Published:Updated:

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

கேரியர் கைடன்ஸ்!

Published:Updated:
கேரியர் கைடன்ஸ்!

  வி.ஏ.ஓ. தேர்வு நாள் அறிவிப்பு  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருவழியாக வி.ஏ.ஓ. தேர்வு நாளைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துவிட்டது. 27.02.2010 அன்று வி.ஏ.ஒ. தேர்வு நடைபெறும். இன்னும் சரியாக இரண்டு மாதங்கள். இன்றிலிருந்து படிக்கத் தொடங்கினால்கூட, இந்தத் தேர்வில் தேறி விடலாம். மிகவும் எளிமையான தேர்வு. தயாரிப்பைத் தொடங்குங்கள். வெற்றி பெறுங்கள்!

தேனா வங்கிப் பணி

தேனா வங்கி சிறப்பு அதிகாரி, புரொஃபஷனல் அதிகாரி மற்றும் கிளார்க்குகள் உட்பட காலியாக உள்ள 702 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. ஆன் லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். புரொஃபஷனல் அதிகாரிகள், சிறப்பு அதிகாரிகள் பணிக்கு 28.12.2010-க் குள்ளும், கிளார்க் பதவிக்கு 03.01.2011-க் குள்ளும்  விண்ணப்பிக்க வேண்டும். கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட பிற விவரங் களுக்கு www.denabank.com தளம் க்ளிக்கவும்!

கடற்படையில் மாலுமி பணி!

ந்தியக் கடற்படை மாலுமிப் பணியில் சேர 1.8.1990 முதல் 31.7.1994-க்குள் பிறந்த, திருமணம் ஆகாத ஆண்கள் அழைக் கப்படுகின்றனர். கணிதம், இயற்பியல் பாடங் களை முக்கியப் பாடங்களாகவும், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை விருப்பப் பாடமாகவும் படித்து, பிளஸ் டூ-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு கள் நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர் களுக்கு கடற்படை சார்ந்த அடிப்படைப் பயிற்சிகள் 6 மாத காலம் அளிக்கப்படும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க 25.12.2010 கடைசி தேதியாகும். பிற விவரங்களுக்கு http://www.nausena-bharti.nic.in/ தளம் க்ளிக்கவும்.  

கேரியர் கைடன்ஸ்!

பி.ஏ.,பி.எஸ்ஸி., பட்டதாரிகளுக்கு ராணுவத்தில் பணி!

இந்திய ராணுவத்தில் ஹவில்தார் பிரிவில் பணிபுரிய நில அளவையாளர்களுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. கணிதப் பாடத்துடன் பி.ஏ., அல்லது பி.எஸ்ஸி., பட்டம் பெற்ற 20 முதல் 25 வயதுக்கு உட் பட்டவர்கள் 25.12.2010 தேதிக்குள் விண்ணப் பிக்கவும். மேலும், விவரங்களுக்கு www.indianarmy.gov.in தளம் க்ளிக்கவும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பி.எட்., சேரலாம்!

ஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலை தூரக் கல்வியில் 2011-ம் கல்வியாண்டில் பி.எட்., படிப்பதற்கான சேர்க்கையை அறிவித்து உள்ளது. இளநிலை அல்லது முதுநிலை பட்டப் படிப்புடன் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம். நுழைவுத் தேர்வு இல்லை. விண்ணப்பங்களை அனுப்பக் கடைசித் தேதி 14.01.2011. மேலும் விவரங்களுக்கு http://www.tamiluniversity.ac.in/ தளம் க்ளிக்கவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism