Published:Updated:

நலிவடைந்த நிலையில் நாட்டுப்புறக் கலைகள்... கலைஞர்களின் ஒரு நாள் எப்படி இருக்கிறது? #VikatanPhotoStory

நலிவடைந்த நிலையில் உள்ள நாட்டுப்புறக் கலைகளும்... அன்றாட வாழ்விற்கே அல்லல்பட்டு வறுமையில் வாடும் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களும்!

நாங்கள் சுமார் 40 ஆண்டுகளாக பொய்க்கால் குதிரை ஆட்டம் மற்றும் கரகாட்டம் ஆடி வருகிறோம்.

கலை நிகழ்ச்சிகள் இரவு எட்டு மணிக்கு துவங்கி விடிய விடிய அதிகாலை ஐந்து அல்லது ஆறு மணி வரை நடக்கும். எனவே மேடையில் பிற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரத்தில் மட்டுமே இந்தக் கலைஞர்கள் குட்டி தூக்கம் தூங்கி ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

விடிய விடிய கண் விழித்து நடிக்கும் இந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளம் 800 ரூபாய் மட்டுமே!

பொய்க்கால் குதிரை நடனத்தை கற்றுக் கொள்ள ஒன்று முதல் ஒன்றரை வருடம் ஆகும்.

கரகாட்டம் மற்றும் பொய்கால் குதிரையின் கலைஞர்கள் தங்களுக்குரிய வேடங்களில் நடிக்க உரிய உடை அணிந்து அலங்காரம் செய்து தயாராகவே குறைந்தது இரண்டு மணி நேரங்கள் ஆகின்றன.

இந்தக் கலை எங்கள் தலைமுறையோடு முடிந்து விடுமோ என்ற பயம் எங்களுக்கு உண்டு!

கலை நிகழ்ச்சிகள் துவங்குவதற்கு  ஒரு மணி நேரத்திற்கு முன்பே தயாராக இருக்க வேண்டும்.

பொய்க்கால் குதிரை ஆட்டம்  ஆடும் கலைஞர்கள் ஆடும் இடத்திற்கு செல்ல இரண்டு பேர் உதவியுடன் தான் செல்ல முடியும்.

"தற்போது உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பரதநாட்டியம் போன்ற நடனங்கள் பயில்வதையே விரும்புகின்றனர். ஆனால், அவர்கள் தமிழ்நாட்டின் பழைமை வாய்ந்த தொன்மையான கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், கும்மி ஆட்டம் போன்ற பாரம்பர்யக் கலைகளை கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தக் கலைகளை நாம் அழியாமல் பாதுகாக்க முடியும்!" என இக்கலைஞர்கள் வேண்டி கேட்டுக் கொள்கின்றனர்.

வறுமை நிலையில் வாழ்ந்தாலும் பாரம்பர்ய கிராமிய கலையை வாழ வைக்கும் கரகாட்ட கலைஞர்கள்.

பொய்கால் குதிரை ஆட்டத்தில் ஆண் குதிரை வேடம் கட்டி ஆடுவது ராஜா
குதிரை என்றும் பெண் குதிரை  வேடம் கட்டி ஆடுவதை ராணி குதிரை என்றும் கூறுவர். கலை நிகழ்ச்சியின் இறுதியில் ராஜா ராணி குதிரைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்.
பொய்கால் குதிரை ஆட்டத்தில் ஆண் குதிரை வேடம் கட்டி ஆடுவது ராஜா குதிரை என்றும் பெண் குதிரை வேடம் கட்டி ஆடுவதை ராணி குதிரை என்றும் கூறுவர். கலை நிகழ்ச்சியின் இறுதியில் ராஜா ராணி குதிரைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும்.
நமது பாரம்பர்ய நடனமான பொய்க்கால் குதிரை மற்றும் கரகத்தை தற்பொழுது நகரவாசிகள் பெரும்பாலும் விரும்புவதில்லை.