Published:Updated:

ஒளியில்லை, ஒலியுண்டு

ஒளியில்லை, ஒலியுண்டு
பிரீமியம் ஸ்டோரி
ஒளியில்லை, ஒலியுண்டு

“இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் வாசிக்க, கடந்த வருடம் எங்களுடைய பறை இசைக்குழுவுடன் வந்தேன்.

ஒளியில்லை, ஒலியுண்டு

“இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் வாசிக்க, கடந்த வருடம் எங்களுடைய பறை இசைக்குழுவுடன் வந்தேன்.

Published:Updated:
ஒளியில்லை, ஒலியுண்டு
பிரீமியம் ஸ்டோரி
ஒளியில்லை, ஒலியுண்டு

“பறை எங்கே வாசிப்பாங்க?”

“திருவிழாவுல” என்று சட்டென பதிலளிக் கிறார்கள் அந்தச் சிறுவர்கள்.இறப்புக்கு மட்டுமே வாசிக்கப்படும் கருவியாகப் பொதுச்சமூகத்தால் பார்க்கப்படும் ஓர் இசைக்கருவி, பார்வையற்ற அந்தச் சிறுவர்களுக்குக் கொண்டாட்டம் தருவதாக இருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நிகழ்வு ஒன்றில் வாசிப்பதற்காக சென்னை கோட்டூர்புரம், செயின்ட் லூயிஸ் பள்ளி மைதானத்தில் பயிற்சி எடுத்துக்கொள்கிறது 12 பேர் அடங்கிய அந்த மாணவர்கள் குழு. வெறும் மூன்று நாள்களில் அத்தனை அடவுகளுக்கும் அடிகளுக்கும் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். அத்தனையையும் அட்சரம், பிசிறு இல்லாமல் வாசிக்கிறார்கள். அனைவருமே பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள். அந்தப் பள்ளியிலேயே தங்கிப் படிக்கிறார்கள். மற்றபடி அவர்கள் அனைவருமே பார்வையற்றவர்கள் என்பது கொண்டாட்டமான அந்த இசைச் சூழலில் சிறு குறையாகக்கூடத் தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“ஒன்... டூ.... த்ரீ... ஃபோர்...’’ என்று அவர்களின் பறைப் பயிற்சியாளர் எழிலரசன் சொன்னதும், “தீம்கு தகுகு தகுகு தகு...” என அத்தனைபேரும் ஒரே சமயத்தில் இசைக்கத் தொடங்குகிறார்கள்.

ஒளியில்லை, ஒலியுண்டு
ஒளியில்லை, ஒலியுண்டு

“இந்தப் பள்ளியின் ஆண்டு விழாவில் வாசிக்க, கடந்த வருடம் எங்களுடைய பறை இசைக்குழுவுடன் வந்தேன். அப்போது பறை இசைச் சத்தத்தைக் கேட்டதுமே, `நாங்களும் இசைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று மாணவர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள். ஒரே ஒரு வகுப்பு மட்டுமே கற்றுக்கொடுக்க முடிந்தது. அதற்கடுத்து தேர்வு சமயம் என்பதால் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொடுக்க முடியவில்லை. மீண்டும் இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்து மூன்று வகுப்புகள் மட்டுமே தொடர்ச்சியாகக் கற்றுக்கொடுத்தேன்.ஐந்து தாள அடிகளை அரை மணி நேரத்தில் கற்றுக்கொண்டு வாசிக்கத் தொடங்கி விட்டார்கள்” என்று பெருமையுடன் பேசத் தொடங்குகிறார் எழிலரசன். பறை இசையின் சத்தத்தைக் கேட்டே இசைத்துவிடலாம் என்றாலும், அதற்கேற்றபடி அவர்களை ஆடவைப்பது எழிலரசனுக்குப் பெரிய சவாலாகவே இருந்திருக்கிறது. “எப்படி ஆடவெச்சீங்க?” என்று கேட்டோம்.

