Published:Updated:

நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?

நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?

நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?

நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?

Published:Updated:
நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?
##~##
'அ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஞ்சாதே’யில் பளிச் என்று படம்பிடித்த கலைஞன் மகேஷ் முத்துசுவாமி. 'நந்தலாலா’ திரையில் பிரதிபலிக்கவைத்தது இன்னும் பெரிய கேன்வாஸ். இங்கே மகேஷ் சொல்வது அவரது வாழ்க்கை.

''பிறந்த ஊர் பழநி. படித்தது, வளர்ந்தது எல்லாம் திண்டுக்கல். அப்பாவுக்கு அரசுக் கருவூலத்தில் வேலை. அம்மா வரலாற்றுப் பேராசிரியர். சினிமாவுக்கான எந்த அடை யாளமும் இல்லாத குடும்பம். ஆனால், பள்ளிக் கால விடுமுறைகள் முழுவதும் சினிமாவில்தான் கரையும். நண்பர்கள் அன்பழகன், சரவணகுமார், வாஷிங்டன், சர்புதீன் என நான்கு பேர் கொண்ட குரூப் தியேட்டர் தியேட்டராகச் சுற்றுவோம். ஆனால், சினிமாவைப் பார்க்கும் ஆசை மட்டுமே அப்போது இருந்தது. சினிமா வுக்குள் என்னைப் பார்க்கும் துடிப்பு உள்ளுக்குள் இருந்ததை நான் அறியவில்லை. 'ஊமை விழிகள்’ பார்த்துவிட்டு, பாதி ராத்திரி வரை நண்பர்களோடு அதைப்பற்றி பேசிப் பேசியே தூங்காமல் இருந்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கு.

கோவையில் இன்ஜினீயரிங் சேர்ந்தேன். பி.இ.,மெக்கானிக்கல் படிப்பு. அந்தச் சமயம் தான் சக மாணவன் முத்துச்செல்வன் அறிமுகம் கிடைத்தது. எப்பவும் ஸ்டில் கேமராவோடுதான் திரிவான். அவனைப் பார்க்கப் பார்க்க எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் பின்னாடியே திரிஞ்சேன். பழகப் பழக... எனக்கும் கேமரா மேல் காதல் வந்துடுச்சு. எங்கே எதைப் பார்த்தாலும் மனசு அதற்குள் ஃபிரேமையும் லைட்டிங்கையும் தேடி அலையும். நான் எடுத்த சில புகைப்படங்கள் பார்த்து நண்பர்கள் 'நல்லா எடுத்திருக்கே’னு சொன்னப்போ, உள்ளுக்குள் சின்னதா ஒரு பிடிமானம் ஏற்பட்டது. படிப்பு முடிஞ்சதும் பஜாஜ் ஆட்டோ கம்பெனியில் நல்ல வேலை. வீட்ல எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.

வேலைக்காக புனே போனேன். மனசுக் குள்ள போட்டோகிராஃபியைச் சுமந்துகிட்டு ஆட்டோமொபைல் கம்பெனியில் வேலை பார்க்க முடியலை. வேலை இல்லாதப்பலாம் புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் போக ஆரம் பிச்சேன். பிறகு, வேலை இருந்தப்பவும் அதை விட்டுட்டு இன்ஸ்டிட்யூட்டில் திரிஞ்சேன். நிறைய பழகினேன். நல்ல படங்கள் பார்த்தேன். 'இதுதான் சினிமா’ன்னு புரிஞ்ச இடம் அங்கே தான். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு விண்ணப் பித்தேன். விஷயம் தெரிஞ்சதும் வீட்டில் ஷாக். நான் சொன்னதை, என் கனவை வீட்ல யாராலும் புரிஞ்சுக்க முடியலை. நல்ல படிப்பு படிச்சுட்டு, நல்ல வேலையில் இருக்கும்போது, அதை விட்டுட்டு சினிமா வுக்குப் போறதை ஜீரணிக்க முடியலை அவங்களால.

நான் மகேஷ் முத்துசுவாமி ஆனது எப்படி?

நான் விடாப்பிடியா இருந்தேன். புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் மிக அருமையாக மூன்று வருடங்கள். அங்கே நான் பார்த்த படங்கள், சந்தித்த இயக்குநர்கள், படித்த புத்தகங்கள்... ஒவ்வொண்ணும் ஒவ்வொரு புது விஷயத்தை எனக்குக் கற்றுத் தந்து புதுக் கதவைத் திறந்துவிட்டது. அங்கே 'சைத்ரா’னு டிப்ளமோ ஃபிலிம் ஒண்ணு பண்ணினேன். அது ஐந்து தேசிய விருதுகளை அள்ளியது. ஆஸ்கர் குறும்பட விருதுக்காக இந்தியா சார்பில் 'சைத்ரா’ பரிந்துரைக்கப் பட்டது. அந்தப் படம் பார்த்துவிட்டு, சத்யஜித் ரேயின் கேமராமேன் சுபோத்ரா மித்ரா, 'இது மிகச் சிறந்த படம்’னு பாராட்டி யது மறக்க முடியாத நிகழ்வு. படித்து முடித் ததும் பி.சி.ஸ்ரீராமிடம் இணைய விரும் பினேன். சிறிய உரையாடலுக்குப் பிறகு  என்னை அவரோடு இணைத்துக்கொள்ளச் சம்மதித்தார். நான்கைந்து வருடங்கள் சினிமா உலகின் யதார்த்தமான அனுபவம் பழகினேன்.

புவனா என்கிற அறிமுக இயக்குநரோடு 'ரைட்டா, தப்பா’, பி.சி. சார் இயக்கத்தில் 'வானம் வசப்படும்’. பிறகுதான் மிஷ்கினின் அறிமுகம். 'சித்திரம் பேசுதடி’, 'அஞ்சாதே’, 'நந்தலாலா’ என வேலை பார்த்தேன். பிறகு, பாண்டிராஜுடன் 'வம்சம்’. இதற்கு இடையில் இந்திப் படங்களும் அமைந்தன. இப்போது 'அலிபாபாவும் 41 திருடர்களும்’ இந்தி அனிமேஷன் படத்துக்காக வேலைபார்த்து முடித்திருக்கிறேன். அனிமேஷன் படங்கள் குழந்தைகளுக்காகவே என்பதை முறியடிக்க விரும்பி தயாராகி இருக்கும் படம் இது. அலிபாபாவுடனும் 41 திருடர்களோடும் ஒரு மும்பை சிறுவன் பயணிக்கிற கற்பனை கலந்த சினிமா இது.

எனக்குப் பிடித்தமான விஷயங்களை மட்டுமே என்னால் விருப்பத்தோடு செய்ய முடியும். டெக்னிக்கலும், அழகியலும் சம்பந்தப்பட்ட மீடியாதான் எனக்குச் சரி வரும் என நினைத்தேன். அதேபோன்ற துறையில் இப்போது வேலை பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை நமது எதிர்காலத்தை நாமே திட்டமிட வேண்டும். வெறும் ஆசை மட்டும் உதவாது. அதற்கான தகுதியை வளர்த்துக்கொண்டால் மட்டுமே உயரம் நோக்கிப் போக முடியும். அதிர்ஷ்டம், நேரம் இவற்றுக்கு எல்லாம் என் கேரியரில் மட்டுமில்லை; யாருடைய கேரியரிலும் இடம் இல்லை. நமது எதிர்காலத்தைப் பள்ளியின் முடிவிலேயே நிச்சயித்துக்கொள்வது நல்லது. நான் இன்ஜினீயரிங் படித்தது எனக்குப் பலவிதங்களில் உதவுகிறது. கேமராவின் டெக்னிக்கல் அம்சங்களைச் சுலபமாகக் கையாள முடிகிறது.

எந்தச் சமயத்திலும் தொழிலில் திருப்திபட்டுவிடுவது ஆபத்தானது. கேமராவின் ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்புகளையும் நான் அப்டேட் செய்துகொண்டே இருக்கிறேன். நாம் நம்மைப் புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். நிறைந்த அறிவு, கடின உழைப்பு, பழகும் திறன் இவற்றைக் கைக்கொண்டால் நீங்கள்தான் எப்போதும் முதலிடத்தில் இருப்பீர்கள்!''

படம்:கே.ராஜசேகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism