Published:Updated:

“என் தாயைத்தான் சிலையாக வடித்திருக்கிறேன்!” - தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவன்

தமிழணங்கு

சமூக வலைத்தளத்தை கலக்கிவரும் ஓவியர் சந்தோஷ் நாராயணனின் தமிழணங்கு ஓவியத்தை புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் முத்தமிழ்ச் செல்வன் சிற்பமாக வடித்து அசத்தியிருக்கிறார்.

“என் தாயைத்தான் சிலையாக வடித்திருக்கிறேன்!” - தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக வடித்த மாணவன்

சமூக வலைத்தளத்தை கலக்கிவரும் ஓவியர் சந்தோஷ் நாராயணனின் தமிழணங்கு ஓவியத்தை புதுச்சேரியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் முத்தமிழ்ச் செல்வன் சிற்பமாக வடித்து அசத்தியிருக்கிறார்.

Published:Updated:
தமிழணங்கு

தலைவிரி கோலத்துடன், கையில் ழகர வேலை ஏந்தி, வெள்ளை நிறப் புடவையில் சினத்துடன் காட்சியளிக்கும் அந்த ஓவியம்தான் இந்த வார இணைய வைரல். கடந்த 2019-ம் ஆண்டு இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் எழுந்தபோது எழுத்தாளரும், ஓவியருமான சந்தோஷ் நாராயணனால் தீட்டப்பட்ட தமிழ்த்தாயின் அந்த ஓவியத்தை, தற்போது தமிழணங்கு என தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தமிழணங்கு
தமிழணங்கு

”இந்தி பேசாத மாநிலங்களும் இனி இந்தி பேச வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இனி ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி பேச வேண்டும்” என்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியம் இணையத்தில் வைரலானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்வினையாற்றும் விதமாக தமிழணங்கு ஓவியத்தை அதிகப்படியாக பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனடிப்படையில் புதுச்சேரி பாகூர் பகுதியில் இயங்கிவரும் மகாகவி பாரதியார் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் முத்தமிழ்ச் செல்வன், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்த தமிழணங்கு ஓவியத்தை பயனற்ற இலை, முங்கில் மற்றும் வாழை மட்டைகளைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

சமூக செயற்பாட்டாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் டிவிட்டரில் பகிர்ந்த அந்த சிற்பத்தை ஓவியர் சந்தோஷ் நாராயணன் மற்றும் எழுத்தாளர் இந்திரன் ஆகியோர் பகிர்ந்திருக்கின்றனர். மேலும், “தமிழ்ச் சமூகத்தில் இப்போதுதான் தமிழ் அழகியல் கூறுகளுடன் கூடிய படைப்புச் செயல்பாடு தீவிரம் அடைந்துள்ளது. ஓவியர் சந்தோஷ் நாராயணனின் பழுப்பு நிறம் கொண்ட ”தமிழணங்கு” ஓவியம் அத்தகைய ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏ.ஆர் ரஹ்மான் அதை தனது டிவிட்டரில் பகிர்ந்த பிறகு என் பிறந்த மண்ணான புதுச்சேரி அரசு பள்ளியில் 11 வகுப்பு பயிலும் மாணவன் முத்தமிழ்ச் செல்வன், சிற்பமாக வெளிப்பாடு செய்திருக்கிறார். ஒரு கலை விமர்சகன் என்ற வகையில் இதனை மிக உன்னதமான தமிழ் மண்ணின் அடையாளத்தோடு கூடிய அசல் படைப்புக் கலை வெளிப்பாடாக கருதுகிறேன்.

மாணவர் முத்தமிழ்ச்செல்வன்
மாணவர் முத்தமிழ்ச்செல்வன்

மேல்நாட்டுச் சூரியனிடமிருந்து கடன் வாங்கித்தேய்ந்து போகும் நிலாக்களாக நிறைய படைப்புகள் நவீனத் தமிழ் ஓவியர்களால் செய்யப்படும்போது, மாணவன் முத்தமிழ்ச் செல்வனை படைப்பு மிகவும் அசல் ஜீவரசத்துடன் விளங்குவதாக நான் கருதுகிறேன். முற்றிலும் தமிழ் மண்ணில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு செய்யப்பட்ட தமிழன்னையின் தமிழணங்கே வடிவம் சோலை இலை மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் இந்திரன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாணவர் முத்தமிழ்ச் செல்வன், “சேலியமேடு பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்தபோது நுண்கலை ஆசிரியர் உமாபதி சார் தென்னை, பனை, வாழை, மூங்கில் உள்ளிட்ட பயனற்ற பொருட்களில் இருந்து கைவினைப் பொருட்களை செய்வதற்கு பயிற்சி கொடுத்தார். அதிலிருந்துதான் எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழணங்கு ஓவியத்தைப் பகிர்ந்த செய்தியை டி.வி., செய்தித்தாள்களில் பார்த்தேன்.

உமாபதி சாரிடம் அதுபற்றி கேட்டபோது, அது சந்தோஷ் நாராயணன் சார் வரைந்த தமிழன்னை ஓவியம்னு சொன்னார். அதுக்கப்புறம்தான் மூங்கில், இலைகளைக் கொண்டு தமிழணங்கை சிற்பமாக வடிவமைத்தேன். எனது தாய்க்கு நிகரானவர் தமிழ்த்தாய். அந்த வகையில் என் தாயைத்தான் சிலையாக வடித்திருக்கிறேன்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism