Published:Updated:

அப்பச்சி வீடு! - கவிதை #MyVikatan

விகடன் வாசகர்

விட்டுச்சென்றதன் காரணம் யாதென்ற மகளின் துளையிடும் கேள்விக்கு அரூபமாய் மனத்திரையில் விரிகிறது..

Representational Image
Representational Image ( Pixabay )

மாநகரில் புதிதாய்க் குடியேறின

அடுக்ககத்தின் மேல்தளச் சாளரம் வழி

பருந்துப் பார்வையில்

உலகம் பார்க்கும் செல்ல மகள்

கூவிக்கூப்பிட்டுச் சுட்டுகிறாள்

கீழே பெயரறியா மரமொன்றில்

பெயரறியாப் பட்சியொன்று

நிராதரவாக்கிச் சென்ற கூட்டினை,

Representational Image
Representational Image

பிளந்த முட்டையோடுகளோடு

மெல்லிறகுகளும்

மீன் முற்களும்

நத்தைக்கூடுகளும்

எச்சமாய்க்கிடந்து

கட்டியம் சொல்லியது

அப்பட்சிக் குடும்பம்

வாழ்ந்து கடந்த

பெரும் வாழ்வை..

விட்டுச்சென்றதன் காரணம் யாதென்ற மகளின் துளையிடும் கேள்விக்கு அரூபமாய் மனத்திரையில் விரிகிறது..

Representational Image
Representational Image

ஆளில்லாத் திண்ணைகளும்

கன்றில்லாத் தொழுவங்களும்

தானியமில்லாக் குதிருகளும்

பரணில் தூங்கும் மரப்பாச்சிகளும்

பிள்ளைகளாடி விளையாடின

நிலைக்கதவும் சாட்சியாக

நாங்கள் நிராதரவாக்கிவிட்டு வந்த

கிராமத்துப் பூர்வீக

அப்பச்சியின் வீடு..!

-நாராயணபுரம் கணேசவீரன்

My Vikatan
My Vikatan

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

ஏதோ ஒரு ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்து கொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காக களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க...

https://www.vikatan.com/special/myvikatan/