Published:Updated:

மீனின் தற்கொலை முயற்சி!? - குறுங்கதை #MyVikatan

வழக்கத்துக்கு மாறாக அன்று மட்டும் தங்க நிறச் சிறிய ஜெல்லிப் பந்து அளவுடைய மீனை மட்டும் அரைத்தூக்கக் கண்களால் பதிவு செய்து விட முடியவில்லை.

Representational Image
Representational Image

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

வழக்கம்போல் காலை அலாரத்தை அலைக்கழித்து அரைத்தூக்க முகத்துடன் திரும்பிப் படுக்க முயற்சி செய்யும்போது சிறுநீர் சிக்கலால் என் தூக்கம் கைதானது. சிறுநீர்க் கைதி விடுதலையானதும் என் முதல் வேலையாய்ப் பாதி உறக்கக் கண்களுடன் கண்ணாடித் தொட்டிலில் குழந்தைகளாக வாழ்ந்துகொண்டிருக்கும் மீன் குட்டிகளுக்கு உணவளித்து மகிழ்வது என் வழக்கம்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

வழக்கத்துக்கு மாறாக அன்று மட்டும் தங்க நிறச் சிறிய ஜெல்லிப் பந்து அளவுடைய மீனை மட்டும் அரைத்தூக்கக் கண்களால் பதிவு செய்து விட முடியவில்லை. இரண்டு அல்லது மூன்று முறை அரைத்தூக்கக் கண்களைக் கசக்கிப் பார்த்த போதும் தென்படவில்லை. கண்டிப்பாக இது தற்கொலை முயற்சி செய்வதற்காகத் தொட்டிலிலிருந்து வெளியே துள்ளிக் குதித்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதிர்ந்து தொட்டிக்குப் பக்கவாட்டிலும் மீன்தொட்டி தாங்கிய மேஜை அடியிலும் தூக்கம் தெளிந்த கண்கள் விரைந்தன.

பெட்டிக்கடியில் பலநாள் வீட்டுத் தூசியுடன் உடல் முழுவதும் முடி சுற்றி தங்க நிற ஜெல்லிப் பந்து கறுப்பு நிறமாகியிருந்தது. சுழன்று சுழன்று தான் சாகப் போகிறேன் என்பதை மென்மையான வாயால் திறந்து திறந்து மூடிக்கொண்டிருந்ததைக் கண்ட என் ஈரமனம் உடனே அதைப் பூப்போலக் கவ்விக்கொண்டு ஒரு நீர் நிறைந்த வாளியில் போட்டு மீனின் கைகளைக் கட்டியிருந்த தூசிமுடிகளை நீரின் துணை கொண்டு நீக்கினேன்.

மீனின் தற்கொலை முயற்சி!? - குறுங்கதை #MyVikatan

பின்னர், அதைச் சுதந்திரமாய் நீந்த விட்டேன். ஆனால், அது நீந்த முயல்வதைப் பார்க்கும்போது ஒரு நோயாளியின் செயல்பாடுகளை உணர்ந்தேன். இருப்பினும் அது மேன்மேலும் நீந்த முயற்சி செய்து தன் வாய் திறந்து நீர்க்குமிழி விடும் போது, தான் தற்கொலை செய்துகொள்ள குதிக்கவில்லை, என் கைஇறகு வளர்ச்சி கண்ட உற்சாக மிகுதியால்தான் குதித்தேன் என்ற மீனின் மொழிச்சொல் என் காதில் விழுந்ததை எண்ணி மகிழ்ந்தேன். சில மணி நேர முடிவில் நோயாளி அல்லாத மீனின் செயல்பாட்டைப் பார்த்து உயிர் காத்த மகிழ்வுடன் தூக்கம் கலைத்தேன்.

-இலக்கிய கர்வி ச.பிரபாகரன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/