Published:Updated:

புதுக்கோட்டை: பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம்! தொல்லியல் ஆர்வலர்களால் கண்டுபிடிப்பு!

பாறை ஓவியம்

ஓவியங்களின் பின்புறமுள்ள, சொர சொரப்பான பாறையின் மேல், ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

புதுக்கோட்டை: பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம்! தொல்லியல் ஆர்வலர்களால் கண்டுபிடிப்பு!

ஓவியங்களின் பின்புறமுள்ள, சொர சொரப்பான பாறையின் மேல், ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
பாறை ஓவியம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே நார்த்தாமலையில், ஆளுருட்டி மலை கடம்பர் மலை, கோட்டை மலை, மேல் மலை ஊரமலை போன்ற மலைகள் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றன. இந்த நிலையில்தான், ஆளுருட்டி மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், ஆய்வாளர் பாலபாரதி என்பவரால், மலையின் கீழ்ப்பகுதியில் உள்ள குகைத்தளத்தில், நட்சத்திரக் கூட்டத்தைக் குறிக்கும் வெண் சாந்து ஓவியங்கள் இருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், தற்போது, ஆளுருட்டி மலையின் மேற்பகுதியிலும் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

புதுக்கோட்டை: பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம்! தொல்லியல் ஆர்வலர்களால் கண்டுபிடிப்பு!

பாண்டிய நாட்டுப் பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான கீரனூர் முருக பிரசாத், நாராயண மூர்த்தி ராகுல் பிரசாத் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டு, குகைப்பகுதியின் தென்புறம் செஞ்சாந்து ஓவியங்கள் சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்

இதுபற்றி தொல்லியல் ஆர்வலர்கள் கூறும்போது,

"தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட இடங்களில், பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகப் புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிதாக இந்தப் பாறை ஓவியங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இந்த ஓவியங்களின் பின்புறமுள்ள, சொர சொரப்பான பாறையின் மேல், ஒருவிதமான வழவழப்பான திரவம் பூசப்பட்டு, அதன்மேல் பளிச்சென்று தெரியும் வண்ணம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தற்போது ஓவியங்களின் பெரும்பகுதி சிதிலமடைந்திருக்கிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்த செங்காவி ஓவியங்கள் ஆளுருட்டிமலையின் கீழ்ப்பகுதியில் உள்ள வெண் சாந்து ஓவியத்தை விடவும் பன்மடங்கு காலத்தால் பழைமையானுவை என்றும், வெண் சாந்து ஓவியங்களைக் கண்டறிந்த ஆய்வாளர் பாலபாரதி உறுதி செய்துள்ளார்.

பொதுவாகப் பாறை ஓவியங்களின் காலம் வெண் சாந்து ஓவியமாக இருக்கும் பட்சத்தில் 5,000 ஆண்டுகள் எனவும், செங்காவி ஓவியமாக இருக்கும் பட்சத்தில் சுமார் 10,000 ஆண்டுகள் பழைமையானதாகவும் இருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புதுக்கோட்டை: பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியம்! தொல்லியல் ஆர்வலர்களால் கண்டுபிடிப்பு!

அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கலாம் என்று நம்புகிறோம். எழுத்து, ஓவியம், சிற்பங்கள் தான், நம் முன்னோரின் வரலாற்றை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. எனவே, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பாறை ஓவியங்களில் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவைகளை ரசாயன சோதனை செய்து, அவற்றின் காலத்தைத் துல்லியமாகக் கணிப்பதுடன், இந்த பாறை ஓவியங்களை, இரும்பு வேலியிட்டுப் பாதுகாக்கத் தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism