Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

Published:Updated:
##~##

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

200

உணருங்கள் உறவுகளே... நட்புகளே..!

கடன் வாங்கி வீட்டைக் கட்டி முடித்திருந்தாள் என் தோழி. வீட்டுக்கு வந்த உறவினர்கள், நண்பர்களில் சிலர், வாஸ்து சாஸ்திரத்தில் கரை கண்டவர்கள் போல... ''வாசலுக்கு முன்னாடி கிரில் கேட் போடக் கூடாது. உள்ளே நுழையும்போது தலைக்கு மேல் லாஃப்ட் வருவது போல கட்டக் கூடாது. கதவை இடதுபுறம் தள்ளுவது போல அமைக்கக் கூடாது'' என்றெல்லாம் சொல்ல... தோழி, கடுமையான பீதிக்கு உள்ளானாள். அதைக் கேட்டதிலிருந்து, அவளுடைய முகமே சரியில்லை. இதைக் கவனித்த தோழியின் கணவர், வந்தவர்கள் எல்லாம் சென்றபிறகு, ''தாலி கட்டியபின் குலம், கோத்திரம் பார்க்கக் கூடாது. கட்டிய வீட்டுக்கு வாஸ்து பார்க்கக் கூடாது'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னதுடன், 'நல்ல மனம் இருந்தால், எந்த தீய சக்தியும் நம்மை நெருங்காது' என்று தோழிக்குப் புரியவைத்தார். 'உறவுகள்... நட்புகள்...' என்று சொல்லிக் கொள்பவர்களே... எப்போதுதான் போக்கை மாற்றிக் கொள்வீர்களோ!

- ஆர்.வனஜா, போளூர்

அனுபவங்கள் பேசுகின்றன!

நெகிழ வைத்த 'அறிமுகம்’!

என் புதிய தோழியின் வீட்டுக்கு முதன்முறையாகப் போயிருந்தேன். அவள் வீட்டில் உள்ள எல்லோரையும் எனக்கு அறிமுகப்படுத்தினாள். இறுதியாக, வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை அறிமுகப்படுத்தும்போது அவளுடைய பெயரைச் சொல்லி, ''இந்தப் பெண்தான் இந்த வீட்டு வேலைகளில் எனக்குத் தேவையான உதவிகளை செய்பவர்'' என்று சொல்லவும், அந்தப் பெண்ணின் முகத்தில் மகிழ்ச்சிப் பூரிப்பு! குடும்பச் சூழ்நிலையின் காரணமாக வீட்டு வேலைக்கு வரும் பெண் களை, மற்றவர்கள் முன்பாக 'வேலைக்காரி’ என்று கூறும்போது, அவர்கள் மனதளவில் கூனிக் குறுகிவிடக் கூடும் என்பது புரிந்து, அதை அழகாக கையாண்ட தோழி மீது மரியாதை கூடியது. இனி, நானும் 'எனக்கு உதவி செய்பவர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிவெடுத்து விட்டேன்.

அனுபவங்கள் பேசுகின்றன!

- எஸ்.செல்வசுந்தரி, திருச்சி

செல்போனில் வேண்டாமே 'சங்கேதம்’!

உறவினர்களின் அலைபேசி எண்களை, தன் அலைபேசி கருவியில் பதிவு செய்யும்போது, வீட்டில் அந்த உறவினர்களைக் குறிக்கும் சங்கேதப் பெயர்களிலேயே பதிவு செய்திருப்பாள் தோழி (உதாரணம்: பிளேடு, பந்தா). ''அவரவர்களின் சொந்தப் பெயர் களிலேயே எண்களைப் பதிவு செய்!'' என்று பலமுறை கூறியும், அலட்சியமாக விட்டுவிட்டாள். ஒரு நாள் அவளுடைய உறவுக்கார பெண் வீட்டுக்கு வந்தபோது, தன்னுடைய எண், கேலியான பெயரில் அலைபேசியில் பதிவாகியிருப்பதை தற்செயலாக அறிந்து கொண்டதோடு... மிகுந்த வருத்தம் மற்றும் கோபத்துடன் அங்கிருந்து உடனடியாக வெளியேறியிருக்கிறாள். அன்றுதான் என் தோழிக்கு, தன்னுடைய தவறு எந்த அளவுக்கு விபரீதத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது நேரடியாக உறைத்தது. விளையாட்டுத்தனத்தால் நல்ல உறவுகள், நட்புகளை இழக்க நேரிடலாம்... ஜாக்கிரதை!

- வனிதா ஆனந்த், ஈரோடு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism