பிரீமியம் ஸ்டோரி

வாலாட்ட முடியுமா...

தலையங்கம்

மிழக மக்கள் மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும், 'டிசம்பர் ஆறாம் தேதி எந்தவித விபரீதமும் நடக்காமல் அமைதியாகப் போகவேண்டுமே, ஆண்டவா’ என்று பரிதவித்துக்கொண்டிருந்தது உண்மை.

நாடு பிரிவினையைச் சந்தித்த நேரத்தில் ஏற்பட்ட மதக்கலவரங்களின்போது கூட அமைதி காத்த பகுதி தமிழகம். மத வேறுபாடுகளுக்கு இடம் தராத பூமி இது! இப்போது இங்கே அமைதியைக் குலைக்க, பாகிஸ்தான் உளவாளிகள் கைவரிசை காட்டத் திட்டம் போடுகிறார்கள் என்பது பெரும் வருத்தத்தைத் தரும் விஷயம்!

சாதிப் பிரச்னை ஆனாலும், மதப் பிரச்னை ஆனாலும், அதைப் பயன்படுத்தி, அதில் ஒன்றுமறியா பொதுமக்களை வீழ்த்தி, சுயநலத் தீ மூட்டி கோரத்தாண்டவம் ஆடுபவர்கள் தீவிரவாதிகள். இவர்கள்தான் வெளிநாட்டு உளவாளிகளுக்கு நம் கதவைத் திறந்துவிடுபவர்கள். இவர்களுக்கு இடம் கொடுப்பது, ஜனநாயகப் பயி ருக்கு நடுவே களைகள் செழிப்பதற்கு வழிசெய்வது போலாகிவிடும். இதை முதலில் நாம் உணரவேண்டும்!

'சாதி, மத வேற்றுமைகளால் எங்களைப் பிளவுபடுத்த முடியாது’ என்று மக்கள் தங்கள் கைகளைப் பிணைத்துக்கொண்டு, ஒற்றுமையோடு ஒரு மனித வேலி அமைத்துக்கொண்டால் -

தீவிரவாதிகள்தான் விளையாட முடியுமா?

வெளிநாட்டு உளவாளிகள்தான் வாலாட்ட முடியுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு