Election bannerElection banner
Published:Updated:

`5 நாள்கள், 32 நாடகங்கள், 5 மொழிகள், 500 கலைஞர்கள்!' - சென்னையில் பிரம்மாண்டமான நாடகத் திருவிழா

நாடகத் திருவிழா
நாடகத் திருவிழா

காலை 10 மணி முதல்- இரவு 9 மணி வரை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை.

தென்னிந்தியா முழுவதும் உள்ள நாடகக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அக்டோபர் 2 முதல் அக்டோபர் 6 வரை தென்னிந்திய மக்கள் நாடக விழா நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் சென்னை கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த  நாடக விழா சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கேரள சமாஜம் அரங்கில் நடைபெறுகிறது .

தமுஎகச பத்திரிகையாளர் சந்திப்பு
தமுஎகச பத்திரிகையாளர் சந்திப்பு

500 கலைஞர்களால் 32 நாடகங்கள் நிகழ்த்தப்பட உள்ளன. அக்டோபர் 2-ம் தேதி கலைஞர்களின் பேரணியுடன் விழா தொடங்குகிறது. மூத்த நாடகக் கலைஞர் கண்ணப்ப காசி பேரணியைத் தொடங்கி வைக்கிறார். மறைந்த கலைஞர்களான கிரிஷ் கர்னாட், மனோரமா, ஞானி, ந.முத்துசாமி உள்ளிட்டோர் நினைவாக அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திரைப்பட நடிகர் நாசர், திரைக் கலைஞர் சச்சு உள்ளிட்டோர் அரங்கங்களைத் திறந்து வைக்கின்றனர். அக்டோபர் 2 -ம் தேதி தொடங்கும் விழா அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல்- இரவு 9 மணி வரை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நுழைவுக் கட்டணம் ஏதுமில்லை. பார்வையாளருக்கு இலவச அனுமதி.

நாடகக்கலைஞர் பிரளயன்
நாடகக்கலைஞர் பிரளயன்

அக்டோபர் -5 ஆம் தேதி, திரைப்பட நடிகர்கள் விமல், குருசோமசுந்தரம், குமாரவேல், ரோகிணி, வேல ராமமூர்த்தி நடிக்கும் ஓராள் நாடகங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இவ்விழாவின் அழைப்பிதழை திரை கலைஞர் ரோகிணி (தமுஎகச துணைத்தலைவர்) எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா (தமுஎகச பொதுச்செயலாளர்) நாடகவியலாளர் பிரளயன் (விழா ஒருங்கிணைப்பாளர்) வெளியிட்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு