Published:Updated:

இந்த புன்னகை விற்பனைக்கு!

சேல்ஸ் ரெப் வேலை சிரிப்பா... சிறப்பா?

இந்த புன்னகை விற்பனைக்கு!

சேல்ஸ் ரெப் வேலை சிரிப்பா... சிறப்பா?

Published:Updated:
##~##
''ஹேய்... நீ பிரசன்னாதானே?''

 ''ஆமா... நீங்க... நீ... மச்சான்... டேய் ஆனந்த்.... நல்லா இருக்கியாடா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பங்காளி, பார்த்து எவ்ளோ நாளாச்சுடா? எப்படி இருக்கே? பி.காம்., படிச்சேனு கேள்விப்பட்டேன். இப்போ என்னடா பண்ற?''

''மார்க்கெட்டிங் ரெப்பா இருக்கேன்டா!''

''ஓ... ரெப்பா!'' - பிரசன்னாவிடம் அலட்சியப் பார்வை.

''நீ என்னடா பண்ற?''

''ஹே... ஐ யம் அன் இன்ஜினீயர்டா. மன்த்லி

இந்த புன்னகை விற்பனைக்கு!

25,000 பேக்கேஜ். உன் பேக்கேஜ் எவ்ளோ?''

''மன்த்லி

இந்த புன்னகை விற்பனைக்கு!

30,000 ப்ளஸ் இன்சென்டிவ்ஸ்

இந்த புன்னகை விற்பனைக்கு!

2,000 ப்ளஸ் அலவன்ஸ்

இந்த புன்னகை விற்பனைக்கு!

3,000 ப்ளஸ் பெட்ரோல் அலவன்ஸ்

இந்த புன்னகை விற்பனைக்கு!

2,000 ப்ளஸ் அவுட் ஸ்டேஷன் பேட்டா ப்ளஸ்...'' என ப்ளஸ்களை ஆனந்த் அடுக்கிக்கொண்டே செல்ல, பேஸ்தடித்து நின்றான் பிரசன்னா.

இந்த புன்னகை விற்பனைக்கு!

ஆம், இது நிஜம் நண்பர்களே! 'கழுத்துல டை, கையில பை, வாயில பொய்’ என்று சேல்ஸ் ரெப்கள் கிண்டலுக்குள்ளானது அந்தக் காலம். உழைக்க உழைக்கக் கொட்டிக் கொடுக்கும் வேலை என்றால், இன்று அது சேல்ஸ் ரெப் வேலைதான்! ஏ.சி அலுவலகத்தில் இல்லாமல் அலைந்து திரியும் வேலை என்பதைத் தவிர, மென்பொருள் நிறுவன ஊழியர்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத, பெரும்பாலான சமயங்களில் அதைக் காட்டிலும் அதிக வருமானம் அளிக்கும் வேலை இதுதான். சேல்ஸ் ரெப் ஆகச் சேர்ந்த மூன்றே மாதங்களில், டார்கெட் வீழ்த்தி, ஏரியா சேல்ஸ் மேனேஜர்களாக உயர்ந்தவர்கள், நிச்சயம் உங்கள் அருகிலும் இருப்பார்கள். அந்த வேலை பிடிக்காமல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நிறுவனம் தாவும் பட்சிகளும் இருக்கிறார்கள். இத்துறை நாணயத்தின் இரு பக்கத்தையும் அலசுகிறார்கள் இவர்கள், தங்களின் அனுபவங்களின் வாயிலாக...

''இரண்டு வகை மார்க்கெட்டிங்கில் இன்று வேலை வாய்ப்புகள் பிரகாசம். இன்ஷூரன்ஸ், பங்கு வர்த்தகம் போன்ற ஃபைனான்ஷியல் மார்க்கெட்டிங் ஒன்று. மருந்துகள், புத்தகங்கள் போன்ற நுகர்பொருட்களை விற்கும் 'புராடக்ட் மார்க்கெட்டிங்’ இரண்டு. இந்த இரண்டிலும் வாடிக்கையாளர்களை மனம் குளிரவைத்தால் அன்றி, வேலைக்கு ஆகாது. ஆனால், மிகச் சில தந்திரங்கள் மூலம் அதை மிகவும் எளிதாகச் சாத்தியப்படுத்தலாம்!'' என முக்கிய விதி சொல்லித் துவக்குகிறார் ரிலையன்ஸ் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் பாலா.

இந்த புன்னகை விற்பனைக்கு!

