Published:Updated:

"பழைமையான பொம்மலாட்டக் கலையைக் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும்" - `கலைமாமணி' சோமசுந்தரம் கோரிக்கை!

'கலைமாமணி' சோமசுந்தரம்

கோயில்களிலும் தற்போது சினிமாப் பாடல் காட்சிகள் பொம்மலாட்டத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பொம்மலாட்டம் ஒரு தள்ளாட்டமாகவே ஆகிவிட்டது.

"பழைமையான பொம்மலாட்டக் கலையைக் காப்பாற்ற அரசு முன்வரவேண்டும்" - `கலைமாமணி' சோமசுந்தரம் கோரிக்கை!

கோயில்களிலும் தற்போது சினிமாப் பாடல் காட்சிகள் பொம்மலாட்டத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பொம்மலாட்டம் ஒரு தள்ளாட்டமாகவே ஆகிவிட்டது.

Published:Updated:
'கலைமாமணி' சோமசுந்தரம்
இரண்டாயிரம் ஆண்டுகளாய் மக்களை மகிழ்வித்து வருவது பாவைக்கூத்து எனப்படும் பொம்மலாட்டக் கலையாகும். நவீன காலத்தில் மெல்ல மெல்ல அருகி வரும் பழைமையான கலையை மயிலாடுதுறையைச் சேர்ந்த ஸ்ரீ கணநாதா பொம்மை நாடக சபா கலைக்குழுவினர் தொடர்ந்து நடத்தி உயிரூட்டிவருகின்றனர்.

குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது என்பார்கள். பொம்மைகள் அவர்களின் கனவுலகத்தில் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாகவும் சிரித்து பேசும். அப்பொம்மைகளைக் கொண்டு கண்முன்னே நிகழ்கால உலகத்தில் ஆடிப் பாடுவதால் என்னமோ பொம்மலாட்டம் என்பது குழந்தைகளை மகிழ்விக்கும் முக்கிய கலையாக மாறிப்போனது. 

எடை குறைவாகவுள்ள கல்யாண முருங்கைமரம், அத்திமரம் ஆகியவற்றால் தலை, உடல் பாகங்கள் தனித்தனியே செய்யப்பட்டு, கயிறு அல்லது கம்பி மூலம் பிணைக்கப்பட்டு திரைக்குப் பின்னால் இருந்து, தேவைக்கேற்ப அசைவுகளையும், பின்னணி குரல்களையும் அளித்து, பார்வையாளர்கள் வியக்கும் வண்ணம் நடைபெறுவது பொம்மலாட்டமாகும்.

'கலைமாமணி' சோமசுந்தரம்
'கலைமாமணி' சோமசுந்தரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரிச்சந்திரா நாடகம், ராமாயண காவியம், மகாபாரதம், வள்ளித்திருமணம், குறவன் குறத்தி ஆட்டம் உள்ளிட்டவை இவற்றின் முக்கிய கருப்பொருளாக இருக்கும். தற்போது கால சூழலுக்கேற்ப நவீன கால வசனங்களுடன் போதை பொருள் விழிப்புணர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, நோய் பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை பொதுமக்களுக்கு ஏற்படுத்த பொம்மலாட்டம் பயன்படுகிறது. இருப்பினும் மயிலாடுதுறை, சென்னை, மதுரை, தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய குழுக்கள் மட்டுமே தற்போது பொம்மலாட்ட கலையை நடத்தி வருகின்றன. ஒரு குழுவிற்கு குறைந்தபட்சம் ஐந்து முதல் ஏழு பேர் வரை செயல்படுகின்றனர். பொம்மலாட்டம் மூலம் போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இதை ஒரு துணைத்தொழிலாக மட்டுமே பலர் பார்க்கின்றனர். கோயில்களிலும் தற்போது சினிமாப் பாடல் காட்சிகள் பொம்மலாட்டத்தின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பொம்மலாட்டம் ஒரு தள்ளாட்டமாகவே ஆகிவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மயிலாடுதுறையில் ஸ்ரீ கணநாத பொம்மை நாடக சபா என்ற பெயரில் மூன்றாவது தலைமுறையாக பொம்மலாட்டத்தை நடத்திவரும் `கலைமாமணி' சோமசுந்தரத்திடம் பேசினோம்.

”எங்கள் குழுவில் கடந்த 30 ஆண்டுகளாக ராஜேந்திரன் என்ற 74 வயது முதியவர் பரதமாடும் பொம்மையை பின்னாலிருந்து ஆடிப் பாடி இயக்குகிறார். அவர்போல பெரும்பாலும் வயதானவர்கள் மட்டுமே தற்போது பணியாற்றிவருகின்றனர். இவர்களது வாரிசுகள் வேறு வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், பொம்மலாட்டம் மூலம் போதிய வருமானம் இருக்காது என்பதால் இவற்றைக் கற்றுக்கொள்ள யாரும் முன்வருவதில்லை. அரசு இசைப் பள்ளிகளில் மற்ற இசைப் பயிற்சிகளுடன் பொம்மலாட்டக் கலையையும் பயிற்றுவிக்க வேண்டும். மேலும், பள்ளிகளில் மாணவர்களை நல்வழிபடுத்தவும், மன உறுதியைத் தரவும் இந்தப் பொம்மலாட்டக் கலை பயன்படும்.

ஸ்ரீ கணநாத பொம்மை நாடக சபா
ஸ்ரீ கணநாத பொம்மை நாடக சபா

ஒரு நாட்டின் வரலாறு என்பது அதன் மரபுகளைக் காப்பாற்றுவதில் இருக்கிறது. மரபுவழிக் கலையான பொம்மலாட்டக் கலை அழியாமல் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்" என்றார்.