Published:Updated:

பழைய கார் டயரில் புதுமைகள்... அசத்தும் மதுரை இளைஞன்!

"நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருள்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட், பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருட்களை செஞ்சிருக்கேன்."

குப்பை என நாம் தூக்கிப் போடும் பலவற்றையும் எடுத்து அவற்றுக்கு வேறு ஒரு கலைவடிவம் தந்து வண்ணமயமான, கண்கவரும் பொருட்களாக அவற்றை மாற்றித்தருகிறார் மதுரை மேலூரைச் சேர்ந்த உமர் ஃபருக்.

''மேலூர்ல இருந்து சிவேங்கை (சிவகங்கை) போற பாதையில இருக்கு மலம்பட்டி பாலம். அதுக்கு அடுத்தாப்புள்ள வலதுபக்கம் மண் பாதை வரும். உள்ள போனா நீங்க கேக்கிற இடம் வந்துரும் தம்பி'' என்று மதுரை மேலூர் பாசக்கார அண்ணன் ஒருவர் வழி சொல்ல அங்கே சென்றோம்.

nuf கிராஃப்ட்
nuf கிராஃப்ட்

'NUF கிராஃப்ட்’ என்ற உமர் ஃபரூக்கின் கலை மையத்துக்குள் நுழைந்தால் அந்த இடமே வண்ணங்களால் நிறைந்திருக்கிறது. சுவர்களில் உள்ள கிறுக்கல்கள்கூட பல்வேறு கற்பனை வடிவங்கள். கார் டயரால் செய்த சீட்டில் பயந்துகொண்டே உட்கார்ந்தோம். ஆனால் நினைத்ததுபோல் கலை மட்டும் இல்லாமல் அவர் செய்த பொருள்களில் உறுதியும் இருந்தது.

மேலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர்தான் உமர் ஃபரூக். ஆர்க்கிடெக்சர் படித்தவரான உமர் தன் கற்பனை கதவுகளை திறந்து தனக்கு பிடித்தமான புதிய விஷயங்களை செய்துவருகிறார்.
கிராஃப்ட்: உமர் ஃபரூக்.
கிராஃப்ட்: உமர் ஃபரூக்.

''மேலூர்ல பிசியான ஏரியா எங்க ஏரியாதான். மேலூர் சுத்துப்பட்டு கிராம மக்கள் எல்லாரும் எங்க ஏரியால இருக்க மார்க்கெட்லதான் காய்கறி வாங்க வருவாங்க. எங்க அப்பாவும் ஒரு காய்கறி வியாபாரிதான். அதனால கடைக்கு வர்ற பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிஞ்சது. இதனால் பலரையும் உணர முடிஞ்சது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொருத்தவங்களுக்கும் ஒவ்வொரு விஷயம் பிடிச்சுருக்கும். பொதுவா எல்லாருக்கும் சந்தோஷம் பிடிச்சுருக்கும். அதனால எல்லாரையும் சந்தோஷப்படுத்துற வேலையை செய்யணும்னு தோணுச்சு. நம்ம திறமைகளை வெச்சு மக்களை சந்தோஷப்படுத்தலாம்னு முடிவு செஞ்சு டயர்ல பெயின்ட்டிங் பண்ணி, விளையாட்டு சாமான்களாகவும், கலர்ஃபுல் காட்சிப் பொருளாவும் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

கிராஃப்ட்
கிராஃப்ட்

நான் படிச்ச பி.ஆர்க் படிப்புக்கும் நான் செய்ற விஷயத்துக்கும் ரெம்ப தூரம். ஆனா, கிரியேட்டிவிட்டியை அதிகம் புகுத்துற இந்த வேலையில எனக்கு மனநிம்மதி இருக்கும்.

ரோட்ல வேஸ்ட்டுனு போடுற பழைய டயர், கூல்ரிங்ஸ் பாட்டில்லயெல்லாம் மழை தண்ணி போய் தங்குறதால கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியானு பல நோய்கள் பரவுது. இதனை தடுக்கவும், ஒரு விழிப்புணர்வு கிரியேட் பண்ற நோக்கதுலயும் வேஸ்ட் பொருட்களை வச்சு நிறைய கலைப் பொருள்கள் செஞ்சுருக்கேன்.

Vikatan

நண்பர்கள் சப்போர்ட்ல கிடைச்ச டயர், பாட்டில்ஸ் பயன்படுத்தி வீட்டு உபயோகப் பொருட்களான சோஃபா, ஊஞ்சல், வாட்ச் ஸ்டாண்ட், டீ ஸ்டாண்ட் மற்றும் பூந்தொட்டி, மயில், வாத்து, கிளி, சேவல், முயல் என்று 50-க்கும் மேற்பட்ட பொருள்களை செஞ்சிருக்கேன்.

கிராஃப்ட்
கிராஃப்ட்

மக்களுக்கு நான் செஞ்ச பொருளைக் குறைஞ்ச விலைக்கு கொடுக்கிறேன். வேஸ்ட்டா வந்த பொருள்தானே இலவசமாக கொடுக்கலாமேன்னு சிலர் சொல்றாங்க. ஆனா ஒவ்வொரு பொருளையும் செய்றதுக்கு என்னோட பணம் மற்றும் நேரத்தை செலவு செஞ்சுதான் அதை அழகா உருவாக்குறேன். அதனால அதுக்கும் கொஞ்சம் மதிப்பளிக்கனும்னு நினைக்கிறேன். என்னுடைய அலுவலகத்தில் நிறைய பொருள் செஞ்சு மாடலுக்கு வச்சுருக்கேன். யார் வேணும்னாலும் வந்து பார்க்கலாம். கண்டிப்பா பொருள் வாங்கணும்னு அவசியம் இல்ல. இதைப்போல செய்யனும்ணு கேட்டா சொல்லிக் கொடுக்கவும் தயாரா இருக்கேன்" என்றார் உமர்.

வாழ்த்துகள் உமர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு