பிரீமியம் ஸ்டோரி

தமிழ் அறிஞர் வ.ரா

##~##
வாழ்க்கை என்ற போர்க்களத்தில் அங்குலம் அங்குலமாகப் போராடி முன்னேறி வந்தவர் வாசன். அவரைத் தட்டிக் கொடுக்க அன்று யாரும் முன் வரவில்லை. ஆனால், அவரை மட்டப்படுத்த முன் வந்தவர்கள் எத்தனை பேர்களோ? அவரைப் பற்றி ஆரம்பத்தில் நாலு நல்ல வார்த்தை சொல்ல ஈ, காக்கை கூடக் கிடையாது. யாரும் வாசனைத் தூக்கிவிடவில்லை. தன் கையே தனக்குதவி என்ற கொள் கையில் ஊறிப்போனவர் வாசன்.

வாசனுடைய உயர்வுக்குக் காரணம், அவருடைய தாயார்தான்! ''அம்மா வீட்டில் இல்லாமல் போனால் எனக்கு என் வீட்டிற்குப் போக மனமில்லை'' என்று வாசன் பச்சைக் குழந்தையைப்போல அபரிமிதமான வாஞ் சையோடு சொல்லும்போது, அவரைப் படம் பிடிக்க நீங்கள் எல்லோரும் ஆசைப்படுவீர்கள். தாயாரிடம் அவருக்கு இருக்கும் வாஞ்சை உணர்ச்சி அவ்வளவை யும் அவருடைய (குழந்தை) முகத் தில் அப்படியே காணலாம்.

'''தாய்’ என்று சினிமாப் படம் பிடிப்பதற்கு நல்ல கதையாகச் சொல்லுங்கள். அந்தப் படம் பிடித்ததும், நான் சினிமாத் தொழிலிலிருந்து விலகிக் கொள்கி றேன்'' என்று வாசன் என்னிடம் ஒரு சமயம் சொன்னபோது, எனது உள்ளம் கலங்கிக் கலகலத்துப் போனது.

எங்கள் ஆசிரியர்

அந்தக் காலத்தில் அவருக்கு நண்பரும் துணையாகவும் இருந் தவர் 'தேச பந்து’ என்ற பத்திரிகையை நடத்தி வந்த, காலம் சென்ற கிருஷ்ணசாமிப் பாவலர். வாசனை பாவலரோடுதான் பல காலும் பார்க்க முடியும்.

சம்பாஷணை காலத்தில், தான் கொண்டிருந்த கொள்கைக்கும் கட்சிக்கும் எதிரிடையாக இருந் தாலும் பிறர் சொல்வது அனுபவத் துக்குப் பொருந்தின உண்மையா யின், அதை ஒப்புக்கொள்ள வாசன் தயங்கினதே இல்லை. அது மட்டுமல்ல, அந்த உண் மையை எடுத்துக் காண்பித்தவரை அப்பொழுதே கருமித்தனமில்லாமல் பாராட்டுவார். தமக் குத் தெரியாததை மற்றவர் கண்டு பிடித்துவிட்டாரே என்று சிறிதும் பொறாமைப்படமாட்டார்.

ஆனந்த விகடனுக்கு சொந்த அச்சுக்கூடம் வாங்க வாசனிடம் போதிய பணமில்லாமல் இருந்தது. உடைந்த அச்சுயந்திரம் விலைக்கு வந்தது. சரியானபடி 'ரீபில்ட்’ செய்தால், அது நன்றாக உழைக்கும் என்று நிபுணர்கள் சொன்னார்கள். பத்திரிகைத் தொழிலை அப்போதுதான் ஆரம்பித்திருந்த வாசன், அச்சுத் தொழிலில் அனுபவமில்லாத வாசன், நிபுணர்களின் வார்த்தையை நம்பி அந்த மிஷினை விலைக்கு வாங்கினார். அது உழைத்த உழைப்பு பூரணமாகச் சொல்லலாம். உடைந்த யந்திரத்தை வாங்கலாம் என்ற வாசனின் துணிச்சலையும் நம்பிக்கையையும் பாருங்கள். அந் தத் துணிவுக்கும் தன்னம்பிக்கைக்கும்தான் வாசன் என்று பெயர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு