Published:Updated:

தோல்பாவைக் கூத்தின் மூலம் கொண்டாடப்பட்ட காமராஜர் பிறந்தநாள் விழா! - மதுரை மாணவர்கள் உற்சாகம்

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

மறைந்துவரும் கலைகளில் ஒன்றான தோல்பாவைக் கூத்து கொண்டாடப்பட வேண்டிய கலைகளில் ஒன்று. எங்கள் பள்ளியில் நடைபெற்ற தோல்பாவைக் கூத்து நிகழ்வு நேர்த்தியாக அமைந்தது.

காமராஜர் பிறந்தநாள் விழா
காமராஜர் பிறந்தநாள் விழா ( ஈ.ஜெ.நந்தகுமார் )

தோல்பாவைக் கூத்து அருகிவரும் கலைகளில் ஒன்று. தஞ்சாவூர், கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவுக்கு இந்தக் கலை நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது. அழிவின் விளிம்பில் உள்ள கலையைத் தமிழகத்தில் ஒரு சிலர் மட்டுமே காப்பாற்றி வருகின்றனர்.

தோல் பாவையில் காமராஜர்
தோல் பாவையில் காமராஜர்
ஈ.ஜெ.நந்தகுமார்

இதில் தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி பகுதியில் வசித்துவரும் முத்து லெஷ்மணராவும் ஒருவர். 5-வது தலைமுறையாகத் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி நடத்திவரும் இவர் தன் 4 பிள்ளைகளையும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்திவருகிறார்.

இந்நிலையில் மதுரை எம்.சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. காமராஜர் முதல்வராக இருந்த சமயத்தில் மக்களுக்கு ஆற்றிய தொண்டை விளக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.

தோல்பாவைக் கூத்து
தோல்பாவைக் கூத்து
நந்தகுமார்

நகைச்சுவையும் பாடல்களும் கலந்த தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சியால் பள்ளியே களைகட்டியது. இந்த நிகழ்ச்சியை பள்ளி செயலர் பார்த்தசாரதி மற்றும் தலைமை ஆசிரியர் ரவி ஏற்பாடு செய்தனர்.

மேலும் நிகழ்ச்சி குறித்து தமிழ் ஆசிரியர் சிவா, ``இந்த ஆண்டு காமராஜர் பிறந்தநாள் விழா தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சி மூலம் எங்கள் பள்ளியில் நிறைவடைந்தது. மாணவர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு.

தோல்பாவைக் கூத்து ரசிக்கும் மாணவர்கள்.
தோல்பாவைக் கூத்து ரசிக்கும் மாணவர்கள்.
நந்தகுமார்

மறைந்துவரும் கலைகளில் ஒன்றான தோல்பாவைக் கூத்து கொண்டாடப்பட வேண்டிய கலைகளில் ஒன்று. எங்கள் பள்ளியில் நடைபெற்ற தோல்பாவைக் கூத்து நிகழ்வு நேர்த்தியாக அமைந்தது. காமராஜர் பற்றிய குட்டிக் குட்டி தகவல்கள் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமைந்தது" என்றார்.