Published:Updated:

இந்தியா ஒளியாகிறது!

இந்தியா ஒளியாகிறது!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா ஒளியாகிறது!

ஒரு பக்கம் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தோட அச்சுறுத்தல் வேற... ஒளிஞ்சு ஒளிஞ்சு படங்கள் எடுத்தேன்.

இந்தியா ஒளியாகிறது!

ஒரு பக்கம் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தோட அச்சுறுத்தல் வேற... ஒளிஞ்சு ஒளிஞ்சு படங்கள் எடுத்தேன்.

Published:Updated:
இந்தியா ஒளியாகிறது!
பிரீமியம் ஸ்டோரி
இந்தியா ஒளியாகிறது!

மிழில் புகைப்படங்களுடன் பயணக்கதைகள் வெளிவருவது அரிது. ‘யாத்ரீகனின் பாதை’ புத்தகத்தின் மூலம் அப்படியொரு புதிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் புகைப்படக் கலைஞர் வினோத் பாலுச்சாமி. கடந்த 10 வருடங்களில் தன் பயணங்களின் வழியே கண்டடைந்த மனிதர்களையும், நிலக்காட்சிகளையும் புகைப்படங்களாகப் பதிவு செய்ததோடு அவற்றின் பின்னணிக் கதைகளையும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தியா ஒளியாகிறது!

“கோயம்புத்தூர்ல விஸ்காம் படிச்சுட்டு திருநெல்வேலி போயி பி.ஜி முடிச்சேன். வேலைக்குப் போகணும்னு தோணவே இல்லே. மேற்கொண்டு படிக்க மும்பை கிளம்பிட்டேன். ஆனா, அங்கே படிக்கிறதுக்கான வாய்ப்பு கிடைக்கல. திரும்ப தமிழகத்துக்கு வரவும் மனசில்லை. ஏதாவது வேலைக்குப் போயாகணுங்கிற நெருக்கடி. ஒரு ஏஜென்ஸியில சேர்ந்தேன். இந்திய ராணுவம் பத்தின ஒரு புத்தகத்துக்காக போட்டோ எடுக்கிற வேலை. நிறைய இடங்களுக்குப் பயணிச்சேன். ஒரு கட்டத்துல அந்த ஏஜென்ஸியை மூடிட்டாங்க. வேற வழியில்லாம திரும்பவும் சென்னைக்கு வந்துட்டேன். கொஞ்சநாள், தனியார் தொலைக்காட்சிகளில் வேலை பார்த்தேன். தங்க இடம் கிடைச்சா சென்னையை விட்டு நகரவே மாட்டோம்னு தோணுச்சு. வேலையை விட்டுட்டு, ரூமையும் காலி பண்ணிட்டு திரும்பவும் இலக்கில்லாம பயணிக்க ஆரம்பிச்சுட்டேன். புதிய புதிய மனிதர்கள், புதிய புதிய இடங்கள்னு நகர்ந்துகிட்டே இருந்தேன்.

இந்தியா ஒளியாகிறது!

ஒருநாள் இரவு, சென்னை நீலாங்கரைக் கடற்கரையில் முட்டையிட வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகளைத் தேடிப்போனோம். அந்த நள்ளிரவு அனுபவம், ஒடிசாவின் ஒரு கடற்கரை கிராமத்தை நோக்கிப் பயணிக்க வெச்சுது. அங்கே லட்சக்கணக்குல ஆமைகள் முட்டையிட வரும்னு நண்பர்கள் சொல்லியிருந்தாங்க. ஆனா, நினைச்ச மாதிரி அந்த நேரத்துல அவ்வளவு ஆமைகள் வரல. ஏமாற்றத்தோடு அங்கிருந்து கிளம்பி புவனேஸ்வருக்குப் போனேன். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியல. ‘`அங்கே, ‘டோங்கிரியா கோந்த்’னு பழங்குடி மக்கள் இருக்காங்க... அவங்களப் போய்ப் பார்”ன்னு போட்டோகிராபர் செந்தில் அண்ணா சொன்னார். அவங்களைத் தேட ஆரம்பிச்சேன்.

ஆதித்தாயின் அழகிய சிரிப்பு
ஆதித்தாயின் அழகிய சிரிப்பு

ஒடிசாவில் இருக்கிற நியாம்கிரி மலையில் அலுமினியத் தாதுக்களை வெட்டியெடுக்க வந்த நிறுவனத்தை ஓடஓட விரட்டினவங்க கோந்த் இன மக்கள். நான் போன நேரம், போராட்டம் உக்கிரமா நடந்துக்கிட்டிருந்துச்சு. அவங்ககூட தங்கியிருந்து புகைப்படங்கள் எடுக்குறது சாதாரண விஷயமா இல்லை. ஒரு பக்கம் அந்த கார்ப்பரேட் நிறுவனத்தோட அச்சுறுத்தல் வேற... ஒளிஞ்சு ஒளிஞ்சு படங்கள் எடுத்தேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உச்ச நீதிமன்றம், கோந்த் மக்களோட அனுமதி இல்லாம அங்கே சுரங்கம் அமைக்கக் கூடாதுன்னு தீர்ப்பு கொடுத்தது. ஆனா, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்தா இந்த மாதிரி எளிய மக்களால இயற்கை வளத்தையும், வாழ்வாதாரத்தையும் காப்பாத்திக்க முடியாது.

இந்தியா ஒளியாகிறது!

ஆமைகளைத் தேடி நான் தொடங்கின பயணம், இன்னொரு சூழலுக்கு அழைச்சுட்டுப் போன மாதிரி, ஒவ்வொரு பயணத்திலேயும் நான் சந்திச்ச மக்கள் புதுப்புதுச் சூழலை அறிமுகப்படுத்திக்கிட்டே இருந்தாங்க. அந்தப் பயணங்கள் கொடுத்த மொத்த அனுபவத்தையும் புத்தகமா பதிவு செஞ்சிருக்கேன்...” என்கிறார் வினோத் பாலுச்சாமி.

இந்தியா ஒளியாகிறது!

நியாம்கிரி - ஆம்குடா கிராமத்துக்கான ஒற்றையடிப் பாதை.

7 ஆண்டுகள் கழித்து மீண்டும் நியாம்கிரி சென்று, அந்தச் சிறுவனைத் தேடியடைந்து இந்தப் புகைப்படத்தைக் கொடுத்தேன். இது அவனது படம்தான் என்று அவனால் நம்பவே முடியவில்லை.

இந்தியா ஒளியாகிறது!

இயற்கையின் மக்கள் இவர்கள்!

இந்தியா ஒளியாகிறது!

மின்சாரமற்ற கிராமத்திலும் ஒளிர்கிறது கிரிக்கெட்!

இந்தியா ஒளியாகிறது!

உள்ளூர் திருவிழாவுக்காக வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றிக் குட்டிகளும், வேட்டைக்கார இளைஞர்களும்...