''புதிய சேவைகளோ, பொருட்களோ உங்கள் நிறுவனத்தின் மூலமாகச் சந்தைக்கு வரும் ஒவ்வொரு முறையும், அதைப்பற்றி ஏற்கெனவே உள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். தவிர, அவர்களின் குடும்ப விழாக்களில் கலந்துகொள்ளுதல், பிறந்த நாளுக்கு வாழ்த்துதல் என சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தி, நட்புரீதியாகப் பழகி வந்தால், அது நமக்கும் நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  பெரிதும் உதவும்.

'இந்த பாலிஸி உங்களுக்கு நிச்சயம் லாபம் தரும்’ என்று பிரெய்ன் வாஷ் பண்ணச் சொல்லி, நிறுவனங்கள் உங்களை வற்புறுத்தும். ஆனால், அந்த இடத்தில் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். நிறுவனம் இரண்டாம்பட்சம். நிறுவனம் சொல்படி செய்தால், வேலை நடக்காது. நாளடைவில் நிறுவனத்திலேயே உங்கள் மீதான மதிப்பு குறையும். ஆக தனி மனித அடிப்படையில், ஒவ்வொரு வாடிக்கையாளரையும் அணுகுங்கள். வாடிக்கையாளரின் தேவை அறிந்து அவருக்கு ஏற்ற பாலிஸிகளை முன்வைப்பதுதான் சிறந்தது. வாடிக்கையாளரின் நம்பிக்கையைக் காப்பாற்றுவதுதான் இந்தத் துறையில் உள்ள உண்மையான தொழில் தர்மம்!'' என்கிறார் பாலா.

''ஒரே ஒரு டிகிரியோடு படிப்பை முடித்துக்கொள்ளும் இளைஞர்களுக்கான வரப்பிரசாதப் பணி மெடிக்கல் ரெப் வேலைதான். ஏனென்றால், இந்தப் பணிக்கு அடிப்படைத் தகுதி ஏதோ ஒரு டிகிரி மட்டும்  தான்!'' - உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இளையராஜா. ஏழு ஆண்டுகளாக மருத்துவப் பிரதிநிதியாகப் பணிபுரிபவர், பல இளைஞர்கள் இந்தப் பணியில் சேர, இலவச ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இந்த புன்னகை விற்பனைக்கு!

''பட்டப்படிப்பை முடித்திருந்தால் போதும். மதிப்பெண்கள்கூடக் கணக்கில்லை. இன்றைய நிலையில், மாதம்

இந்த புன்னகை விற்பனைக்கு!

15 ஆயிரத்தில் இருந்து

இந்த புன்னகை விற்பனைக்கு!

20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்க நிறுவனங்கள் தயார். சம்பளம் தவிர, இதரப் படிகளும், செயல்பாட்டுத் திறனுக்கேற்ற ஊக்கத்தொகையும் உண்டு. இத்தனைக்கும் அபார ஆங்கிலத் திறன்கூட அவசியம் இல்லை. ஆங்கில உரையாடலைப் புரிந்துகொண்டு, ஓரிரு வார்த்தைகளில் பதில் அளிக்கும் திறனே போதும். ஆனாலும், இந்தத் துறையில் முத்திரை பதிக்க, ஆங்கிலப் புலமை ப்ளஸ் உடல் சார்ந்த அறிவியலிலும் தேர்ச்சி பெறுவது நல்லது. ஆர்வம், தன்னம்பிக்கை, சிக்கலான நேரங்களில் முடிவு எடுக்கும் திறன் இவற்றைத்தான் ஒரு நிறுவனம் தன்னிடம் வேலை பார்க்கும் நபர்களிடம் எதிர்பார்க்கிறது. ஆர்வம் மட்டும் உங்களிடம் இருந்தால், மற்ற அனைத்துக்கும் நிறுவனங்களே பயிற்சி அளிக்கும்.  பன்னாட்டு நிறுவனங்களில் சேரக் குறைந்தது ஆறு மாத முன் அனுபவம் வேண்டும். எனவே, முதலில் ஏதாவது சிறிய நிறுவனத்தில் ஒரு வருடம் நன்றாகப் பணிபுரிந்துவிட்டு, பெரிய நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருந்துகளை புரமோட் செய்வதற்கான அனைத்து வசதிகளையும் நிறுவனங்களே அளித்துவிடும். இந்தப் பணியில் நாம் செய்யும் வேலை என்பது, தினமும் 8 முதல் 10 மருத்துவர்களைப் பார்ப்பதுதான். ஒரு மருத்துவரிடம் மூன்று நிமிடங்கள் என்றாலும் நாம் ஒரு நாளில் பார்க்கும் வேலை நேரம் அதிகபட்சம் ஒரு மணி நேரம்தான்! ஆனால், அந்த மூன்று நிமிடங்களில் நாம் நம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறோம் என்பதுதான், நமது மருந்துகளின் விற்பனையை மட்டுமல்லாது நமது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும். இதில் மருத்துவரிடம் நமது மருந்துகளின் செயல்திறன் (efficacy), கொடுக்கும் முறைகள் (dosage) நோய் அறிகுறிகள் (indications), அவற்றின் பக்க விளைவுகள் (side effects) ஆகியவற்றை விளக்குவதே பணி ஆகும்.

இதில் வசதி என்னவென்றால், நம்மைக் கண்காணிக்கவோ, நிர்வகிக்கவோ யாரும் கிடையாது. நீங்களே உங்கள் வேலை நேரத்தையும், வேலையையும், நிர்வகித்துக்கொள்ளலாம். நிறுவனங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பெர்ஃபார்மென்ஸ் மட்டுமே!'' என்று இளைஞர்களை அழைக்கிறார்.

மார்க்கெட்டிங் பணி நிரந்தரம் இல்லை என்று கூறுபவர்களுக்கு, தனது 28 வருட அனுபவத்தால் பதிலடி கொடுக்கிறார் வெங்கடேஸ்வரன். ''இந்தப் பணியில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பது உண்மைதான்! ஆனால், சவால்களும் வாய்ப்புகளும் ஒன்றையன்று சார்ந்துதான் வரும். 1983-ல் நான்   பி.எஸ்ஸி., வேதியியல் முடித்தபோது, அரசு வேலை சாதாரணமாகக் கிடைத்திருக்கும். ஆனால், செக்கு மாடுபோல வேலை செய்ய ஆர்வம் இல்லாததால், வேண்டி விரும்பி மார்க்கெட்டிங் வேலையில் சேர்ந்தேன். ஒரு நல்ல நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்த பின்னர், பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தின் பெயருக்கே என்னை நம்பிப் பெண் கொடுத்தார்கள். சென்ற வாரம்தான் இரண்டாவது கார் வாங்கினேன். 32-வது வயதிலேயே சொந்த வீடு கட்டிவிட்டேன். இதுவரை ஆறு தடவை வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளேன். அரசுப் பணியில் சேர்ந்து, நேர்மையாகப் பணிபுரிந்தால்கூட இந்த அளவுக்கு முன்னேறி இருப்பேனா என்பது சந்தேகம்தான். சின்சியாரிட்டி, ஹானஸ்ட்டி, ரெகுலாரிட்டி இந்த மூன்று 'டி’யும் இருந்தால் போதும். மார்க்கெட்டிங் பணியிலும் சம்பாதிக்கலாம், சாதிக்கலாம், நிலைத்து நிற்கலாம்!'' என்று அசத்தலாகச் சொல்கிறார் வெங்கடேஸ்வரன்.

இந்த புன்னகை விற்பனைக்கு!

இந்தியாவின் நம்பர் 1 மருந்துப் பொருட்கள் விற்கும் நிறுவனத்தில் இருந்து விலகி, தற்போது அப்பாட் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறார் வெங்கடேஸ்வரன். இங்கு இன்னும் அதிக சம்பளம் மற்றும் சலுகைகள்.

''மருந்து விற்கும் நிறுவனங்களுக்கு மக்களின் மீது சிறிதுகூட அக்கறை கிடையாது. தங்களது மருந்துகளை விற்பதற்காக மருத்துவர்களுக்கு 'என்ன செய்யவும்’ மருந்து கம்பெனிகள் தயங்குவது இல்லை. எனவே, இந்த மார்க்கெட்டிங்கில் எத்திக்ஸ் என்பதை லென்ஸ் வைத்துத் தேட வேண்டி உள்ளது...'' என்று இந்த 'ரெப்’ பணியைச் சமூகத்துக்கு எதிரானது என்கிறார் கமலக்கண்ணன். இவர், ஒரு வருடம் மருத்துவப் பிரதிநிதியாகப் பணிபுரிந்து, வேலை பிடிக்காமல் உதறிவிட்டு, தற்போது அரசுப் பணியில் இருக்கிறார்.  ''இந்த வேலையில் ஏற்படுகிற மன அழுத்தம், வேறு எந்தப் பணியைக் காட்டிலும் அதிகமானது. கம்பெனி கொடுக்கும் டார்கெட்டை அடைய முடியாதவர்களின் நிலை, 'ஐயோ பாவம்தான்!’ பணியாளருக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நிறுவனங்கள் உணருவது இல்லை!'' எனத் தன் வருத்தத்தை, எச்சரிக்கையுடன் கலந்து பதிவுசெய்கிறார் கமலக்கண்ணன்.

'மூணு நிமிஷம்தான் ஒதுக்க முடியும். என்ன சொல்லுங்க’ என்று வாடிக்கையாளர் உங்களிடம் கேட்கும்போது, அந்த மூன்று நிமிடங்களில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அவரை ஈர்ப்பதில்தான் உங்கள் திறமை இருக்கிறது. வாடிக்கையாளர் மனம் அறியும் மந்திரமும் கொஞ்சம் வியாபாரத் தந்திரமும் கற்றுக்கொண்டால், நீங்களும் ஜெயிக்கும் குதிரைதான்!

மன அழுத்தம் தவிர்க்க!

 

லக்கை, குறிப்பிட்ட மாதத்தின், குறிப்பிட்ட நாட்களுக்குள் அடைய வேண்டும் என்று மேலதிகாரிகள் அழுத்தம் தர... பசி, தூக்கம், குடும்பம் மறந்து செய்யும் இந்த வேலையில், பணியாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்பற்றி மனநல மருத்துவர் ராதாகிருஷ்ணன் எடுத்துச் சொல்கிறார்.

இந்த புன்னகை விற்பனைக்கு!

''எந்த ஒரு பணியிலும் மன அழுத்தம், என்பது தற்காலத்தில் சகஜமாகிவிட்டது. ஏனென்றால், கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளிலுமே டார்கெட் வைத்துத்தான் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். மார்க்கெட்டிங் துறையிலும் அத்தகைய மன அழுத்தம் ஏற்படுவது இயல்புதான். அதைக் குறைக்க... மார்க்கெட்டிங் பணியாளர்கள் குடும்பத்தினருடனும் நேரத்தை ஒதுக்கிச் செலவிட வேண்டும். கம்பெனிகளும் இதற்காக குடும்பச் சுற்றுலா போன்றவற்றைப் பணியாளர்களுக்கு ஏற்பாடு பண்ணலாம். மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு, காலைச் சிற்றுண்டியைத் துறப்பதுதான். இந்த விஷயத்தில் கவனம்கொள்ள வேண்டும். காரணம், இரவு சாப்பாட்டுக்கும் காலை சாப்பாட்டுக்கும் இடையே நேர இடைவெளி அதிகம் என்பதால், காலைச் சிற்றுண்டியைத் தொடர்ந்து தவிர்ப்பவர்களுக்கு அல்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெளியில் அலையும் பணி என்பதால், அதிகம் தண்ணீரும் அவ்வப்போது எடுத்துக்கொள்ள வேண்டும்!'' என டயட் டிப்ஸ் தருகிறார்!

 

விற்பனைப் பிரதிநிதிகள் கவனத்துக்கு!

 

தினசரி சந்தை நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதைப்பற்றித் துல்லியமான விவரங்களை 'அப்டேட்’ செய்துகொண்டே இருங்கள்!

 

நிறுவனத்தில் சேர்வதற்கு முன்னரே அந்த நிறுவனத்தின் அகில இந்திய நிலை, வளர்ச்சி, பணியாளர்கள் மேம்பாட்டுத் திறன், ஆகியவற்றை அறிந்துகொள்ளுங்கள். இதற்கு முன் பணிபுரிந்தவர்களின் ஆலோசனைகளைப் பெறுங்கள்!

இந்தப் பணிக்கென நமது தோற்றத்தையும் ஆளுமையையும் பராமரிப்பதில் முக்கியக் கவனம் செலுத்த வேண்டும்!

 

நிறுவனத்தில் சேர்வதற்கு முன் நேர்முகத் தேர்விலேயே உங்களுக்கு கேள்வி கேட்கத் தரப்படும் நேரத்தில், சம்பளம் குறித்தும் நேரடி யாகப் பேசிவிட வேண்டும்!

 

அடிக்கடி நிறுவனம்விட்டு நிறுவனம் மாறக் கூடாது. அது இந்தத் துறையில் இருந்தே நீங்கள் வெளியேறுவதற்குக் காரணமாகிவிடும். கவர்ச்சிகரமான சம்பளத்தை மட்டும் பார்க்காமல், தனது நிலையை உயர்த்திக்கொள்ள அந்த நிறுவனம் எந்த அளவுக்கு வாய்ப்பு அளிக்கும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்!

 வளர்ந்த நிறுவனங்களைவிட, வளரும் நிறுவனங்களில் முன்னேற வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்!

க.ராஜீவ் காந்தி, படங்கள் : பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism