Published:Updated:

கிராஃப்ட் ஸ்கூல் !

ஈஸியா கத்துக்கலாம் வாங்க!

என்.சியாமளாதேவி
மாடல்: சுமித்ரா

 ஸ்க்ரீன் பிரின்ட்டிங் புடவைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்தான். ஆனா, அதுக்காக பயன்படுத்தற கலர்ஸோட வாசனை சிலருக்குப் பிடிக்காது. போதாக்குறைக்கு, அந்த கலர்ஸ் காஸ்ட்லியும் கூட! அதனால, சிம்பிளா... அழகா ஃபேப்ரிக் கலர்ஸை வெச்சே ஸ்க்ரீன் பிரின்ட்டிங் புடவைகளை டிசைன் செய்துட முடியும்...  குறைஞ்ச விலையிலேயே!

கிராஃப்ட் ஸ்கூல் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

'அப்படியா?'னு ஆச்சர்யமாக கேட்கறீங்களா? வாங்க... 'இப்படித்தானா?!'னு நொடியில அதைக் கத்துக்கலாம்!

தேவையான பொருட்கள்: சிவப்பு மற்றும் மஞ்சள் பார்டர் கலந்த காட்டன் சேலை - 1, சிவப்பு நிற ஃபேப்ரிக் கலர் - 1 பாட்டில், ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்டென்சில் - 1 (பிடித்தமான டிசைன் கொண்ட ஸ்டென்சில் வாங்கிக் கொள்ளலாம்), அகலமான கார்ட்போர்ட் - 1.

செய்முறை: காட்டன் சேலையின் பார்டரில்தான் டிசைன் செய்யப் போகிறோம். சேலைக்கு அடியில் நான்கைந்து நியூஸ் பேப்பர்களை மடித்து நீளவாக்கி வைத்து விடுங்கள். இப்போது பார்டரின் மேலே ஸ்டென்சிலை வைத்து, அதில் இருக்கும் டிசைன் மீது, படத்தில் காட்டியுள்ளது போல சிவப்பு நிற ஃபேப்ரிக் பெயின்ட்டை ஊற்றுங்கள் (படம் 1). கார்ட்போர்டை பயன்படுத்தி பெயின்ட்டை மேல் இருந்து கீழ் நோக்கி வழித்துவிடுங்கள் (படம் 2). இப்போது ஸ்டென்சிலில் உள்ள டிசைன், துணியில் அச்சுப் பதிப்பது போல அழகாகப் பதிந்துவிடும் (படம் 3). தேவைப்படும் இடங்களில் எல்லாம் இதேபோல ஸ்டென்சிலை வைத்து, டிசைன் செய்யுங்கள். ஒரு நாள் முழுக்க டிசைனை காயவைத்து, மறுநாள் சேலையை உள்புறமாக திருப்பி அயர்ன் செய்துவிட்டால்... ஃபேப்ரிக் டிசைன்டு ஸ்க்ரீன் பிரின்ட்டிங் சேலை ரெடி. இது, எத்தனை முறை துவைத்தாலும் உதிர்ந்து போகாது!

கிராஃப்ட் ஸ்கூல் !

- இன்னும் கத்துக்கலாம்...

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்