Published:Updated:

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

ஸ்டூடன்ட் ஸ்டார்!

Published:Updated:
ஸ்டூடன்ட் ஸ்டார்!
 ##~##

''வயலின், கிடார், டிரம்ஸ்னு எந்த இசைக் கருவியும் இல்லாமல் உங்களால் இசை மழை பொழியவைக்க முடியுமா? என்னால் முடியும்!'' -சிரிக்கிறார் மைக்கேல். பிளாஸ்டிக் கேன், பாத்திரங்கள், ஹாட் பாக்ஸ் என்று கையில் சிக்கும் எந்தப் பொருளையும் தனது ஆர்கெஸ்ட்ராவில் சேர்த்துவிடுகிறார் மைக்கேல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்ன வயசுல இருந்தே இசைக் கலைஞனா வரணும்னு ஆசை. ஆனா, பைக் மெக்கானிக் அப்பா, தையல் வேலை பார்க்கும் அம்மா,ஒரே சொத்தாக வறுமை! என்னையும் தம்பியையும் படிக்கவைக்கிறதே ரொம்பக் கஷ்டமா இருந்த நிலைமையில், இசைக் கருவிகளுக்கு நான் எங்கே போறது? திருவிழா, கோயில், கல்யாணம்னு எங்கேயும் கேட்கும் பாட்டுச் சத்தம் என்னைப் பிடிச்சு உலுக்கிட்டே இருக்கும். அந்த வேகத்திலும் ஆர்வத்திலும் தட்டுமுட்டுச் சாமான்கள், கதவுன்னு கையில் கிடைக்கிற கண்ட பொருளில் எல்லாம் தாளம் போட்டுப் பாட ஆரம்பிச்சேன். 'ரொம்ப நல்லா இருக்கு.இன்னும் பெருசா பண்ணுடா’ன்னு சொன்னதும் உற்சாகம் தொத்திக்கிச்சு.

ஸ்டூடன்ட் ஸ்டார்!

தையல் மெஷின் மூடி, ஹெல்மெட், மினரல் வாட்டர் கேன், வாளி, குக்கர் மூடி, மீன் தொட்டி மூடி, ஹாட் பாக்ஸ், செரிலாக் டின், பீங்கான் பாட்டில்னு வீட்டில் இருக்கிற எல்லாப் பொருட்களை வெச்சும் வாசிப்பேன். 105 பொருட்களில் 25 வகை தாளங்களில் இசைப் பேன். வெஸ்டர்ன், கர்னாடிக், கிளாஸிக், ஃபோக்னு சர்வமும் இதில் அடங்கும். நாட்டுப்புறப் பாட்டு, கிராமியப் பாட்டு, தேசபக்திப் பாட்டு, சர்வதேசப் பாட்டுன்னு எல்லாத்திலும் 50 கச்சேரிகள் பண்ணி இருக்கேன். இத்தனைக்கும் எந்த குருவிடமும் முறைப்படி நான் இசை கத்துக்கலை. எல்லாமே கேள்வி ஞானம்தான்.

நாடக நடிகர் சங்க விருது, செய்தி மக்கள் தொடர்புத் துறை விருது, மாவட்டக் கலை இலக்கியக் கழக விருது, சுதந்திர தின இளைஞர் விருது, மாணவர் அரங்க விருது, நேரு யுவகேந்திராவின் தனித் திறன் விருது, நேஷனல் அபாகஸ் போட்டியில் 'காம்பெடிஷன் டாப்பர்’ விருதுன்னு 25 விருதுகள் ஜெயிச்சு இருக்கேன். ஒரு முறை டிரம்ஸ் சிவமணி சார் கையால் விருது வாங்கினேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவரைப்போல நானும் கலக்கணும், நான் இருக்கிற இடத்தை அதிரடிக்கணும். அதான் என் கனவு, லட்சியம் எல்லாம்.

'வீட்ல எனக்குத் தேவையான எதுவும் செய்ய மாட்டேங்கிறாங்க. கஷ்டம், வறுமை, சோகம்’னு புலம்புறவங்களுக்கு நான் சொல்ல விரும்புறது ஒண்ணே ஒண்ணுதான்... சாதிக்க குடும்பச் சூழ்நிலையோ, பணமோ முக்கியம் இல்லை... மனசுதான் முக்கியம்!''

படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism