Published:Updated:

`37 மாவட்டங்களின் நாட்டுப்புறக் கலைஞர்கள்!' - லயோலா கல்லூரியின் வீதி விருது விழா

வீதி விருது விழா
வீதி விருது விழா

நாட்டுப்புறப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயிக்குப் பரிவட்டம் கட்டி ஊரழைப்புடன் தொடங்கும் நிகழ்வில் பல்வேறு மண்ணிசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

லயோலா கல்லூரியின் மாற்று ஊடக மையம் வருடம்தோறும் நிகழ்த்தும் வீதி விருதுகள் திருவிழா, நாளை தொடங்கி இரண்டு நாள்கள் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.

மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி
மண்ணிசைப் பாடகி ‘கொல்லங்குடி’ கருப்பாயி

நாட்டுப்புறப் பாடகர் கொல்லங்குடி கருப்பாயிக்குப் பரிவட்டம் கட்டி ஊரழைப்புடன் தொடங்கும் நிகழ்வில் பல்வேறு மண்ணிசைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளின் பறையிசை, திருநர் கலைஞர்களின் நாடகம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. கலைநிகழ்ச்சிகள் தவிர்த்து கீழடி குறித்துத் தொல்லியல்துறை ஆணையர் உதயச்சந்திரனின் சிறப்புரை. மக்கள்கலை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரின் உரை ஆகியவை இடம்பெற உள்ளன.

download
'மாஃபா' பாண்டியராஜன்
'மாஃபா' பாண்டியராஜன்

இவை தவிர்த்து, எழுத்தாளர்கள் பாலு மணிவண்ணனின் 'வெத்தல', மயிலை பாலுவின் 'மெய்ப்பொருள் காண்பது அறிவு' உள்ளிட்ட பன்னிரண்டு நூல்களின் வெளியீடு. கடந்த ஆண்டில் வெளியான `'அசுரன், `இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', `ஒத்த செருப்பு' உள்ளிட்ட திரைப்படங்கள் மீதான உரையாடல் போன்றவை இடம்பெறுகின்றன. இரண்டாம் நாள் நிகழ்வில் தமிழகத்தின் 37 மாவட்டங்களைச் சேர்ந்த கலைக்குழுக்களின் கார்னிவல் வகையறா வீதி ஊர்வலம், வள்ளுவர் கோட்டம் தொடங்கி லயோலா கல்லூரி வரை நிகழ உள்ளது. தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 70 கலைஞர்களுக்கு வீதி விருது வழங்க இருக்கிறார்.

மக்கள் மறந்த கலைஞர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடக்கும் இந்த விழா தொடர்ந்து 7வது ஆண்டாக நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு