Published:Updated:

திருவள்ளுவன் என்னும் பிரபஞ்ச அறிஞன்..! - விவரிக்கும் வாசகர் #MyVikatan

அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்

திருவள்ளுவரின் பிரபஞ்ச அறிவு பிரமிக்க வைக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்புவரை பூமி தட்டையானது, நிலையானது, என்ற கருத்தே நிலவி வந்தது....

திருவள்ளுவன் என்னும் பிரபஞ்ச அறிஞன்..! - விவரிக்கும் வாசகர் #MyVikatan

திருவள்ளுவரின் பிரபஞ்ச அறிவு பிரமிக்க வைக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்புவரை பூமி தட்டையானது, நிலையானது, என்ற கருத்தே நிலவி வந்தது....

Published:Updated:
அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் உருவப்படம்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள இந்த நேரத்தில் இதையும் கொஞ்சம் தெரிந்துக் கொள்ளலாமே..

ஆசான் திருவள்ளுவரின் பெருமைகளைச் சொல்லி முடியாது. 'கடுகைத் துளைத்து எழுகடல் புகுத்தி குறுகத் தரித்த குறள் ' என்று போற்றுகிறோம்.

ஒரு ஒன்றேமுக்கால் அடியில் பெரும் சமுத்திரமாய் பொருள் விரியும் குறளுக்கு எண்ணற்ற பொருள் உரைத்திடினும் இன்னும் இன்னும் ஏதோ உள்ளடங்கியபடியே உள்ளதாகவே உணரவைக்கும் .குறளையும் வள்ளுவரையும் இப்படி தரிசிக்கலாமா..

"சுழன்றும் ஏர் பின்னது உலகம்...உழன்றும் உழவே தலை"

இக்குறளில் ஆசான் உழவின் பெருமையைக் குறிக்கிறார்.. இதன் பொருளை விரிவுப்படுத்தத் தேவையில்லை..

Representational Image
Representational Image
Pixabay

ஆனால் என் கருத்து அல்லது குறிப்பு என்னவென்றால் 'சுழன்றும் ' என்ற சொல்லைக் குறித்தது. ஏர் பின்னதுதான் உலகம் என்றாலே பொருள் புரியும். பின் ஏன் 'சுழன்றும்' என்ற சொல்?. இச்சொல் உலகம் அதாவது இந்த பூமியைக் குறிக்கிறது.. பூமி சுற்றினாலும் இல்லாவிட்டாலும், எல்லாமே உழவுத் தொழிலின் பின்னால்தான், என்பதுதான் பொருள். அதாவது பூமி சுற்றினாலும் சுற்றாவிட்டாலும் உழவே பெரிது என்கிற பொருள் கிடைக்கிறது.

இந்த இடத்தில்தான் திருவள்ளுவரின் பிரபஞ்ச அறிவு பிரமிக்க வைக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்புவரை பூமி தட்டையானது, நிலையானது, என்ற கருத்தே நிலவி வந்தது.

கிரேக்கர்களும் ரோமானியர்களும் இதுபற்றி ஆராய்ந்து வந்தார்கள்.

கலிலியோ பூமி தட்டையானது இல்லை என்று மறுத்தார். அதன் பிறகு அரிஸ்டோடாடஸ், பூமி சுழலும் தன்மை உடையது என்றார். ஆனால் பண்டைய கிரேக்க புராணவாதிகள் இக்கருத்தை ஏற்கவில்லை. ஆர்க்கிமிடிஸ், பிதகோரஸ், அரிஸ்டாட்டில் போன்றவர்களும் தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர். நமது பண்டைய வானியல் அறிஞர்களும் புதுப்புதுக் கருத்துக்களை முன் வைத்தனர். பூமி சுழல்வது குறித்த சர்ச்சைகளும் விவாதங்களும் கிரேக்கத்திலும் ரோமிலும் நடைபெற்றுவந்தன.

இந்திய வானியலின் தந்தை என்று கருதப்படும் பிரம்மகுப்தர் போன்றவர்களும் பூமி சுழலும் என்பதை ஏற்கவில்லை என்பது வரலாறு.

இந்தக் கருத்துக்களை எல்லாம் திருவள்ளுவர் அறிந்திருக்கக் கூடும். அதனால்தான் உலகம் பற்றிக் குறிப்பிடும்போது அவர் உலகம் சுழல்கிறதோ நிலைத்து நிற்கிறதோ அதைப்பற்றிய செய்தி எப்படி இருப்பினும் உழவுத்தொழிலுக்குப் பின்னால்தான் எல்லாம் என்று கூறுவதுபோல் இக்குறளைப் படைத்திருக்கக்கூடும். என்னே அவரது பிரபஞ்ச அறிவு.

ற்றொரு குறள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்."

இந்தக் குறளின் பொருளையும் நாம் மேம்போக்காக புரிந்து கடந்து விடுகிறோம்.

கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் வரும் குறளிது.

உலகம் பழித்து ஒதுக்குகிற தீயவற்றை விட்டுவிட்டால் நீண்ட முடி வளர்ப்பதும் முழுக்க மழித்துக் கொள்வதும் தேவையில்லை என்றுதான் பொருள் கொள்கிறோம்.

ஒழுக்கம் பற்றிக் குறிப்பிட விளையும் வள்ளுவர் துறவு மேற்கொள்வோருக்கான அறிவுரையாக மட்டும் ஏன் கூற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான அறிவுரைதானே. பின் ஏன் நீண்ட முடிவைத்துக் கொள்ளும் துறவிகளையும் மொட்டை போடும் துறவிகளையும் குறிப்பிட வேண்டும்.

கொஞ்சம் சிந்திப்போமா…

திருவள்ளுவர் காலத்தில் சைவ சமண பௌத்த மதங்கள் வேரூன்றியிருந்தன. மதங்களுக்கு இடையே சண்டைகளும் சர்ச்சைகளும் நடந்துவந்தன. இந்து மற்றும் வைணவர்கள் நீண்ட முடியினை(குடுமி) தங்கள் அடையாளங்களாக வைத்திருந்தார்கள். அதுபோல பௌத்த சமண துறவிகள் முழுவதும் மழித்து(மொட்டை)க் கொண்டிருந்தார்கள். இவைகளை எல்லாம் மத அடையாளங்ளாக்கி விட்டிருந்தனர். வெகுமக்கள் தங்கள் விரும்பியபடி முடி வைத்துக்கொள்வதையே விரும்புவார்கள்.

இதையே மத அடையாளங்களாக்கிவிட்டதை வள்ளுவர் தன் எதிர்ப்பாக இங்கே பதிவு செய்கிறார் என்று கொள்ளலாம் அல்லவா?

இதில் வேடிக்கை என்ன என்றால் நம்மிடம் பகிரப்படும் திருவள்ளுவரின் பிம்பம் தலைமுடி மற்றும் தாடியுடன் காணப்படுகிறது. நிச்சயம் அது திருவள்ளுவரின் தோற்றமாக இருக்க வாய்ப்பில்லை என்று பலரும் கூறி வருவதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

Representational Image
Representational Image

மேலும் இக்குறளின் மூலம் திருவள்ளுவரின் காலம் பற்றிய தெளிவும் அவரது சமூகப் பிரக்ஞையும் தெளிவாகத் தெரியும்.

ற்றொரு குறள் இதோ

"மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்".

இந்தக் குறளில் மனிதருக்கு உயிரைவிட மானமே பெரிது என்பதை வலியுறுத்துகிறார். அதற்காக அவர் மேற்கோள் காட்டுவது கவரிமானை…

கவரிமான் என்ற மானை யாரும் பார்த்ததில்லை. மான் இனத்தில் கவரிமான் என்ற வகை மான் ஏதும் இல்லை என்று விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் வள்ளுவர் கவரிமானைக் காட்டுகிறாரே ஏன்?. கவரிமான் உண்மையிலேயே இல்லையா ?. விலங்கியல் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்.?

கவரி என்றால் முடி .. இதுவே திரிந்து சவரி ஆனது.(சவரி முடி என்றால் புரியும்.) கவரி என்ற மாட்டினத்தைச் சேர்ந்த விலங்கு மலைப் பிரதேசங்களில் மூன்றாயிரம் அடி உயரத்திற்கு மேல் வாழ்வது. உடல் முழுவதும் அடத்தியான முடி குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். தரைப் பகுதிக்கு வந்தாலோ வெப்ப நிலை மாறுபட்டாலோ முடி உதிர்ந்து இறந்து விடும் உடல் அமைப்பை உடையது.

இந்த விலங்கின் பெயர் கவரிமா ..(கவரிமான் அல்ல) இந்த விலங்கைத்தான் வள்ளூவர் குறிப்பிடுகிறார் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வை விட்டுத் தள்ளுங்கள்.. ஆசானின் அறிவுப் பரப்பை உணர்ந்து கொள்வோம். எங்கோ உயிர் வாழும் விலங்கு பற்றிய அறிவு மட்டுமல்ல..அவற்றின் வாழ்வு பற்றியும் அறிந்து கொள்ளாமல் இப்படி ஒரு கருத்தை கூற முடியுமா... ஆசானின் கற்றலறிவும் கற்றவற்றை வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதும் நினைக்க நினைக்க விந்தையல்லவா…!


-கமலநாபன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/