Published:Updated:

கிராஃப்ட் ஸ்கூல் !

ஈஸியா கத்துக்கலாம் வாங்க !

என்.சியாமளாதேவி

 வெள்ளை நிற டிரெஸ்ஸஸ்ல எந்த டிசைன் செய்தாலும்... பார்க்க எடுப்பாவும், அழகாவும் இருக்கும். ஆனா... கலர் டிரெஸ்ஸஸ்னா... டிசைன் செய்யுறப்பவே... அந்தந்த கலருக்கு ஈடு கொடுக்கற டிசைன்ஸை நாமதான் பார்த்துப் பார்த்து தேர்வு செய்யணும். இப்படிப்பட்ட இடங்கள்லதான் நம்மளோட கிரியேட்டிவிட்டி ரொம்ப அதிகமா கவனிக்கப்படும். ஸோ... கலர் டிரெஸ்ஸுக்கு தகுந்தாப்ல... பத்திக் ஸ்டைல் மாதிரியான பேட்ச் வொர்க் டிசைன்ஸ எப்படி செய்றதுங்கறத... கத்துக்கலாம் வாங்க!

கிராஃப்ட் ஸ்கூல் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

தேவையான பொருட்கள்: கறுப்பு  மற்றும் பச்சை நிற சுடிதார் - ஒன்று, சிவப்பு கலர் பாப்லின் துணி - 1 மீட்டர், வெள்ளை மற்றும் கறுப்பு கலர் ஃபேப்ரிக் பெயின்ட் - தலா 1 பாட்டில், ஃபேப்ரிக் க்ளூ - 1 பாட்டில், கத்தரிக்கோல் - 1, பெயின்ட் பிரஷ் - 1.

முன்குறிப்பு: துணிகளில் எந்த வொர்க் செய்வதாக இருந்தாலும் அதன் உள்பகுதியில் திக்கான நான்கைந்து நியூஸ் பேப்பர்களை வைத்து விடுங்கள். அப்போதுதான் மேற்புறத்தில் செய்கின்ற டிசைனுக்காக பயன்படுத்தப்படும் பெயின்ட், துணியின் மறுபகுதியில் ஒட்டாமல் இருக்கும்.

செய்முறை: சிவப்பு கலர் பாப்லின் துணியை எட்டாக மடித்து, அதன் மீது வாயகன்ற ஒரு கிண்ணத்தைக் குப்புற படுக்க வைத்து, அதன் வாயை சுற்றி படத்தில் காண்பித்து உள்ளது போல, பேனாவால் வட்டம் வரைந்து கொள்ளுங்கள் (படம் 1). அந்த வட்ட வடிவ அவுட்லைனை கத்தரிக்கோல் கொண்டு வெட்டினால், வட்ட வடிவில் துணி கிடைக்கும் (படம் 2). இந்த வட்ட துணிகளை ஸ்டார் வடிவ டிசைன் வருவது போல வெட்டிக் கொள்ளுங்கள். நடுவிலும் துளையிடுங்கள் (படம் 3). ஸ்டார் டிசைன் துணியை பின்புறமாக திருப்பி, அதன் ஓரங்களில் ஃபேப்ரிக் க்ளூ தடவுங்கள். அதை அப்படியே கறுப்பு கலர் சுடிதாரின் முன்புறத்தில் ஒட்டி விடுங்கள் (படம் 4). இதேபோல மற்ற ஸ்டார்களையும் சுடிதாரில் ஆங்காங்கே ஒட்டி விடுங்கள்.

பிறகு, ஒரு நாள் காயவிட்டு, வெள்ளை மற்றும் கறுப்பு கலர் ஃபேப்ரிக் பெயின்ட் பயன்படுத்தி படத்தில் காண்பித்து உள்ளது போல ஸ்டார் டிசைனின் ஓரம் மற்றும் உள்பகுதிகளில் அழகாக டிசைன் செய்யுங்கள் (படம் 5). தட்ஸ் ஆல்!

ஒரு நாள் முழுக்க காய வைத்து உள்புறமாக திருப்பி அயர்ன் செய்து விட்டால்... ஃபென்டாஸ்டிக்கான சுடி ரெடி!

- இன்னும் கத்துக்கலாம்...

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன் 
 மாடல்: என்.ஸ்ரித்திக்கா