Published:Updated:

தேவியும் ராஜமும்: உட்கூரை ஓவியங்களின் மறுபதிவுக்குப் பின்னால்..! #VikatanDiwaliMalar2019

வந்த வாழ்வையும், வளம்பெற்ற செல்வத்தையும் அவை தனக்கானவை அல்ல என்று கருதியவர். எளிதில் யாராலும் அணுகக் கூடியவராக இருந்தார்

எஸ்.ராஜம்
எஸ்.ராஜம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், பொற்றாமரைக் குளத்தின் எதிரில் உயரமான நடுவயதுக்காரர், நடைபாதையின் உட்கூரையைப் பார்த்தபடியே நின்றுகொண்டிருக்கிறார். அங்கே வரையப்பட்டிருக்கும் தேவியின் வெவ்வேறு வகை ஓவியங்கள் அவரைக் கவர்ந்திழுக்கின்றன.

"ஆமாம்... இதுவேதான்... நாளை காலை நான் இங்கே வரலாமா?'' என்று உடன் வந்த கோயில் சிப்பந்தியிடம் கேட்டு சம்மதம் பெறுகிறார்.

மறுநாள் காலை மிகச் சரியாகப் பத்து மணிக்கு, வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு அந்த இடம் வந்தார் உயர்ந்த மனிதர். கையில் காகிதச் சுருள்கள், கூர்தீட்டப்பட்ட பென்சில்கள், ஓவியம் வரையத் தேவைப்படும் மற்ற பொருள்கள். அடுத்த இரண்டு மணி நேரத்துக்குக் கழுத்தை வளைத்து உட்கூரையை கவனமாகப் பார்த்துக்கொண்டே அவர் வரைய, தேவியின் உருவம் காகிதத்தில் பதிந்தது. தேவியின் ஆடை ஆபரணங்களும் அடுத்தடுத்து வந்து அதனதன் இடத்தில் உட்கார்ந்தன. அந்த இடத்தைக் கடந்து செல்லும் பக்தர்களின் பேச்சொலியும், ஒரு சிலர் சற்று நின்று அவர் வரைவதை உற்றுப் பார்ப்பதும் அவரின் கவனத்தைக் கலைக்கவில்லை.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

எஸ்.ராஜம்
எஸ்.ராஜம்

அதிகபட்ச கவனத்துடன் உட்கூரையில் காணப்பட்ட ஓவியங்களை அச்சு அசலாகத் தன் ஓவியத்தில் மறுபதிவு செய்தார் அவர். வரைந்து வரைந்து ஒரு பென்சில் 'கரைந்து'விட்டால் பக்கத்திலிருக்கும் இளைஞரிடமிருந்து இன்னொன்று வாங்கிக்கொள்வார். ஒவ்வோர் ஓவியத்தின் அடியிலும் உட்கூரையில் இருப்பதுபோலவே தேவியின் பெயரை எழுதிக்கொள்வார்.

ஒவ்வோர் இரண்டு மணி நேரம் கடந்த பிறகும் இருவரும் கோயிலுக்கு வெளியே வந்து தெருமுனைக் கடையில் தேநீர் அருந்துவார்கள். கண்ணாடி டம்ளரில் டீ குடிக்க அவருக்கு மிகவும் பிடிக்கும். குடித்ததும், ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொள்வார். முடிந்ததும், கோயிலுக்குள் மறுபடி செல்வார். ஓவியம் வரைதல் தொடரும். நான்கு மணிக்கு அன்றைய தினத்தை முடித்துக்கொள்வார். இப்படி உட்கூரை மீதிருந்த 36 ஓவியங்களை வரைந்து முடிக்க அவருக்கு ஒரு வாரத்துக்கும்மேல் ஆனது.

அவர்... மிகச் சிறந்த பாடகராகவும் ஓவியராகவும் வாழ்ந்து 2010-ம் ஆண்டு மறைந்த எஸ்.ராஜம்.

புகைப்படம் எடுப்பார். சினிமாவில்ல் நடித்திருக்கிறார். பன்முகம்கொண்ட இந்த மகா கலைஞருக்கு இது நூற்றாண்டு வருடம். அன்று கோயிலில் அவருடன் இருந்த இளைஞர் ஜி.சி.சேகர், ராஜத்தின் இளைய சகோதரரின் மகன்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1

தேவியும் ராஜமும்: உட்கூரை ஓவியங்களின் மறுபதிவுக்குப் பின்னால்..!  #VikatanDiwaliMalar2019

மிகவும் எளிமையானவராக வாழ்ந்தவர் எஸ்.ராஜம். காவி நிற வேட்டி அல்லது லுங்கி அணிவார். வந்த வாழ்வையும், வளம்பெற்ற செல்வத்தையும் அவை தனக்கானவை அல்ல என்று கருதியவர். எளிதில் யாராலும் அணுகக் கூடியவராக இருந்தார். பேதம் பார்க்காமல் எவருக்கும் பாட்டுச் சொல்லிக் கொடுத்தார். சிக்கனமின்றி ஓவிய நுணுக்கங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்வார். எந்தவிதப் புகழுரைகளையும் பாராட்டு வார்த்தைகளையும் எதிர்பார்க்காமல் பாடிக்கொண்டும், பாடாத நேரத்தில் ஓவியம் வரைந்துகொண்டும், வரையாத நேரத்தில் எழுதிக்கொண்டும், எழுதாத பொழுதில் இசை கற்பித்துக்கொண்டும் இருந்த கர்மயோகி அவர்.

- ஓர் அரிதான கலைஞனின் தெரியாத பக்கங்களை நம் கண்முன்னே விரிக்கும் 'மகா கலைஞன் - எஸ்.ராஜம் 100' எனும் சிறப்புக் கட்டுரையை விகடன் தீபாவளி மலரில் வாசிக்கத் தவறாதீர்கள்.

> விகடன் தீபாவளி மலர் 2019... என்ன ஸ்பெஷல் > க்ளிக் செய்க > http://bit.ly/2BhbND1