Published:Updated:

கண் திறக்காத பூனைக்குட்டி நான்! - ருக்மணி அம்மாள்

கண் திறக்காத பூனைக்குட்டி நான்! - ருக்மணி அம்மாள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
சி
லர் இறந்து போவதில்லை. ஏதேனும் ஒரு வடிவத் தில் வாழ்ந்துகொண்டே இருப்பார்கள். அந்தச் சிலரில் ஒருவர்- கல்கி!

எழுத்தின் சகல துறைகளிலும் முன்னத்தி ஏர் ஓட்டியவர். இசை விமரிசனம், நகைச்சுவைக் கட்டுரை, சிறுகதை, சரித்திர நாவல், பத்திரிகையியல்... எது இல்லை?

கல்கியின் துணைவியார், 88 வயது முத்துலட்சுமி என்கிற ருக்மணி அம்மாளிடம் பேசினோம்...

''எழுதப் படிக்கத் தெரியாம, கடிகாரத்துல மணி பார்க் கத் தெரியாம, கண் திறக்காத பூனைக்குட்டி மாதிரி இவரோட வந்து சேர்ந்தேன். எல்லாம் கொடுத்தார். 'பொம்மனாட்டி உசிர்ல பாதி புருஷன்’னு சொல்வா. என்னோட உசிர் பூராவுமே அவர்தான்.

சுதந்திரப் போராட்டத்தில் அப்பப்போ ஜெயிலுக்குப் போகும்போது ஜெயில்லேருந்து எனக்கு ரகசியமா கடிதாசு எழுதுவார். அதிலேயும் தேசபக்தியும் இலக்கிய வெறி யும்தான் இருக்கும். கடிதங்கள்லே கம்பராமாயணம் எல்லாம் எழுதி அனுப்புவார்.

காலப்போக்கில் நானே ஆனந்த விகடனில் 'அம்முவின் அதிர்ஷ்டம்’, 'பாகியின் துயரம்’ என்றெல்லாம் கதைகளும் சினிமா விமரிசனமும் எழுதும் அளவுக்கு ஆளாக்கியது அவர்தான்.

கண் திறக்காத பூனைக்குட்டி நான்! - ருக்மணி அம்மாள்

அவர் என்னைவிட்டுப் பிரிந்தது, அதீதமான இருளுக்குள் என்னைத் தள்ளிவிட்டது.

மூன்று வருடம் தொடர்ந்து அழுதுகொண்டிருந்தேன். அப்படிச் செய்தால் கண்ணில் நீர் வற்றிவிடும்போலும்! இமை தானாக மூடிக்கொள்ளாது. ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விட்டுக் கை விரல்களால் இமைகளைத் தள்ளி கண்களை மூடிக்கொள்வேன்.

'கண்ணிலும் இனிய நாதனை விட்டேன்
கடலலைபோல் அன்பை விட்டேன்
நிகரில்லாத அறிவுச் செல்வத்தை
ஒரு நொடியில் விட்டுவிட்டேன்
என்னைப்போல பாவியர்கள்
இருப்பதுண்டோ பூமிதனில்...’

- என்று துயரம் நிரம்பிய கோடி வார்த்தைகள் மனசுள் சுழன்று கொண்டிருக்கும்போது தூக்கம் எப்படி வரும்?''

'கணவர் இறந்துபோனபோது’ என்று சொல்வதில்லை ருக்மணி அம்மாள். 'அவர் என்னைவிட்டுப் பிரிஞ்சப்போ’ என்றுதான் சொல்கிறார். 44 வருடங்களுக்குப் பிறகும் கண வரை இவர் உணர்கிறார் என்பதற்குக் கண் ணோரம் கசியும் உப்பு நீர்த்துளிகளும், இன்ன மும் மங்கலமாக நெற்றியில் துலங்கும் குங்குமமே சாட்சி!

- ரமேஷ் வைத்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு