Published:Updated:

சினிமா விமர்சனம் - மலையூர் மம்பட்டியான்

சினிமா விமர்சனம் - மலையூர் மம்பட்டியான்

பிரீமியம் ஸ்டோரி
சினிமா விமர்சனம் - மலையூர் மம்பட்டியான்

ப்ளஸ் (+) பாயின்ட்

##~##

தன் தாய்- தந்தையைத் தீயிட்டுக் கொன்றது பண்ணை யார்தான் என்பதை அறிந்த கையோடு, மம்பட்டியான் தியாக ராஜனைப் பொங்கல் திருவிழா வுக்கு அனுப்பி, பண்ணையார் கும்பலை துவம்சம் பண்ண வைத்து, க்ளைமாக்ஸ் விறு விறுப்பை முதல் ஷெட்யூலிலேயே முடித்துவிட்டார் டைரக்டர்.

மணப்பெண் சரிதாவிடமி ருந்து பறித்த தாலியை அவரிடமே திருப்பிக் கொடுத்து, ''இந்தா... இதை உன்னை விட்டுட்டு ஓடிப் போறவன் கையிலே கொடுத்துக் கட்டிக்காதே! உன்னை வச்சுப் பாதுகாக்கறவன்கிட்டே கொடுத்து கட்டிக்கோ!'' என்று தியாகராஜன் கூறுவது ஆழம் நிறைந்த இடம்.

''எனக்குப் பாதுகாப்பா இல் லாம ஓடி வந்துட்டியே'' என்று கண்ணகியாகச் சீறும்போதும், ''மம்பட்டியானா கற்பழிச்சான்?'' என்று கேட்டுச் சிலிர்த்தெழும் போதும், சரிதா நடிக்கவில்லை \ அவர் கண்கள் நடிக்கின்றன; உதடுகள் துடித்து உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன.

கொள்ளைக்காரன் மம்பட்டியானின் பலத்துக்குச் சமபலமாக டி.எஸ்.பி. ஜெய்சங்கரை மோத விட்டு, படம் முழுக்கக் காவல் துறையின் சுறுசுறுப்பை உயர்த்திக் காட்டியிருக்கும் டைரக்டர் ராஜ சேகருக்கு ஸ்பெஷல் பாராட்டு!

படத்திற்குப் பக்கபலமாக இருப்பவர்: சண்டைக் காட்சிகளில் பொறி பறக்க வைத்திருக்கும் ஜூடோ ரத்தினம்.

சினிமா விமர்சனம் - மலையூர் மம்பட்டியான்

மைனஸ் (-) பாயின்ட்

கடைசியில் மம்பட்டியான் இறக்கத்தான் வேண்டும் என்கிற சித்தாந்தத்தில் பழுதில்லை. அதற் காக, அவனுக்கு அவ்வப்போது 'க்ளூ’ கொடுத்துக்கொண்டிருந்த வனைவிட்டே அவனைக் கொன் றிருக்கவேண்டுமா என்பதுதான் கேள்வி. போலீஸின் கையில் மம் பட்டியான் சிக்கக்கூடாது என்ற பிடிவாதமா?

மம்பட்டியானின் பெயரைக் கெடுக்க, போலி மம்பட்டியான் ஒருவன் நடமாடுகிறான் என்ற உண்மையை நேருக்குநேர் கண் டும், சரிதா ஏன் அதை உடனே தியாகராஜனிடம் சொல்ல வில்லை என்பது விடுவிக்கப்படாத புதிர்!

தனது கூட்டாளி, போலீஸ் ஸ்டேஷனில் அகப்பட்டுக் கொண்டு, சித்ரவதைப்பட்டுத் தற்கொலை செய்துகொண்டதைப் பற்றி மம்பட்டியான் தியாகராஜன் ஒன்றுமே கவலைப்படாததன் மர்மம் என்னவோ?

'நானும் ஒரு சிலுக்கு டான்ஸ் போட்டிருக்கேன்’ என்று தயா ரிப்பாளர் விநியோகஸ்தர்களிடம் காட்டியிருக்கலாம்; டைரக்டரும் வளைந்து கொடுத்திருக்கலாம். ஆனால், படத்தைப் பொறுத்த வரை வேஸ்ட்!

கவுண்டமணிக்கு ஒரு வார்த்தை: இனிமேலாவது கொஞ்சம் டீஸன்ட்டான ரோலில் நடியுங்கள். உங்கள்பெயர் 'சபல மணி’ என்று மாறிவிடக்கூடிய அபாயம் தெரிகிறது!

சரிதாவுக்கு ஒரு வார்த்தை: சமீபத்தில் எங்கேயாவது 'வெயிட்’ பார்த்தீங்களா? உங்க எடை எக்கச்சக்கமா கூடிவிட்ட மாதிரி தெரியுதே!

- விகடன் விமரிசனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு