Published:Updated:

நாணயம்! - கவிதை #MyVikatan

ஹீரோ விக்னேஷ்... வீட்டில் விருந்து. தடபுடலாய்...

Representational Image
Representational Image

'பாலா' படம் வெற்றி.

பத்திரிகைகளும் சமூக ஊடகங்களும்... பரபரப்பாய் ரேட்டிங் உயர்த்த...

ஹீரோ விக்னேஷ் வீட்டில் விருந்து. தடபுடலாய்... தலைக்குத் தல தலைப்பாக்கட்டு பிரியாணி.

மாடியில் இருந்து வீட்டு ஹாலுக்குள் நுழைந்தவன் மீது... நூற்றுக்கணக்கான ‘ ப்ளாஷ் !’

உடம்பே கூசியது விக்னேஷுக்கு. தலைக்கு மேல் கை கூப்பியவன்...

“ ப்ளீஸ்... ஓ.கே ஃப்ரெண்ட்ஸ். ‘ பாலா ‘ படம் பற்றிய உங்க விமர்சனத்திற்கு நன்றி. “

விக்னேஷ் வாயை மூட முடியாது... மைக்குகள் நுழைய ஒரே தள்ளுமுள்ளு.

“ இப்ப இன்டர்வியூ இல்லை. அது... நூறாவது நாள் வெற்றி விழாவில்...“

Representational Image
Representational Image

விக்னேஷ் ஒரேயடியாக மறுக்க, மீடியாக்கள் சோகமாய் மௌனமான தருணம்...

ஜூனியர் விக்னேஷ்... அப்பா சாயலில் ஹாலுக்குள் என்ட்ரி கொடுத்தான்.

“ஹா... வாங்க ஜூனியர்...” ஒட்டுமொத்த மீடியாவும் அணி தாவ, பையனை தாவிப்பிடித்தான் விக்னேஷ்.

“ உங்க கேள்வியை... இவன், நரேன் சந்திப்பான்...” கர்வமாய் பையனை முன் நிறுத்த...

“ உங்க அப்பா, பெரிய ஹீரோ... நம் நாட்டில, உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?”

நரேன் கூச்சமாய்... சுற்றும் முற்றும் பார்த்தான்.

“ ஹ... உங்க ஹீரோ யாரு?” மீண்டும் கேமராவுக்காக விக்னேஷ் தயாராக...

Representational Image
Representational Image

“அ அது... அதோ...” காட்டிய திசையில் கைகட்டிய நிலையில் வேட்டி பனியனுடன் வேலைக்காரன் குரு.

“அவருதான், என்னைக் காலையில எழுப்பி... சாப்பாடு ஊட்டி... ஸ்கூலுக்கு அனுப்பி... ஹோம் ஒர்க் செய்ய வைச்சி... நைட்டு தூங்குறவரை கூடவே இருப்பாரு... ஹி...ஹி...ஹி...” நரேஷ் உற்சாகமாய் கைதட்ட...

கண்ணீருடன் கைகூப்பினார் குரு.

ஹீரோ... வில்லன்... ஒரே வீட்டில்... நாணயம் போன்று.

- மதுரை முரளி

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க... https://www.vikatan.com/special/myvikatan/