Published:Updated:

கோலங்கள்

பொன்.விமலா,  படம்: ச.வெங்கடேசன்

கோலங்கள்

பொன்.விமலா,  படம்: ச.வெங்கடேசன்

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கோலங்கள்

 100

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கோலங்கள்

“கோலம் போடுறதுன்னா சும்மா இல்லைங்க...அது ஒரு தனி கலை'' என பேசும் ஆம்பூர் இசைவாணி கோலத்துக்கான டிப்ஸ்களை நம் வாசகிகளுக்கு வழங்குகிறார்...

• கோலப்பொடியுடன் பச்சரிசி மாவைக் கலந்தால், அது கோலத்தை பளிச்சென்று காட்டும்.

• ரங்கோலி கோலம் பெரிதாக இருக்கும் பட்சத்தில் முழு கோலத்தையும் முடித்துவிட்டு கலர் போடுவது கடினமாக இருக்கும். அதனால் கோலம் பாதியாக இருக்கும்போதே நடுவில் கலர் பொடியைத் தூவி விட்டு கோலம் போடுவது எளிமையான வழி.

• கடைகளில் விற்கும் கலர் பொடிகள் பெரும்பாலும் ஒருசில வண்ணங்களிலேயே இருக்கும். அதனால் இரண்டு மூன்று கலர்களை ஒன்றாக கலந்து புதிதாக ஒரு கலரை உருவாக்கலாம்.

• கலர் பொடியுடன் கோல மாவை குறைந்த அளவு கலக்கும்போது கலர் அடர்த்தியாக காட்டும்.

கோலங்கள்
கோலங்கள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism