Published:Updated:

சிம்பிளாகச் செய்யலாம் சூப்பர் க்ராஃப்ட்ஸ்

Vikatan Correspondent

தொகுப்பு: கே.கணேசன் படங்கள்: வி.செந்தில்குமார், பா.கார்த்திக்

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

வணக்கம். இந்தக் கோடை விடுமுறையில் சுற்றோ சுற்று என ஊர் சுத்தியாச்சு. அந்த கேம்ப்... இந்த கேம்ப் என எல்லாத்திலும் தலையைக் காட்டி, நிறையக் கத்துக்கிட்டாச்சு. கத்தரி வெயில், திடீர் கோடைமழை என எதையும் கண்டுக்காமல்... மைதானம், மொட்டைமாடி, தெரு என நண்பர்களோடு விளையாடியாச்சு. ஆனாலும், இன்னும் லீவு மிச்சம் இருக்கே... என்னப்பா செய்யலாம்?

இதோ, உங்களுக்காகவே இந்த குட்டி புக். இதில் உள்ள க்ராஃப்ட்களை கமலக்கண்ணன் மற்றும் ராஜலட்சுமி மந்தா சொல்லித்தருகிறார்கள்.

சிம்பிளாகச் செய்யலாம் சூப்பர் க்ராஃப்ட்ஸ்

பக்கத்துக்குப் பக்கம் சிம்பிளான க்ராஃப்ட்ஸ். செலவு அதிகம் இல்லை. வண்ணக் காகிதம், க்ரயான்ஸ், பிரஷ் என ஆல்ரெடி உங்ககிட்டே இருக்கிற பொருள்களை வெச்சே, அழகழகான க்ராஃப்ட்களைச் செய்யுங்க. லீவு முடிஞ்சு, பள்ளிக்குப் போனதும் நண்பர்களிடம் காட்டி அசத்துங்க. பரிசாகக் கொடுத்து, அவங்களோட அன்பை அள்ளுங்க!      

அன்புடன்
ஆசிரியர்  

சென்னையில் மந்தா ஆர்ட் அகாடமியைச்  சேர்ந்த கமலக்கண்ணன், ராஜலட்சுமி மந்தா.  சுட்டிகளுக்கு ஓவியம் மற்றும் க்ராஃப்ட் பயிற்சிகள் அளிக்கிறார்கள்.

''ஆனந்தத்துக்கும் பொழுதுபோக்குக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு செயலை வேடிக்கை பார்த்தால், பொழுதுபோக்கு மட்டுமே கிடைக்கும். அந்தச் செயலை நாமே செய்யும்போது ஆனந்தம் கிடைக்கும்.'' என்கிறார்கள் ராஜலட்சுமியும் கமலக்கண்ணனும்.