Published:Updated:

பாரதியின் வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்கள் இவைதான்; பாரதியார் பிறந்ததினப் பகிர்வு!

மகாகவி பாரதியார்
News
மகாகவி பாரதியார்

இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் என்றால் அது பாரதியாருடையதேயாகும். அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்குப் பஞ்சமே இல்லை.

சக உயிர்களிடத்தில் அன்பு

சிட்டுக்குருவிகளுக்கு அரிசி மணிகளை உணவாகப் படைப்பார் பாரதியார் என்பது தெரிந்திருக்கும். திருவனந்தபுரத்திலிருந்த மிருகக்காட்சி சாலைக்கு அவர் சென்றபோது அங்கு உள்ள விலங்குகளைத் தொட்டுப் பேச முயன்றார். ஊழியர்கள் முதலில் தயங்கினாலும் பிறகு அனுமதித்தனர். கூண்டுக்குள் இருந்த சிங்கத்தின் தலை, காது, பிடரி போன்றவற்றைத் தடவிக் கொடுத்தார். இந்த உலகம் அனைவருக்குமானது என்ற எண்ணம் இருந்தால் அது அனைவருக்கும் நல்லது. காட்டுப் பகுதிகளை வீட்டுப் பகுதிகளாக ஆக்குவதால் யானை போன்ற காட்டு விலங்குகள் ஊருக்குள் நுழைவதை எவ்வளவு முறை பார்த்திருக்கிறோம்!

பாரதியார்
பாரதியார்

பரந்துபட்ட மொழியறிவு

தமிழின் குறியீடாகவே கருதப்படுபவர் பாரதியார். தாய்மொழியான தமிழைப் பற்றி மிகப் பெருமை கொண்டவர். யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது வேறு இல்லை என்று கூறியவர். இதில் இன்னொரு உள்ளடக்கமும் இருக்கிறது. 'அவர் அறிந்த மொழிகள்' முப்பதுக்கும் மேற்பட்டவை எனும்போது அவரது தமிழ்ப் பெருமை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மூன்று வெளிநாட்டு மொழிகளை வேறு அறிந்து வைத்திருந்தார் அவர். ஒருபுறம் தாய்மொழிப் பற்று இருந்தபோதிலும் பிற மொழிகளை வெறுக்காமல் அவற்றை நாடி அறிந்துகொண்டது நமக்கான எடுத்துக்காட்டும்கூட. எந்த சூழலில் பிறமொழிகள் நமக்கு உதவும் என்பதை முன்னதாகவே கணிக்க முடியாது. ஆனால் அவை நிச்சயம் உதவும்.

பாரதியார்
பாரதியார்

உதாரணமாக விளங்குதல் அவசியம்

பிறருக்கு போதிப்பதை நாமும் கடைப்பிடிக்க வேண்டும். சமத்துவம் என்று முழங்கும் பலரும் தங்கள் வாழ்க்கையில் புகைப்படக்கருவிகளுக்கு முன்புதான் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் பாரதியார் அப்படியல்ல. தலித் மக்கள் ஆலயத்துக்குள் நுழையப் போராடினார். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த சிறுவர்களுக்கும் பூணூல் அணிவித்தார். 'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே' என்று பாடியவர், தன் குருவாக சகோதரி நிவேதிதாவை ஏற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அளவற்ற தேசபக்தி

பாரதியின் தேசப்பற்று கேள்விக்கு அப்பாற்பட்டது. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு முரசே, அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று மக்களைத் தட்டி எழுப்பி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தார். என்று தணியும் இந்த சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்று மனம் வெதும்பிப் பாடினார். வீட்டு வாசலுக்கு வந்த குடுகுடுப்பைக்காரன் 'நாட்டுக்கு நல்ல காலம் பொறக்குது' என்று குறி சொன்னதற்காகப் பரவசமடைந்து தன் வேட்டியை உடனடியாகக் கழற்றிக் கொடுத்ததும் உண்டு! தாய்க்கு சமமாக தாய் நாட்டையும் மதிப்பவர்கள் சிறந்து விளங்குவார்கள்.

மகாகவி பாரதியார்
மகாகவி பாரதியார்

அடங்க மறு

பாரதியார் 39 வருடங்கள்தான் உயிர் வாழ்ந்தார். ஆனால் தனக்கு நினைவு தெரிந்த ஒவ்வொரு நாளும் அவர் எந்த சிந்தனைக்கும் அடிமை ஆகவில்லை. கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டு அவற்றிற்கு விடை காண முயற்சித்தார். அதனால்தான் அவர் சிந்தனைகளில் புரட்சிகள் முளைத்தன. சாதாரணர்களையும் எழுத்து மூலம் தட்டி எழுப்பினார். கட்டிப் போட்டார். வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தபோதும் தன் சுதந்திர எண்ணங்களை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார். பழைய கோட்பாடுகளும் நடைமுறைகளும் சரியானவை அல்ல என்று நினைத்தால் அவற்றைத் தூக்கி எறிய அவர் தயங்கியதே இல்லை. இன்றும் அவர் புரட்சிக்கவிஞர் என்றே அறியப்படுகிறார்.