''வீட்டுல... 'கோலம் போட கத்துக்கோ’, 'கூடை பின்னக் கத்துக்கோ’னு ஓயாம சொல்லிட்டிருக்கற பெரியவங்க வார்த்தைகளை ஃபாலோ பண்ணினதுதான், இன்னிக்கு நான் வெற்றிகரமான தொழில்முனைவோரா வளர்ந்திருக்கறதுக்கு அடிப்படை!'' என்று செய்தி சொல்லி ஆரம்பிக்கிறார், சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி சதீஷ். கிராஃப்ட் தொழிலில் ஏ டு இஸட் எதையும் விட்டுவைக்காமல் செய்வதோடு, தன் தேடலை நிறுத்தாமல் அப்டேட் ஆகிக்கொண்டே இருப்பது இவரின் சிறப்பு.

இனி, உங்களுடன் லட்சுமி...

''நான் கோயம்புத்தூர் பொண்ணு. சின்ன வயசுல, எங்கக்கா உமாலட்சுமியை, வீட்டில் உள்ளவங்க எல்லோரும், 'அதை செய்’, 'இதை கத்துக்கோ’னு ஏதாவது ஒரு கைவேலைப்பாட்டை பண்ண வெச்சுட்டே இருப்பாங்க. 'அக்கா எதுக்கு இதையெல்லாம் செய்யணும்..?’னு நான் கேட்டப்போ, 'உங்க அக்கா கல்யாணத்துல சீர்வரிசை வைக்கிறப்போ, இதெல்லாம் எங்க பொண்ணே செஞ்சதுனு அவ கையால செஞ்ச கைவேலைப்பாட்டுப் பொருட்களையும் வெச்சா, எல்லாரும் பாராட்டுவாங்க. மாப்பிள்ளை வீட்டுக்காரங்களுக்கும் நமக்கும் கௌரவமா இருக்கும்ல?!’னு விளக்கம் சொன்னாங்க. அப்படி அக்கா செய் யும்போது நானும் அவங்ககூட இருந்து சில கிராஃப்ட் அயிட்டங்களைக் கத்துக்க ஆரம்பிச்சதுதான், இதில் பிள்ளையார்சுழி. பிறகு, அதையே தொழிலாக்கி னது என் புத்திசாலித் தனம்.

திருமணமாகி, சென்னை வந்த நான்... புரசைவாக்கம், கிராஃப்ட் டீச்சர் கஸ்தூரிகிட்ட நிறைய கத்துக்கிட்டேன். குறிப்பா, 150-க்கும் மேற்பட்ட டெடிபேர் மாடல்களை அவங்ககிட்டதான் கத்துக்கிட்டேன். சென்னை, பாரிமுனையில ஒரு ஃப்ரெண்ட் கிடைச்சாங்க. அவங்க மூலமா நிறைய மார்வாடி வீடுகளில் குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அவங்களோட வழக்கப்படி, பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்ததும் ரொட்டி போடுறது, மெஹந்தி தயாரிக்கறதுனு கத்துக்கறதோட... ஒரு கைவேலைப்பாட்டையும் கத்துக்கணுமாம். இதுவே எனக்கு சான்ஸ் தேடித்தந்துச்சு. விசேஷ வீடுகள்ல மெஹந்தியும் போட்டுவிடுவேன்.

என் கணவர், 'நீ வீட்ல இருந்தே எதை வேணும்னாலும் பண்ணு’னு சொன்ன பிறகுதான், வீட்டிலேயே கிராஃப்ட் வகுப்புகள் எடுக்க ஆரம்பிச்சேன். தஞ்சாவூர் பெயின்ட்டிங், ஃபேப்ரிக் பெயின்ட்டிங், ஜுவல் மேக்கிங், கீ-செயின் மேக்கிங், ரங்கோலி ஸ்டிக்கர் மேக்கிங், விதவிதமான மாலைகள் செய்றது, ஆரத்தி தட்டுகள் செய்றது, ஃபோம் ஷீட் வேலைப்பாடுகள்னு இந்த 15 வருஷத்துக்குள்ள கிராஃப்டோட எல்லா பகுதியையும் தொட்டு முடிச்சாச்சு. இதில் என்னோட ஸ்பெஷல், நிப் பெயின்டிங்'' என்பவர்,

''வீட்டில் ஓய்வு நேரங்களில் வகுப்பெடுப்பேன். தவிர, ஒரு நாளைக்கு குறைந்தது ரெண்டு மணி நேரமாவது ஒதுக்கி கிராஃப்ட் பொருட்கள் செய்வேன். சனி, ஞாயிறுகள்ல வேளச்சேரியில இருக்கிற 'குளோபல் ஆர்ட்’ கிராஃப்ட் ஸ்கூல்ல ஆசிரியையாவும் வேலை பார்க்கிறேன். விற்பனையாளரா இருக்கறதைவிடவும், பயிற்சியாளரா இருக்கறது ரொம்பப் பிடிக்கும். எவ்ளோ சேட்டை செய்ற குழந்தைகளுக்கும் என்னால வகுப்பெடுக்க முடியும். அவ்வளவு ஆர்வமும் அனுபவமும் எனக்கு கைகொடுக்குது. இதுவரைக்கும் 2,000 பேருக்கும் மேல பயிற்சி கொடுத்திருக்கேன்.

வீட்டு வேலைகளை எல்லாம் முடிச்சுட்டு, கணவர், குழந்தைகள் எல்லாரும் தூங்கின பிறகு, இரவு பத்து மணிக்கு மேல இரண்டு மணி நேரம் உட்கார்ந்து எல்லாம் வேலை பார்த்திருக்கேன். அப்படி செய்யும்போதே என்னால மாதம் 20 ஆயிரத்துக்கும் மேல சம்பாதிக்க முடியும்போது, முழுநேர வேலையா எடுத்துச் செய்தா, நிச்சயம் இதில் பெரிய லாபத்தை அள்ள முடியும். இதோ... ஒரு மாசத்துக்கு முன்னகூட 50 ஆரத்தி தட்டுகள் வேணும்னு ஆர்டர் வந்துச்சு. அதுக்காகவே நேரம் ஒதுக்கி செய்து கொடுத்தேன், கை மேல லாபம்!'' என்ற லட்சுமி, கையில் இருந்த மணிகளைக் கோத்து, முடிச்சிட்டு, பேச்சையும் முடித்தார்!