Published:Updated:

மயிலாடுதுறை: முகக் கவசம் அணிவதன் அவசியம் - மியூரல் முறை ஓவியங்களால் விழிப்புணர்வு!

மியூரல் ஓவியங்கள்
மியூரல் ஓவியங்கள்

கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இந்த ஓவியங்களைப் பொதுமக்கள் பார்த்துவிட்டு மாணவர்களைப் பாராட்டிச் செல்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முகக் கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பெண் முகக்கவசம் அணிந்த விழிப்புணர்வு படம் மற்றும் மயிலாடுதுறை நகரின் பெருமைகளை உணர்த்தும் படங்கள் ஆகியவற்றை 'மியூரல்' முறை ஓவியங்களாக மாணவர்கள் வரைந்திருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

மியூரல் ஓவியங்கள்
மியூரல் ஓவியங்கள்

மயிலாடுதுறை ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை தரமணி எம்.ஜி.ஆர். திரைப்பட கல்லூரி இறுதியாண்டு மாணவர்  பாரதிராஜா, கோவை வணிகவியல் கல்லூரி மாணவர் ஹரிஹரன், பெரம்பலூர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரதீப் மற்றும் மோகன் ஆகியோர் இணைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள 3 கட்டட சுவர்களில் தத்ரூபமாக 'மியூரல்' முறையிலான பெயிண்டிங் ஓவியத்தை வரைந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கொரோனா தொற்றுப் பரவாமல் இருக்க முகக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பெண் முகக்கவசம் அணிந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியத்தையும், மயிலாடுதுறையின் பாரம்பர்ய பெருமைகளை உணர்த்தும் வகையில் காவிரி துலாக்கட்ட மண்டபம், ரிஷபதீர்த்த காவேரி, நந்திகேஸ்வரர், மணிக்கூண்டு, ரயில், மாடு, வளமான வயல்வெளி, பள்ளிவாசல், சர்ச் ஆகிய ஓவியங்களையும் வரைந்துள்ளனர்.

மருத்துவமனை வாயிலிலுள்ள இரண்டு பக்க சுவர்களில்  ஒருபுறம் மிகப்பெரிய கொரானா வைரஸ் ஒன்றை மருத்துவர்கள் தடுப்பூசி செலுத்தி அழிப்பதை போன்றும், மறுபுறம் மயிலுருவில் மயிலாடுதுறையில் வசிக்கும் மக்களை மருத்துவர்கள் காப்பது போலவும் ஓவியங்களைத் தீட்டியுள்ளனர்.

மியூரல் ஓவியங்கள்
மியூரல் ஓவியங்கள்

இந்த ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கல்லூரி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இந்த ஓவியங்களைப் பொதுமக்கள் பார்த்துவிட்டு மாணவர்களைப் பாராட்டிச் செல்கின்றனர். மேலும் இந்த ஓவியங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு