Published:Updated:

சென்னை தீவுத் திடலில் கோலாகலமாக நடந்த 'நம்ம ஊரு திருவிழா' - என்ன ஸ்பெஷல்?

நம்ம ஊரு திருவிழா’

கிராமியப் பாடகி கலைமாமணி சின்னப்பொண்ணு, திரைப்படப் பின்னணிப் பாடகர் கானா பாலா மற்றும் நாகூர் சூஃபி குழுவினர் இறை வாழ்த்துப் பாடல்களைப் பாடித் தொடங்கி வைத்தனர்.

சென்னை தீவுத் திடலில் கோலாகலமாக நடந்த 'நம்ம ஊரு திருவிழா' - என்ன ஸ்பெஷல்?

கிராமியப் பாடகி கலைமாமணி சின்னப்பொண்ணு, திரைப்படப் பின்னணிப் பாடகர் கானா பாலா மற்றும் நாகூர் சூஃபி குழுவினர் இறை வாழ்த்துப் பாடல்களைப் பாடித் தொடங்கி வைத்தனர்.

Published:Updated:
நம்ம ஊரு திருவிழா’
தமிழகக் கலை பண்பாட்டுத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய ‘நம்ம ஊரு திருவிழா’ சென்னை, தீவுத் திடலில் இனிதே நிகழ்ந்தேறியது. நாட்டுப்புறக்கலைகளுக்கு ஒரு அங்கீகாரமாய்த் திகழ்ந்த இந்நிகழ்வில் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று தங்கள் கலைத் திறனைக் காட்சிப்படுத்தினர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த கலைஞர்களால் சுமார் 30க்கும் மேற்பட்ட கலைகள் அம்மேடையில் நிகழ்த்தப்பட்டன.

கட்டைக்கூத்து கலைஞர்களின் அறிமுகத்தோடு விழா தொடங்க, மதநல்லிணக்கத்தைப் பறைசாற்றும் விதமாக மும்மத இறைவாழ்த்துப் பாடல்கள் பாடப்பட்டன. கிராமியப் பாடகி கலைமாமணி சின்னப்பொண்ணு, திரைப்படப் பின்னணிப் பாடகர் கானா பாலா மற்றும் நாகூர் சூஃபி குழுவினர் இறை வாழ்த்துப் பாடல்களைப் பாடித் தொடங்கி வைத்தனர்.

நம்ம ஊரு திருவிழா’
நம்ம ஊரு திருவிழா’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தாள இசை நிகழ்ச்சிகள் முதலாவதாக அமைய டிரம்ஸ் சிவமணி அவர்களுடன் இணைந்து நெல்லை மகுட மேளக் குழுவினர், கிருஷ்ணகிரி பம்பை மேளக் குழுவினர், கோவை துடும்பாட்டக் குழுவினர் மற்றும் இராமநாதபுரம் நையாண்டி மேளக் குழுவினர் தங்கள் மேள இசையால் அரங்கை அதிரச்செய்ய, தோல் பாவைக்கூத்து, தப்பாட்டம், சண்ட மேளம் முதலிய கலைகளும் நிகழ்த்தப்பட்டன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மேலும் வீரத் தமிழ்க் கலைகளின் அணிவகுப்பாகச் சிலம்பாட்டம், புலியாட்டம், மான்கொம்பு ஆட்டம், காவடி ஆட்டம், மரக்கால் ஆட்டம், அம்மன் நிகழ்ச்சி, தீ விளையாட்டு முதலியனவும் மேடையேற்றப்பட்டிருந்தன. வீரம், மேளம் என அரங்கு ஆர்ப்பரிக்க மக்களைச் சற்று மெருகூட்டும் விதமாக நீலகிரி தோடர் நடனக்குழுவால் தோடர் நடனமும், சேர்வை ஆட்டமும் நிகழ்த்தப்பட்டன.

நம்ம ஊரு திருவிழா’
நம்ம ஊரு திருவிழா’

ஆட்டங்களும் நடனங்களும் கண்களுக்கு வண்ணமயமாய் அமைய, செவிகளுக்கு விருந்தாய் நாட்டார் பாடல்களைப் பாட பல்வேறு குழுவினரும், தனிப்பட்ட பாடகர்களும் தங்கள் இசை நிகழ்ச்சியை இனிதாய் நிகழ்ந்தேறச் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்புறக் கலைஞர்களின் நடனம் நிகழ்ந்தேற, தேசிய கீதத்துடன் முடிவுபெற்றது ‘நம்ம ஊரு திருவிழா.’

விழாவைத் தொடங்கிவைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாநகராட்சி மேயர் பிரியா முதலானோர் கலைஞர்களைக் கௌரவிக்க, அருந்தமிழ் கலைகளின் அணிவகுப்பாய் கோலாகலமாக முடிவடைந்தது ‘நம்ம ஊரு திருவிழா.’

- சுபஸ்ரீ

(பயிற்சிப் பத்திரிகையாளர்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism