Published:Updated:

'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'

மதுரை ஜானகியின் கிராஃப்ட் பயணம்வே.கிருஷ்ணவேணி, படங்கள்: பா.காளிமுத்து

சுயதொழிலைப் பொறுத்தவரை... ஆண்களுக்கு நிகராக, பெண்களும் சம்பாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். தெளிவான சிந்தனை, தொழில் நேர்த்தி, தன் வீட்டு வேலையைப் போலவே அக்கறை எடுத்துச் செய்வது... இதெல்லாம்தான் ஒவ்வொரு தொழிலிலும் பெண்கள் தனி இடம் பிடிக்கக் காரணமாகிறது. அவர்களில் ஒருவர்தான், மதுரை, ஐயர் பங்களா பகுதியைச் சேர்ந்த ஜானகி.

'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'

'அவள் விகடன்' 10.2.2006 தேதியிட்ட இதழில் 'மூங்கிலில் பூத்த ரோஜாக்கள்’ என்ற தலைப்பில் வெளியாகியிருந்தது... இவரின் மூங்கில் பூ படைப்பு. 'டெலிபோன் டேபிள், மீன்தொட்டி, ஷோகேஸ், டிரெஸ்ஸிங் டேபிள், டைனிங் டேபிள் என விரும்பிய இடத்தில் அமர்த்தி அழகு பார்க்க, இதோ வித்தியாசமான கியூட் ஃபிளவர் பாட் ரெடி. சுலபமாகக் கிடைக்கக் கூடிய பொருட்களை வைத்தே... அதை எளிதாகச் செய்யக்கூடிய முறையை கற்றுத் தருகிறார் மதுரையைச் சேர்ந்த ஜானகி...’ என்று ஆரம்பிக்கிறது அந்தக் கட்டுரை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மரக்கடைகளில் வீணாகக் கிடக்கும் மூங்கிலின் அடிப்பாகத்தை ஆதாரமாக வைத்து, எளிதில் யாராலும் செய்யக்கூடிய மூங்கில் ஃபிளவர் பாட் செய்து காட்டியிருந்தார் ஜானகி. 7 ஆண்டுகளுக்குப் பின், நாம் அவரைத் தேடிப்பிடிக்க, சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து விலகாதவராகவே பேசினார்.

''பிறந்து, வளர்ந்தது எல்லாம் மதுரைதான். ப்ளஸ் டூ படிச்சதும், கரஸ்ல பி.காம் முடிச்சேன். 19 வயசுல திருமணம் முடிஞ்சுது. நான் எதிர்பார்த்ததைவிடவும் கணவர் வள்ளியப்பன், என்னை நல்லா பார்த்துக்கிட்டார். அவரோட பிசினஸில் நானும் உறுதுணையா இருந்தேன்'' என்றவர்,

''ஸ்கூல் படிக்கும்போதில்இருந்தே எனக்கு கலைநயமிக்க பொருட்கள் மேல ரொம்ப ஈர்ப்பு. நேரம் கிடைக்கும்போது அப்பப்போ செஞ்சும் பார்ப்பேன். ஆனா, 'எங்கே படிப்பை மறந்து அதுலயே மூழ்கிடுவோமோ’னு, அந்த ஆசையை அப்படியே ஒரு ஓரமா மறைச்சு வெச்சுட்டு, படிப்புல கவனம் செலுத்தினேன். திருமணத்துக்கு அப்புறம் கணவர்கிட்ட, என்னோட கிராஃப்ட் ஆர்வத்தை சொன்னேன். 'தாராளமா செய், என்னென்ன பொருட்கள் வேணுமோ சொல்... ஏற்பாடு செய்து தர்றே’னு உற்சாகப்படுத்தினார். அப்புறம்தான் முழுக்க கிராஃப்ட் வேலைகளோடேயே நாட்கள் நகர ஆரம்பித்தன.

'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'
'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'

இடையில் செந்தில்நாதன், அக்ஷயா ருக்மணினு என் ரெண்டு குழந்தைகளுக்காக என் வேலைகளை குறைச்சுக்கிட்டேன். அப்புறம் அவங்க கல்லூரி எல்லாம் முடிச்ச பிறகு, மறுபடியும் கம், கலர் பேப்பர், மூங்கில், சமிக்கினு இறங்கிட்டேன்'' என்பவருக்கு, 'அவள் விகடன்’ இதழில் இடம்பிடித்த பிறகு, நிறைய தோழிகள் கிடைத்ததுடன், வருமானமும் உயர்ந்திருக்கிறது.

'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'

''முகம் தெரியாத பெண்கள் எல்லாம் எங்கெங்கோ இருந்து போன் பண்ணி, 'மூங்கில் பாட் எப்படிப் பண்ணணும்?’னு கேட்டாங்க. அதுக்கு முன்ன வரை கைவேலைப்பாடுகள் மூலமா மாசம் 2,000 ரூபாய் சம்பாதிச்சிட்டு இருந்த நான், அதுக்கு அப்புறம் மாதம் 10,000 வருமானம் பார்க்க ஆரம்பிச்சேன், இப்போ மாசம் 15 ஆயிரத்துக்கும் மேல கிடைக்குது! பெண்களுக்கான முன்னேற்றப் பாதையில 'அவள் விகடன்’ எந்தளவுக்கு வழிகாட்டியா இருக்கு என்பதற்கு, நானும் ஓர் உதாரணம்!'' என்று நெகிழும் ஜானகி, இப்போது உப்புத்தாளில் வேலைப்பாடுகள், டைல்ஸ் பெயின்ட்டிங், கிளாஸ் பெயின்ட்டிங், 3 டி பெயின்ட்டிங், ஃபோம் ஷீட் ஃபிளவர் வாஷ், மூங்கில் டிசைன்கள் என்று பலவிதமான வேலைப்பாடுகளையும் செய்துவருகிறார்.

''ஆர்வமும் திறமையும் இருந்து, தினமும் ரெண்டு சீரியல் பார்க்கும் நேரத்தை கிராஃப்ட் தொழிலில் செலவழிச்சாலே போதும்... 100 பர்சன்ட் லாபம் பார்க்கலாம். கிராஃப்ட் வகுப்புகளும் எடுக்கிற எங்கிட்ட கத்துக்கிட்ட சுமார் 25 பேர், தனியா பிசினஸ் செய்ற அளவுக்கு வளர்ந்திருக்காங்க. என் உறவுக்காரப் பெண்கள் மூணு பேர் இதில் வெற்றிகரமா வலம் வர்றாங்க. மூங்கிலைக் கொண்டு செய்யப்படும் கலைப்பொருட்களுக்கு எப்பவுமே நல்ல வரவேற்பு உண்டு. அதை நம்ம வாசகிகளுக்கு கற்றுத்தர நான் இப்பவே தேவையான பொருட்களை ரெடி பண்ணத் தொடங்கிட்டேன். வாருங்கள் தோழிகளே..!'' என்று சந்தோஷமாக அழைத்தார் ஜானகி!

'பணம் காய்க்கும் மூங்கில் பூக்கள்!'