பிரமிக்கவைக்கும் வகையில் அங்கே அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. இரண்டு பக்க அணிகளிலுமிருந்த மாணவர்கள் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றிக்கொள்கிறார்கள். தாளக்கட்டுகளை வாய்ப்பாட்டாகச் சொல்லிக்கொண்டே நடன அடிகளை மெள்ள எடுத்து வைக்கத் தொடங்கு கிறார்கள். அதில் நளினமில்லை; நல்ல கொண்டாட்டம் இருந்தது; ஆடிய அத்தனை பேர் முகங்களிலும் சிரிப்பு இருந்தது.

“சொந்த ஊரு வந்தவாசி. பார்வை தெரியலைனு அம்மா அப்பா இங்கே படிக்க விட்டுவிட்டுப் போயிட்டாங்க. முதல்முறையா மேடையேறி ஆடப் போறேன். ஒரு மாதிரி படபடப்பா இருக்கு. நல்லா ஆடணுமே...” என்று புன்னகைக்கிறார் டேவிட்.

12-ம் வகுப்பு படிக்கும் இம்மானுவேல்தான் அந்தக் குழுவினர்களுக்கு லீடு எடுக்கிறார். எங்கோ அடிபட்டுக்கொண்ட காயம் வலது காலில் தென்படுகிறது. ரத்தம் உறைந்த காயத்தின் வலியைப் பொருட்படுத்தாமல் ஆடிக் கொண்டிருந்தார். “கண்ணு பார்த்தாத்தானே காயம் பெரிசாத் தெரியும்” என்று சிரித்தபடியே அவர் சொல்லவும் திகைத்து நின்றோம். அவரே தொடர்ந்தார்.

ஒளியில்லை, ஒலியுண்டு
ஒளியில்லை, ஒலியுண்டு

``எங்க ஸ்கூல்ல எல்லா வகையான இசையும் கற்றுக்கொடுப்பாங்க. போன வருஷம் ஆண்டுவிழா அப்போ எழில் மாஸ்டர் பறையடிச்சு ஆடின சத்தத்தைக் கேட்டதும் நாங்களே விருப்பப்பட்டு எங்க டீச்சர்கிட்ட பறை கத்துக்கணும்னு சொன்னோம்” என்றார். தனது எதிர்காலக் கனவை இம்மானுவேல் நம்மிடம் பகிர்ந்துகொண்டிருந்தபோதே இடைமறிக்கிறார் சுந்தர். “நான் வாசிக்கிறதை வாட்ஸ்அப்ல ஸ்டேட்டஸாவெச்சேன். என்னோட ஃபிரெண்ட் ரொம்ப பிடிச்சிருக்குனு சொன்னாங்க” என்றதும், “அந்த ஃபிரெண்டுக்காகத்தான் தினமும் லவ் ஸ்டேட்டஸும்வெக்கிறியாடா...” என்று பறை மேளத்தைக் கொட்டியபடி, `‘ஓ...’’வெனச் சத்தமெழுப்பி, கலாய்க்கிறார்கள் மற்ற மாணவர்கள்.

அவர்களை மாலை நேர டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினார் எழிலரசன். ``வகுப்புக்குப் போனாலும் கற்றுக்கொண்ட அடிகளையெல்லாம் மேஜை மேல தாளம் போட்டுக்கிட்டு இருப்பாங்க. இவங்களுக்கு பார்வை இல்லை என்பதைக் குறைபாடாக்கி யாரும் இவர்களை பாதிக்கப்பட்டவர்களாகப் பார்த்துடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கேன். அதனால்தான் இவர்களுக்கு தனிக்கவனம் கொடுத்தெல்லாம் ட்ரீட் செய்யாமல், மற்ற எல்லோரையும்போலவே நடத்துகிறேன்” என்றார்.

நான் விடைபெற்று நகரும்போது தூரத்தில் பறை அதிர்ந்தது; திசையும் அதிர்ந்தது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism