Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!

அனுபவங்கள் பேசுகின்றன!
##~##

'பாஸ்போர்ட்’ அவசரம்... பஞ்சரான உள்ளங்கள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 தெரிந்தவரின் மகன் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். திருமணம் முடிந்ததும் மாப் பிள்ளையும், பெண்ணையும் வாழ்த் தலாம் என்று நினைத்திருந்தால்... அதற்குள்ளாக பெண்ணும், மாப்பிள்ளையும் பெற்றோருடன் காரில் ஏறி வெளியில் சென்றுவிட, திருமணத்தை பதிவு செய்யச் சென்றிருப்பதாகச் சொன்னார்கள் அங்கிருந்தவர்கள். 'ஒரு மாத விடு முறைக்குள் மனைவிக்கும் பாஸ் போர்ட் எடுக்க வேண்டும்' என்கிற அவசரம் வேறாம்!

திருமணம் என்பது தீபாவளி, பொங்கல் மாதிரி வருடா வருடம் வரும் நிகழ்வா... வாழ்வில் ஒருமுறை வருவதுதானே? அதை நிதானமாகச் செய்து, பெரியவர்களின் ஆசியுடன் மற்றவர்களின் வாழ்த்துக்கள், அன்பளிப்புகளுடன் கொண்டாடிவிட்டு, மறுநாள் பதிவு அலுவலகத்துக்குச் செல்லக் கூடாதா? வந்தவர்களை உபசரிக்கக்கூட ஆள் இல்லை. திருமணத்துக்கு வந்திருந்த பலர் சாப்பிடாமலேயே சென்றுவிட்டனர். அழைப்புக்கு மரியாதை கொடுத்து, பலவித வேலைகளுக்கு நடுவே, மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இப்படி மனம் நோக செய்யலாமா?!

- அமுதா அசோக்ராஜா, திருச்சி

பொறுப்பின்மையை புறக்கணிப்போம்!

ன் அத்தை வீட்டுக்கு நான் சென்றபோது, சீரியல் பார்த்துக் கொண்டிருந்தவர், விளம்பரம் வந்ததும் சேனல் மாற்றினார். ஒரு சேனலில் செய்திகள் ஓடியதும் உடனே அதை விருட்டென மாற்றிவிட்டார். 'என்னவோ பெண்கள் பார்க்கவே கூடாத நிகழ்ச்சி’ போல, செய்திகள் வரும்போது வேண்டா வெறுப்பாக சடாரென திருப்பியது, என்னை வருத்தத்தில் ஆழ்த்தியது. இந்த சமுதாயத்தையும் நாட்டையும் முன்னேற்றுவதில் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, நாட்டு நடப்பை நாம் அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இனியாவது, இந்த அலட்சியப் போக்குக்கு விடை கொடுப்போமா தோழிகளே..?!

- ஆர்.நந்தினி, வந்தவாசி

அனுபவங்கள் பேசுகின்றன!

கருணையும் கற்றுக் கொள்ளுங்கள்!

ண்மையில் பேருந்தில் பயணித்தபோது, ஓர் இளம் தாய், பச்சிளம் குழந்தையுடன் ஏறினாள். அனைத்து இருக்கைகளும் நிரம்பிஇருந்ததால், பலரும் நின்று கொண்டே வந்தோம். ஆனால், குழந்தையுடன் நிற்க முடியாமல் தவித்த அந்தத் தாய், அரட்டையில் மூழ்கியபடி அமர்ந்திருந்த கல்லூரி மாணவிகள் சிலரிடம், இடம் தருமாறு கேட்க... அவர்களோ காதில் வாங்காததுபோல பேச்சில் மூழ்கிஇருந்தனர். அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்த 70 வயது பெண்மணி, சட்டென்று எழுந்து... இளம் தாய்க்கு இடம் கொடுத்தார்.

நாளைய தாய்மார்களே... கல்லூரி பாடம் மட்டும் படித்தால் போதாது... கொஞ்சம் கருணையும் கற்றுக் கொள்ளுங்கள் வாழ்க்கைக்கு!

- இ.டி.ஹேமாமாலினி, அயனாவரம்

சூப்பர் 'கிவ் அண்ட் டேக்’ பாலிஸி!

கரின் விரிவாக்கப் பகுதியில் புதிதாக வீடுகட்டி, குடியேறியிருக்கும் என் தோழியைப் பார்க்கச் சென்றிருந்தேன். வழியனுப்ப பஸ் ஸ்டாப் வரை வந்தவள். தெருக்கோடியில் இருக்கும் சிறிய பலசரக்குக் கடையில், பால் பாக்கெட் காய்கறிகள், மேலும் சிறிதளவு பொருட்களை வாங்கினாள். 'நகரத்தில் அவளுடைய கணவர் வைத்திருக்கும் கடையிலேயே எல்லா பொருட்களும் கிடைக்கும். கடைக்கு அருகிலேயே பெரிய காய்கறி மார்க்கெட் உண்டு. தேவையானவற்றை அவரே வாங்கி வரலாமே’ என்று என் மனதில் ஓடிய எண்ணத்தைப் புரிந்து கொண்ட தோழி, விளக்கம் அளித்தாள்...

''இந்த மாதிரி கடைகள்தான் வழிகாட்டி பலகை மாதிரி! அவசரத்துக்கு, அவசியத்துக்கு என்று தேவையானவை சிலவற்றை வாங்கி, 'நாம் இன்னார்’ என்று ஒரு நல்லுறவு வைத்துக் கொண்டால்... போஸ்ட்மேன், கூரியர், கேஸ், உறவினர் என நம்மைத் தேடி வருபவர்களுக்கு அடையாளம் சொல்லி வழிகாட்டுவார்'' என்றாள்.

இது ஒரு சூப்பர் 'கிவ் அண்ட் டேக்’ பாலிஸி என்று எனக்கு தோன்றியது. சரிதானே தோழிகளே?!

- என்.சாந்தினி, மதுரை