண்டியிருந்தும், அந்த அன்பு நபர் செய்த உதவிக்கு, அவரை மனம் நெகிழ்ந்து, வாழ்த்தினேன்.

- எஸ்.வி.எஸ்.மணியன், கோவை

அனுபவங்கள் பேசுகின்றன!

நாசூக்கான 'நொறுக்ஸ்’!

அலுவலகம் கிளம்பும்போது, டைனிங் டேபிள் மீது கேக், பிஸ்கட் மற்றும் ஸ்நாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் என் தோழி. ''உன் பிள்ளைகள்தான் ஹாஸ்டலில் இருக்கிறார்களே... இதையெல்லாம் யாருக்காக எடுத்து வைக்கிறாய்?'' என்றேன்.

''வீட்டில் இருக்கும் மாமியாருக்கும், அவருடைய அம்மாவுக்கும்தான். பல்லுக்குப் பதமாக இருக்கும் அயிட்டங்களை எடுத்து இங்கே வைத்துவிட்டால், விருப்பமானதை சாப்பிட்டுக் கொள்வார்கள். சிலசமயம் அவர்களுக்கு இதுபோன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்களை சாப்பிட ஆசையிருந்தும், நம்மிடம் கேட்க வெட்கப்பட்டுக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். இப்படி வைக்கும்போது அவர்களுக்கு பிடித்தது எது என்பதை புரிந்துகொண்டு, செய்து கொடுக்கவும் முடிகிறது'' என்றாள்.

இப்போது நானும் இந்த நாசூக்கான பழக்கத்தை என் வீட்டிலும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டேன்!

- இந்திராணி தங்கவேல், சென்னை-31

அனுபவங்கள் பேசுகின்றன!
அனுபவங்கள் பேசுகின்றன!
அனுபவங்கள் பேசுகின்றன!

இனிப்பகத்தில் கற்ற இனிய பாடம்!

புகழ்பெற்ற ஸ்வீட் ஸ்டால் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். கடையின் மூத்த சேல்ஸ்மேன்... புதிதாக இணைந்தவருக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் கூறியது...

அனுபவங்கள் பேசுகின்றன!

''யாராவது வந்து ஸ்வீட்டோ, காரமோ கேட்டால், உதாரணத்துக்கு அரை கிலோ கேட்டால்... நாம் 400 கிராம் அளவுக்கு எடைத்தட்டில் போட்டு, பிறகு 100 கிராம் வரும் வரை போட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து 600 கிராம் அளவுக்கு அதிகமாக போட்டு, தட்டிலிருந்து பொருட்களை எடுக்கக் கூடாது. முன்பு சொன்னது போல் செய்தால் வாடிக்கையாள ருக்கு மனது நிறைவது போன்ற உணர்வைத் தரும். மற்றது, அவர் தனது பொருளை இழப்பது போன்ற ஃபீலிங்கை ஏற்படுத்தும்'' என்றார்.

இதைக் கேட்ட நான், 'தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் வேலையாக இருந்தாலும், அதை வித்தியாசமான, பயனுள்ள சிந்தனையுடன் செய்ய வேண்டும்’ என்கிற புதுப் பாடம் கற்றுக்கொண்டேன்.

- ஏ.ஜே.ஜபீன்பேகம், சத்தியமங்கலம்

அனுபவங்கள் பேசுகின்றன!

வாழ்த்தாக மாறிய வருத்தம்!

வசதியானவர்கள் வீட்டு திருமணத்துக்குச் சென்றிருந்தேன். ஆனால், உணவு பரிமாறும்போது கொஞ்சம் கொஞ்சமாக பரிமாறினார்கள். ஸ்வீட், வடை கூட 'வேண்டுமா’ என கேட்டு, தேவை என்றவர்களுக்கு மட்டுமே பரிமாறினார்கள். குழந்தைகளுக்கு  எல்லா

அனுபவங்கள் பேசுகின்றன!

அயிட்டங்களையும் பரிமாறாமல்... சாதம், பருப்பு, ஒரு சில பொரியல் வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டது. 'சாப்பாட்டில் இப்படி சிக்கனம் பார்க்கிறார்களே... கல்யாண விருந்தில் கஞ்சத்தனம் செய்யலாமா’ என்று  வருந்தியபடியே சாப்பிட்டோம்.

அப்புறம் தாம்பூலம் தரும் இடத்தில் இருந்த அறிவிப்பை பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது. அன்று மீதமாகும் உணவு அனாதை இல்லத்துக்கு செல்கிறதாம். அதனால் வீணாக்காமல் பரிமாறும்படி கூறியிருக்கிறார்கள். கவனமாக பரிமாறியதால் எல்லோர் இலையிலும் மிச்சம் இல்லாமலும் சாப்பிட்டதையும் பிறகு கவனித்தோம்.

குறை கூறிய வாயாலேயே வாழ்த்திவிட்டு வந்தோம்.

- பத்மஜா ராமகோபால், பெங்களூரு